Saturday, December 17, 2022

நம் தொழுகை எந்த வகையைச் சேர்ந்தது?

நினைவூட்டல்

நம் தொழுகை எந்த வகையைச் சேர்ந்தது?
??????????????????????????????????????????

ذكر ابن القيم - رحمه الله - في كتابه : ( الوابل الصيب ) 
أن الناس في الصلاة على خمسة أقسام :
இமாம் இப்னுல் கய்யிம் ( ரஹ்) அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்      
* معاقب :
( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை
அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
அவனைத் தண்டிப்பான்.
* محاسب:
( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை
அந்தத்தொழுகையைப் பற்றி 
அல்லாஹ் விசாரிப்பான்.

* مكفرٌ عنه:
( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்கு பரிகாரமாகும் தொழுகை
 அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
 அவனின் பாவங்களை மன்னிப்பான்
* مثاب:
( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை
 அந்தத் தொழுகையின் காரணமாக 
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான்
* مقرَّب
( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ் வின் பால்  நெருக்கமாக்கும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.
*
முதல்வகைதொழுகை.
ஒருவன் தொழுகிறான் ,ஆனால் ஒழுங்காக முழுமையாக ஒழுசெய்வதிலோ, தொழுகையுடைய,பர்லு,வாஜிபு,சுன்னத் போன்றவைகளை சரிவர செய்யவேண்டும் என்ற 
கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகிறான்
இத்தகைய தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்
*
இரண்டாவது வகை.
  ஒருவன் தொழுகை நிறைவதற்குத் தேவையான பர்லு ,வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான்,

 ஆனால் தக்பீர் கட்டி தொழுகையில் நுழைந்ததிலிருந்து  அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறி தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் எனத் தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கியவாரே தொழுது முடிக்கிறான்.

தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.

மூன்றாவது வகை:
தொழுகையின் அனைத்து ஷர்த்துகளையும்  முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது  முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல்  தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே தொழுது முடிக்கிறான்.
இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.
*

நான்காவது வகை:
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழு கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் 
அளப்பறிய நன்மைகளை வழங்குகிறான்.

ஐந்தாவது வகை: மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்,சுன்னத்துகளையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லா வின்முன் அல்லாஹ் இருப்பதை போன்ற உள்ளச்சத்துடன் தொழுகிறான்.

இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்த தொழுகைக்குமுள்ள வித்தியாசம்.
அதில்  உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும்அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு  இருக்காது.

ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப் தன் முன்னால் இருப்பதை  உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுகவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது.
இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை.
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ் வின் பால் அவனை நெருங்கச்செய்யும்.

சொல்லுங்கள் சகோதரர்களே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை?

 வாருங்கள்
நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம்.
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி,பாஜில் மன்பஈ,தேவ்பந்தி

Sunday, November 20, 2022

நாற்பது வயதை கடந்தவரா?

நீங்கள் #நாற்பது வயதில் இருந்தால், அல்லது நாற்பதை நெருங்கிவிட்டால், அல்லது அதற்கு சற்று அதிகமாக இருந்தால்,

 திருக்குர்ஆன் ஒரு சிறப்பு பிரார்த்தனையுடன் தனிப்படுத்திய ஒரே வயது நாற்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்:
 حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ  اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ

 இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு #நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: 
“என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக!  நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன்.  கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.”
(அல்குர்ஆன் : 46:15)

இது  தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு  பிரார்த்தனை,
 இதில் கடந்த காலங்களில் அல்லாஹ் அருளியவைகளுக்கு  நன்றி செலுத்துதல், வருங்காலம் எப்படி அமைய வேண்டும்  என்பதற்காக ஒரு பிரார்த்தனை மற்றும் இந்த மார்க்கத்தின் மீது தனக்குள்ள உறுதிப்பாட்டை உறுதியாக்குவது ஆகியவை அடங்கும்.

இந்தப் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்

 குறிப்பாக நாற்பதை எட்டியவர்களே இந்த துஆ உங்கள் அமல்களை ஏற்றுக்கொள்வதற்கு காரணமாகும்.
எனவே தொடர்ந்து இந்த துஆவை ஓதி வாருங்கள் 

இந்த வசனத்தின் தொடரில் அல்லாஹ் சொல்கிறான்:

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ نَـتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَـتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ‌  وَعْدَ الصِّدْقِ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏
இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.  அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 46:16

எவர் ​​நாற்பது வயதிற்குள் நுழைகிறாரோ அவர் மறுமைக்கான கொள்முதல் செய்யும் சந்தைகளில் நுழைந்துவிட்டார்.

நாற்பது வயதுக்காரர்களே! மறுமையின் வசிப்பிடத்திற்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அறுபதுகளுக்கும் எழுபதுகளுக்கும் இடைப்பட்ட காலம் மரணத்துடன் நடக்கும் போராட்ட காலம்-(இப்னு ஹிப்பான்)

மற்றொரு
 அறிவிப்பில்: எனது உம்மத்தில்  எழுபது வயதுடையவர்கள் குறைவாக இருப்பார்கள் (தப்ரானி)

நாற்பது அல்லது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்,  தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கடந்துவிட்டோம்  குறைவான காலமே மீதம் இருக்கிறது என்பதை உணரவேண்டும் 

கடந்த காலம் எப்படி போனது?
கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்தது போல் இருக்கிறது 
எஞ்சியிருப்பதும் கடந்ததை விடக் குறைவாக இருந்தால், அதுவும் ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் கடந்து சென்று விடும்
,

நாற்பதை எட்டிய ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
!
அதாவது, நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, நாற்பது கோடைகாலம், நாற்பது குளிர்காலம், நாற்பது வசந்தகாலம்  நாற்பது இலையுதிர் காலம்.

நாற்பது வயதில், நடுத்தர வயது  தொடங்குகிறது,

இவ்வேளை கடுமையான கேள்வி மனிதனின் முன் தோன்றது:

கடந்த காலங்களில் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் என்ன சேகரித்தீர்கள்?

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?

உங்கள் இறைவனுடனான உறவில் நீங்கள் என்ன  முன்னேற்றம் கண்டீர்கள்?
 
எழுபது எண்பது வயதுடைய மக்களைக் கேளுங்கள், அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்: 
அக்காலம் ஒரு கனவு போல கடந்துவிட்டது, நேற்று நாங்கள் சிறுவர்களாக விளையாடினோம், இன்று அறுவடை செய்யும் நேரம் நெருங்கிவிட்டது, இறைவனை சந்திக்கும் நேரம் நெருங்குகிறது.

அதாவது, நாற்பது, ஐம்பது வயதைத் தாண்டியவர்களின்  தலைமுறைச் சேர்ந்தவர்கள் , பெரும்பாலும் பாதி பேர் மண்ணுக்கு அடியில் இருக்கிறார்கள்

ஒரு நபரின் சகாக்கள் இறக்கும் போது, ​​​​அவரது வயதில் உள்ளவர்கள்,  அவரின் இறுதிச் சடங்கில் சொல்வார்கள்:

  நீங்கள் முந்திக்கொண்டீர், நாங்கள் பின்னால் உங்களுடன் வந்து சேருபவர்கள்"என்று.
ஆனால் அதன் பின் சொன்னதை மறந்துவிட்டு

ஒவ்வொருவரும் அவரவர் வருமானத்தைப் பெருக்குவதில் மும்முரமாக, 
விதவிதமான
 உணவு  உண்பதிலும் மற்றும்  வாழ்வாதாரத்தைத் தேடுவதில் பிஸியாக குழந்தைகளுடன், திருமணத்தில் பிஸியாக, உலகத்துடன், வியாபாரத்தில், இரவுகளில், பயணங்களில், பிஸியாக இருக்கிறார்கள்.
 அவரது வயது ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள்

ஒரு நபர் நாற்பதை எட்டினால், அவர் மறுஉலகப் பயணத்திற்குத் தயாராக வேண்டும்.

அதனால் இவ்வுலகில் வாழ்கின்ற காலத்தில் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல.
மாறாக நாம் அந்த சுகபோகத்திலேயே மூழ்கி மறுமையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் 
நாற்பது வயது என்பது இறைவன் உங்களுக்கு அனுப்பிய செய்தி:
 "அடியானே! என்னை சந்திக்கும் நாள் நெருங்கிவிட்டது அதற்கு நீ தயாரா?"

#அல்_நாபுல்சியின் முத்துக்களிலிருந்து 
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

Wednesday, November 2, 2022

ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்
-----
ஒரு பெரியவர் சொல்கிறார்:
நான் மஸ்ஜிதுகள் நபவியில் பஜ்ர் 
  தொழுதுவிட்டு கிப்லாவை முன்னோக்கி  அமைந்திருந்தேன் 

அப்போது அங்கே ஒருவர் 60 வயதுக்கு மேல் இருக்கும் என் முன்னே வந்து அமர்ந்தார் 

 உங்களுடன் சில நிமிடங்கள் பேசலாமா என்றார்.
 தாரளமாக என்றேன் 
 என்னிடத்தில் ஒருவர் சில விஷயங்களை சொன்னார் அது எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது 

அதையே உங்களுக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன்
 நீங்கள் கேட்கிறீர்களா என்றார் 
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! சொல்லுங்கள் என்றேன்.

  நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  
"யார் என்மீது ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்தை அருளுகிறான்( முஸ்லிம்) எனச் சொல்கிறார்களே"
அல்லாஹ் அருளும் ஸலவாத் என்னவென்று தெரியுமா? 
 நபிகளார் மீது ஸலவாத் சொல்வதின் பலன் என்னவென்று தெரியுமா? என்றவர் ,
பலன் என்னவென்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது
அல்லாஹ் சொல்கிறான்
هُوَ الَّذِىْ يُصَلِّىْ عَلَيْكُمْ وَمَلٰٓٮِٕكَتُهٗ لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ  وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا‏
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 33:43)
 
அல்லாஹ்  சொல்லும் ஸலவாத் என்பது இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டு செல்வதாகும்
#அனைத்து நெருக்கடியும்
#அனைத்து 
சிரமங்களும்
#அனைத்துத் 
துன்பங்களும்
#அனைத்து
பாவங்களும்
#இருளாகும்
இவைகளில் ஏதேனும் ஒன்றினால் நீங்கள் பாதிக்கப்படும் போது அந்த இருளிலிருந்து வெளியேறும் வரை நபியவர்களின் மீது ஸலவாத் சொல்லுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள்

நபித்தோழர்  உபை பின் கஅப் (ரழி) அவர்கள் நபியவர்களிடம்
 எனது துஆ வில் அதிகமாக உங்கள் மீது ஸலவாத் சொல்கிறேன் எத்தனை தடவை சொல்ல வேண்டும்? எனக் கேட்டார்
நீ விரும்பு அளவு
என்றார்கள் நபியவர்கள்.
நான்கில் ஒரு பங்கு?
என்றார் நபித்தோழர்
இன்னும் அதிகப்படுத்தினால் உனக்கு பலன் தரும் என்றார்கள்
 நபியவர்கள்.
அரைவாசி? என்றார்
நபித்தோழர்.

மேலும்  அதிகப்படுத்தினால் உனக்கு பலன் தரும் என்றார்கள்
 நபியவர்கள்

மூன்றில் இரண்டு பங்கு? என்றார் நபித்தோழர்
நீ விரும்பினால் இன்னும் அதிகரிக்கலாம்
அது உனக்குப் பலன் தரும் என்றார்கள் நபியவர்கள்
أَجْعَلُ لَكَ صَلَاتِي كُلَّهَا
அப்படியானால் என் துஆ முழுவதையும்
உங்களுக்காக ஆக்கிக் கொள்ளவா?
என ஆர்வத்துடன் கேட்டார் உபை பின் 
கஅப்(ரழி)
قَالَ : إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ .رواه الترمذي (2457)

நபியவர்கள்  சொன்னார்கள் "அவ்வாறு நீ செய்தால் உனது கவலைகள் நீங்கி உன் பாவங்கள் மன்னிக்கப்படும்"

இந்த  ஹதீஸை சொன்ன அந்த மனிதர் சொன்னார்
உங்களுக்கு ஒரு துன்பம் வரும்பொழுது
அந்த துன்பம் நீங்கும் வரை
 நபியவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள் கவலை நீங்கும் என்றார்

நான் மனம் நெகிழ்ந்தவனாக, எனக்கு மிகவும் பயனுள்ள தகவலைத் தந்தீர்கள்.அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிவழங்குவானாக எனக் கூறி அவருக்காக துஆ செய்தேன்.

அவர், என்னுடைய ரப்பே! இந்த பேச்சை உனக்காக பேசினேன் 
என்னுடைய நன்மைகளின் பட்டியலில் பதிவு செய்யப்படுவதற்காக
எனச் சொல்லிய வண்ணம் சென்றுவிட்டார்.

இந்தத் தகவலை பதிவு செய்யும் பெரியவர் சொல்கிறார்:
அவர் இன்னோருவரிடமிருந்து கேட்டதை என்னிடம் பகிர்ந்து நன்மையை சம்பாதித்துக் கொண்டார்
நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்
எனக்கு அல்லாஹ் நற்கூலி தருவான் என ஆதரவு வைக்கிறேன்
நீங்களும் பயன் பெற்று மற்றவர்களுக்கும் பகிருங்கள்
 --அரபு இணையத்திலிருந்து
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

Tuesday, November 1, 2022

குழப்பம் செய்வோருக்கு இடங்கொடுககாதீர்

குழப்பம் செய்வோருக்கு இடங்கொடுக்காதீர்
-------=--------
உங்களைப்பற்றி இன்னார் இப்படி சொல்கிறாரே 
என்று ஒருவர் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களிடம் சொன்னார்.
#அவர் என்னைப்பற்றி சொன்னது  உண்மையாக இருந்தால்

நீ அவரைப்பற்றி என்னிடம் கோள்மூட்டும் குற்றவாளியாகிறாய்.

அவர் என்னைப்பற்றி அவ்வாறு சொல்லாமலிருந்தால்
நீ ஒரு பொய்யன் 
என்றார்கள் இமாம் .
வெட்கப்பட்டு அங்கே இருந்து அவர் நகர்ந்தார்.
--------------------------------------------------------------

உங்களைப் பற்றி இன்னார் இப்படி ஒரு குறை சொல்கிறார் என இமாம் அலி பின் ஹஸன்(ரஹ்) அவர்களிடம் ஒருவர் சொன்னார்.
அதற்கு  இமாம் அவர்கள்,
அவர் சொன்னது போல் என்னிடம் அந்த குறை இருந்தால்  அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!
அவர் சொல்லும் குறை  என்னிடம் இல்லையென்றால் குறை சொன்ன அவரை அல்லாஹ் 
மன்னிப்பானாக!
----------------------------------------
அறிஞர்  வஹப் பின் முனப்பஹ்(ரஹ்) அவர்களிடம் உங்களை அங்கு ஒருவர் ஏசிக்கொண்டுருக்கிறார்
என்றார்.
என்ன சகோதரரே! இன்று ஷைத்தானுக்கு உன்னைத்தவிர  வேறு ஆள் கிடைக்கவில்லையோ?
என்றார் அறிஞர்.
   --------------
ஒரு ஞானியிடம் மற்றொருவரைப்பற்றி ஒருவர் கோள் சொன்னார்.
அதற்கு அந்த ஞானி, இன்று நீ மூன்று தவறுகளை செய்துள்ளாய்.
எனக்கும் என் சகோதரனுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்த முயல்கிறாய்.
அமைதியாக இருக்கும் என் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறாய்.
உன்னின் மீது நான் வைத்திருந்த நன் மதிப்பை குலைத்து விட்டாய்.

#இதுதான் ஆன்றோர்களின்  பண்பு. 
குழப்பம் செய்யவோருக்கு இடங்கொடுக்க மாட்டார்கள்
---கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி
மீள்

Saturday, October 1, 2022

யாரோடு அதிகமாக பழகுகிறோமோ அவர்களின் தாக்கம் ஏற்படும்

யாரோடு அதிகமாக பழகுகிறோமோ 
   அவர்களின்  தாக்கம் நம் 
உள்ளத்தில் ஏற்படும் 

#வியாபாரிகளுடன் பழகினால் வியாபாரத்தில் நமக்கு ஈர்ப்பு ஏற்பட்டு நாமும் வியாபாரியாக வேண்டும் என ஆசை ஏற்படும் 

மது மாது என சிற்றின்பங்களில் மூழ்கி இருக்கும் பாவிகளுடன்   தொடர்பை நீட்டித்தால்  அதுபோன்ற சிற்றின்பங்களை அணுபவிக்க வேண்டும் என ஆசை ஏற்படும் 

இறையச்சமிக்க நல்லடியார்களுடன் நெருக்கமாக பழகும்போது போது வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு ஏற்படும்.

#ஒருவனுக்குச்  சுற்றுச் சூழல்தான் பெரிய பிரச்சினை

#يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏
#ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; 
எனக் கூறும் அல்லாஹ் அடுத்துக் கூறுகிறான்

#உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
(அல்குர்ஆன் : 9:119)

#நல்லோர்களுடன் இருப்பதே
ஒரு வணக்கம் தான்.
___ #அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி
--+ கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி

Thursday, September 15, 2022

நாம் எந்த வகை தொழுகையாளிகள்?

#நாம்_எந்த_வகை_தொழுகையாளிகள்???

ذكر ابن القيم - رحمه الله - في كتابه : ( الوابل الصيب ) أن الناس في الصلاة على خمسة أقسام :
இமாம் இப்னுல் கய்யிம் ( ரஹ்) அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்கள் 
* معاقب :
( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை

அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
அவனைத் தண்டிப்பான்.
* محاسب:
( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை

 மறுமையில் அந்தத் தொழுகையைப் பற்றி 
அல்லாஹ் விசாரிப்பான்.

* مكفرٌ عنه:
( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்குப் பரிகாரமாகும் தொழுகை

 அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
 அவனின் பாவங்களை மன்னிப்பான்
* مثاب:
( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை

 அந்தத் தொழுகையின் காரணமாக 
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான்
* مقرَّب
( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ் வின் பால்  நெருக்கமாக்கும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.
*
#முதல்வகைதொழுகை.

ஒருவன் தொழுகிறான் ,ஆனால் ஒழுங்காக முழுமையாக ஒழுசெய்வதிலோ, தொழுகையுடைய,பர்லு,வாஜிபு,சுன்னத் போன்றவைகளை சரிவர செய்யவேண்டும் என்ற கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகிறான்
இத்தகைய தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்
*
#இரண்டாவது வகை.
  ஒருவன் தொழுகை நிறைவதற்குத் தேவையான பர்லு ,வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான், ஆனால் தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்ததிலிருந்து  அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறி தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் எனத் தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கிய வாரே தொழுது முடிக்கிறான்.
தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.

#மூன்றாவது வகை:

தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்  முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது  முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல்  தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே 
தொழுது முடிக்கிறான்.
இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.
*

#நான்காவது வகை:

தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழுக்கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் 
அளப்பறிய நன்மைகளை வழங்குகிறான்.

#ஐந்தாவது வகை: 

மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்,சுன்னத்துகளையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லா வின்முன் அல்லாஹ் இருப்பதை போன்ற உள்ளச்சத்துடன் தொழுகிறான்.
இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்த தொழுகைக்குமுள்ள வித்தியாசம்.
அதில்  உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும்அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு  இருக்காது.

ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப் தன் முன்னால் இருப்பதை  உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுகவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது.
இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை.
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ் வின் பால்  நெருங்கச்செய்யும்.

சொல்லுங்கள் சகோதரர்களே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை?

 வாருங்கள்
நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம Kaniyur Ismail Najee Manbayee
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி,பாஜில் மன்பஈ,தேவ்பந்தி

Monday, August 29, 2022

தந்தையானாலும் தம்பதியர் சண்டையில் தலையிடாதீர்

தந்தையே ஆனாலும் தம்பதியர் சண்டையில் தலையிடாதீர்.
----------
அன்னை பாத்திமா (ரழி)அவர்கள் வீட்டிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.
அலீ(ரழி) அவர்கள் எங்கே? எனக்கேட்க
எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனையில் என்னை கோப்படுத்திவிட்டார்.
பின் மதிய ஓய்வெடுக்காமல் வெளியே சென்றுவிட்டார் என்றார் பாத்திமா(ரழி)

ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் எங்கே எனத்தேடுமாறு ஒரு நபரை அனுப்ப ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் பள்ளிவாசலில்  படுத்திருப்பாக தகவல் தந்தார்.

நபியவர்கள் அங்கே சென்றார்கள்

 மேலாடை நழுவி தரையில் கிடக்க ஒருக்களித்து தரையில் ஹஜ்ரத் அலி(ரழி) படுத்திருந்தார்கள்.
நபியவர்கள் ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் உடம்பில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறே 
யா அபா துராப்! கும்
#மண்ணின்_மைந்தரே எழுந்திரும் என்றார்கள்.
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் பின்னாளில் தன்னை அபூதுராப் என அழைப்பதை பெரிதும் விரும்பினார்கள்(புகாரி6280)

இந்த சம்பவத்தில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

1.மதியம் ஓய்வெடுக்கும் வேளையில் மகள் வீட்டிற்கு தந்தை முன்னறிவிப்பின்றி செல்லலாம்

2.மகளைச் சந்திக்க தந்தைக்கு கணவனின் அனுமதி தேவையில்லை.

3.மனைவி கோபமடைந்ததை அறிந்தவுடன் மேலும் விவாதம் செய்து பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் கோபம் தீர்ந்தவுடன் பேசலாம் என அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றது ஸய்யித்னா அலி அவர்களின் சகிப்புத்தன்மையைக் காட்டுவதுடன் மனைவி கோபமடைந்தால் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகவும் இருக்கிறது.

 4.மதியம் வேளையில் பள்ளிவாசலில் படுத்துறங்கலாம்.

5. எனக்கும் கணவருக்குமிடையே பிரச்சினை என்று பாத்திமா அவர்கள் சொன்னபோது என்ன பிரச்சனை  என மகளிடமோ மருமகனான அலி(ரழி) அவர்களிடமோ நபியவர்கள் கேட்கவில்லை.
இதிலிருந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனையில் பெற்றோர் வலியச் சென்று நுழைவது 
பண்பல்ல, நபிவழிக்கு மாற்றம் என்று புரிகிறது.

6.மகளை கோபப்படுத்திய நிலையிலும் மறுமகன்  ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணை பாசமுடன் தட்டிவிட்டது,
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் மீது நபியவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.

7.ஹஜரத் அலி அவர்களை மண்ணின் மைந்தா என செல்லப் பெயர் வைத்து அழைத்ததும் அதை பெருமிதத்துடன் ஹஜ்ரத் அலிஅவர்கள் ஏற்றுக் கொண்டதிலிருந்து நமக்குப் பிரியமானவர்களை அவர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் செல்லப் பெயர் வைத்து அழைப்பது விரும்பத்தக்கது எனத் தெளிவாகிறது. 
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

Friday, August 26, 2022

ஹக், ஸித்க் வித்தியாசம் என்ன?

மீள் 
ஹக்,حق சித்க் صدق  என்ன வித்தியாசம்?
******************-*----******
கூத்தாநல்லூர் மதரஸா மன்பவுல் உலா வில் நான்காவது ஜும்ரா ஓதினேன்.அங்கு கண்ணியத்திற்குறிய என் உஸ்தாத் பெருந்தகை கம்பம் அப்துல் கனி ஹஜரத் அவர்களிடம்  شرح  التهديب
என்ற மன்திக் (தர்க்கக் கலை)கிதாப் வகுப்பில்

ஹக் ,ஸித்க் இரண்டிற்கும் உண்மை என்று பொருள் கொள்கிறோம்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
எனக் கேட்டேன்.
அதற்கு  அவர்கள் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்கள்.

    உன்னை பெரிய ஹஜரத் அழைத்து அப்துல் கனிஹஜரத் அறையில் இருக்கிறாரா  பார்த்து வா என்கிறார்.
நீ வருகிறாய்.

என் அறையின் கதவு சாத்தியிருக்கிறது
 எனது   காலணி வெளியே இருக்கின்றது
 நான் உள்ளே இருப்பதாக நம்பிக்கொண்டு பெரிய ஹஜரத் திடம் ஹஜரத் அறையில் இருக்கிறார்"
எனச் சொல்கிறாய்.
 
 ஆனால்   உண்மை என்னவென்றால் காலணியின் வார்  அறுந்து விட்டதால் நான் வேறு காலணியை அணிந்து கொண்டு வெளியே சென்றுவிட்டேன்.

 நான் அறையில் இல்லை என்பதுதான்
உண்மை நிலை
எது உண்மை நிலையோ  அதை  ஹக் என்று சொல்லப்படும் 

அதே நேரத்தில் நான் இருக்கிறேன் என நம்பிக்கொண்டு நீ சொன்னது ஹக்கிற்கு மாற்றமாக இருந்தாலும் அதை பொய் எனச் சொல்லமுடியாது  ஏனென்றால் உன்னைப் பொறுத்தவரை அது உண்மை .

#சித்க் என்பது  ஒருவனின் உள்ளத்திலுள்ளதையே உதட்டால் மொழிவது
  அதாவது உள்ளத்திலுள்ளதும் உதட்டிலிருந்து வெளிவரும் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தால் அது ஸித்க் அவன் சாதிக் உண்மையாளன்.

உள்ளமும் உதடும் மாறுபட்டால் அது கித்ப்
அவன் பொய்யான்.

உதரணமாக நான் அறையில் இருப்பதாக நீ நினைக்கிறாய் ஆனால் நான் இருப்பதாக பெரியஹஜரத்திடம் சொன்னால் மீண்டும் ஹஜரத்திடம் போய் இதை வாங்கிவா என அனுப்புவார் எனவே இல்லைஎனச் சொல்லிவிடுவோம் என எண்ணி பெரிய ஹஜரத்திடம் ஹஜரத் இல்லை எனச் சொல்கிறாய்  நான் அறையில் இல்லை என நீ சொல்வது ஹக்.ஆனாலும் நீ பொய்யன் ஏனென்றால் உன் உள்ளத்தில் நான் இருப்பதாக நம்பிக்கொண்டு உதட்டளவில் இல்லை என்று சொல்கிறாய் எனவே நீ பொய் சொல்கிறாய் நீ பொய்யன் எனச் சொல்லப்படும்.

     ஹக் حق என்பது நிகழ்வுகளுடன்(واقع) தொடர்புடையது.
சித்க்(صدق) என்பது ஒருவருடைய (قول)பேசுவதுடன் தொடர்புடையது.
பல மணித்துளிகளில் விளக்கவேண்டியதை ஒரு உதாரணத்தின் மூலம் மிக எளிதாக விளக்கினார்கள்.
ஹஜரத் அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை அருள்வானாக!

----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ.

Tuesday, August 2, 2022

சோதனைகள் தாம் உனது உயர்வுக்கு அடித்தளமிடுபவை

சோதனைகள் தாம் உனது உயர்வுக்கு அடித்தளமிடுபவை.
-இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்)
****************
வாழ்க்கையில் பல துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டவர்கள் இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்.
அவர்களிடம் சோதனைகள் உங்கள் வாழ்க்கைப்பாதையில் தடைகளாக இல்லையா ? எனக்கேட்கப்பட்டது.
    இமாம் சொன்னார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக துன்பங்கள் ஏற்படவில்லையென்றால் நான் வழியிலேயே சந்தேகப்பட்டு நின்றிருப்பேன்.
  அல்லாஹ் உம்மை ஏதாவது ஒன்றைக்கொண்டு சோதிப்பதில்லை,அது உனக்கு நன்மையாக மாறுவதற்காகவே தவிர. நீ அதை நேரெதிராக  எண்ணினாலும் சரியே.
உன் உள்ளத்தை அமைதிப்படுத்து.
நபி  யூசுப்(அலை)அவர்களுக்கு சோதனை ஏற்படாமல் இருந்திருந்தால்  அவர்  தனது தந்தையின் செல்லப்பிள்ளையாக அவரருகேயே இருந்திருப்பார். மாறாக
நபி அவர்கள்அச் சோதனைகளின் காரணமாகவே
எகிப்து நாட்டின் அதிபராக மாறினார்
நபி மூஸா(அலை) அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி செய்வோர் யாருமின்றி நாட்டை விட்டு சென்றவர்கள் நபியாக அந்த நாட்டிற்கு திரும்பினார்கள்.
தான் நேசித்த மக்காவைவிட்டு மனவேதனையுடன் வெறுத்து வெளியேறிய நமது நபி முஹம்மது(ஸல்)அவர்கள் மக்காவை வென்றெடுத்தவராக உள்ளே நுழைந்தார்கள்.
  இந்நிகழ்வையெல்லாம் அறிந்த பின்னும் மனஅழுத்தத்துடன் இருப்பீரா?
 மன உறுதியுடன் இருங்கள்.
உங்களின் பொறுமைக்குப்பின் அழகான பல நற்செய்திகள் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றன.
அவைகள் இப்பொழுது நீங்கள் அனுபவிக்கும் துன்பத்தினால் ஏற்படும் வேதனைகளை மறக்கடிக்கச்செய்யும்.

   - அரபி டுவிட்டரிலிருந்து 
கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.

Sunday, June 5, 2022

தந்தையின் மதிநுட்பம்

ஒரு தந்தையின் மதிநுட்பம்

தன் தந்தையின்  மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த மன்னன்  ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் இந்த பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான்.

தன் தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு இளைஞன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் வீட்டின் கீழே ரகசிய அறையில்  அவரைத் தஙக வைத்தான்.

சில நாட்களுக்குப் பின், ஒற்றர்கள் மூலமாகவோ அல்லது காட்டி கொடுப்பவர்கள் மூலமாகவோ மன்னனுக்கு இந்த தகவல் தெரிந்து விட்டது.

அந்த இளைஞனை விசாரித்து விட்டு அவனைத் தண்டிக்கவும் அவன் தந்தையை கொல்லவும் விரும்பியவன் ,அந்த இளைஞனை

 #காலால் நடந்தவனாகவும் راكيا#ஏறியவனாகவும் 
வரச் சொல்  என ஆணையிட்டான்

ஒரே நேரத்தில் எப்படி வாகனத்தில் ஏறிய வண்ணமும் நடந்தும் வர முடியும் என தந்தையிடம் கேட்டான்.

தந்தை சொன்னார்: 
 ஒரு குச்சியை   ஒரு காலில் கட்டிக்கொண்டு
 அதை ஊன்றிக் கொண்டும் மற்றொரு காலால் நடந்தும்செல் என்றார். 

அவ்வாறே அவன் மன்னனின் முன் சென்றான்

அவனுடைய புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன் நாளை காலனி அணிந்தும்  வெறுங்காலுடனும் நடந்து வரவேண்டும் என உத்திரவிட்டான்

இது எப்படி சாத்தியமாகும் என அவன் தந்தையிடம் கேட்க அவனுடைய ஷூ வடிவிலான காலணியின் கீழ்ப்பகுதியை எடுத்து விட்டு அணிந்து போகச் சொன்னார். 

அந்நிலையில் காலணியை அணிந்திருந்தாலும்
அவனின பாதம் தரையில் பட்டதால் வெறுங்காலுடன்  நடந்ததைப் போன்றிருந்தது

அதைப் பார்த்த மன்னன் அவனின் புத்திக் கூர்மையைக் கண்டு அவன் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 

நாளை, உன்னுடன் இருக்கும் எதிரியையும்  விசுவாசமுள்ள நண்பனையும் அழைத்து வா என்றான்.

இது தொடர்பாக, தந்தையுடன் ஆலோசனை செய்தான்.

 நாளை உன் மனைவியையும் உன் வளர்ப்பு நாயையும் அழைத்து சென்று மன்னர் முன் அவர்களை அடி என்றார்.

அப்பொழுது என்ன நடக்கும் என்றான் மகன்.
என்ன நடக்கும் என்பது அப்பொழுது உனக்குக் தெரியும் என்றார் தந்தை.

அவனும் மன்னனின் முன் நாயையும் மனைவியையும் அடித்தான் 
நாய் கத்திக் கொண்டே அவனை விட்டும் சற்றுத் தள்ளிப் போய் நின்றது.
அடிவாங்கிய மனைவியோ கடுங் கோபத்துடன் மற்றவர்கள் முன் என்னை அடிக்கிறாயா? என்ன நடக்கிறது என்று பார் என  அலறிய வண்ணம் மன்னா! இவன் வீட்டு ரகசிய அறையில் அவனின் தந்தையை ஒளித்து வைத்துள்ளான் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
மன்னன்,"எதிரியைக் காட்டிவிட்டாய், விசுவாசம் உள்ள நண்பன் எங்கே? எனக் கேட்டான்
அந்த இளைஞன் அவனிடமிருந்து விலகி தள்ளி நின்று கொண்டிருந்த நாயை அழைத்தான்
அந்நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு வேகமாக அவன் அருகே வந்து அவனின் காலில் தனது முகத்தைத் தேய்த்தது

மன்னா! நான் அடித்தாலும் நான் கூப்பிட்டவுடன் ஓடிவருகிறதே இதுதான் எனது விசுவாசமிக்க நண்பன்" என்றான் இளைஞன்.

இளைஞனின் புத்திசாலித்தனமும் பண்பட்ட நடைமுறையும் மன்னனைப் பெரிதும் கவர  இவ்வளவு திறமைகளை யாரிடம் கற்றாய் எனக்கேட்டார்

எல்லாமே என்தந்தையிடமிருந்து தான் மன்னா!
எனக்கு குரு வழிகாட்டி எல்லாமே அவர்தான் என 
 உருக்கமுடன் கூறினான்

மனம் நெகிழ்ந்த மன்னன் நாளை உன் தந்தையை அழைத்து வா என்றான்.

மறுநாள் வந்த தந்தையிடம் அரசியல் தொடர்பான சில கேள்விகளைக் கேட்டு தனது ஆலோசகராக நியமித்ததுடன் முதியவர்களை கொலை செய்யும் ஆணையையும் நீக்கியதுடன் இளைஞனுக்கும் பல வெகுமதிகளையும் வழங்கினான்.

நீதி: தந்தை ஒரு குடும்பத்தினருக்கு க் கிடைத்த பொக்கிஷம். அவர் அனுபவத்தின் பல்கலைகழகம்.
தன் தந்தையின் ஆலோசனைப் படி நடந்த காரணத்தினால் அந்த இளைஞன் உயர்வு பெற்றான்

தந்தை முதியவர் என்பதற்காகப் புறக்கணிக்காதீர்.
அவரிடம் உங்கள் பிரச்சினையைப் பேசிப்பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்காத  பல யுக்திகள்  
உங்களுக்குக் கிடைக்கும்.
பெற்றோர்களைப் பேணுங்கள்

குர்ஆன் கூறுகிறது

 உங்களது இறைவன் தன்னைத் தவிர மற்றெவரையும் வணங்கக்கூடாதென்று கட்டளையிட்டி ருப்பதுடன்
 தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் 
கட்டளை யிட்டிருக்கிறான்.
 உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!
(அல்குர்ஆன் : 17: 23,24)

-----அரபு இணைய தளத்திலிருந்து
கணியூர் இஸ்மாயில் நாஜி மன்பயி

Wednesday, June 1, 2022

அல்லாஹ் வழிகாட்டாவிட்டால்

“ஒரு முஸ்லிம் செய்த பெரும்பாவம் அவனை சொர்க்கத்தில் சேர்த்து விடுகிறது. அவன் செய்த நல்அமல் அவனை நரகத்தில் சேர்க்கிறது” என்று சில பெரியவர்கள் சொல்கிறார்கள்.
-----------------======-===============
இந்த கருத்தை பற்றி இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹு  அவர்களிடம் கேட்கப்பட்டது.

 அதற்கு அவர்கள் கூறிய விளக்கத்தின் சுருக்கம் : 

ஒரு முஸ்லிம் தன் மன இச்சையை அடக்க முடியாமல் பெரும் பாவத்தை செய்து விடுகிறான்.

அதன்பின், மன உறுத்தலுக்கு ஆளாகிறான். எழுந்தாலும் உட்கார்ந்தாலும், நின்றாலும் உறங்கினாலும் தான் செய்த பாவமே அவன் கண் முன்னால் நிற்கிறது. தான் செய்த பாவத்தை எண்ணி எண்ணி அல்லாஹ்விடம் அழுது அழுது பாவ மன்னிப்பு கேட்கிறான்.

 அவன் பாவம் செய்ததற்கு முன்பு இருந்ததை விட வணக்கங்களில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்து விடுகிறான் .
இறுதியில், அல்லாஹ் அவன் பாவத்தை மன்னிக்கிறான். அவனை சொர்க்கவாசியாக மாற்றிவிடுகிறான்.

 அதே நேரத்தில், ஒரு முஸ்லிம் சிறப்பான நல் அமலைச் செய்கிறான்.

 அந்த அமல் அவன் மனதை மகிழ்வடைய செய்கிறது. யாரும் செய்யாத ஒரு நல்அமலை செய்ததாக நினைக்கிறான். எழுந்தாலும் உட்கார்ந்தாலும், நின்றாலும் உறங்கினாலும் தான் செய்த நல்அமலை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான். தன்னை தானே “சபாஷ்” என்று பாராட்டி கொள்கிறான். 

அமல் செய்ததற்கு அல்லாஹ்வின் தவ்ஃபீக் இருந்தால் தான் நல்அமல் செய்ய முடியும் என்பதை அவன் மறந்து விடுகிறான்.

அவனின் இந்த செயல் அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவனின் நல்அமலை அல்லாஹ் ஏற்று கொள்ளமால் தூக்கி எறிந்து அவனை நரகத்தில் தள்ளி விடுகிறான்.

  இதை தான் “ஒரு முஸ்லிம் செய்த பெரும்பாவம் அவனை சொர்க்கத்தில் சேர்த்து விடுகிறது. அவன் செய்த நல்அமல் அவனை நரகத்தில் சேர்க்கிறது” என்று இமாம் அவர்கள் விளக்க தந்தார்கள்.

அல்லாஹ் நாடினாலே தவிர நாம் ஒரு நல்அமலை செய்ய முடியாது. 

எனவே,  பாவம் செய்தால் அல்லாஹ்விடம் எப்படி இஸ்திஃபார்  செய்கிறோமோ அவ்வாறே நாம் ஒரு நல்அமல் செய்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்......

எனவே தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

 அல்ஹம்துலில்லாஹில்லதி ஹதானா லிஹாதா வமாகுன்னா லநஹ்ததி லவ்லா ஹதாநல்லாஹ், “இந்த நேர்வழியை காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். அவன் நேர்வழி காட்டாமால் இருந்தால் நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.” என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பார்கள்.

ஃபர்ளான தொழுகையை நாம் நிறைவேற்றிய பின்னால் “அஸ்தஃபிருல்லாஹ்” என்று மூன்று தடவை சொல்வது சுன்னத்தாக இருக்கிறது. காரணம், நம்முடைய தொழுகை அல்லாஹ் ஏற்று கொள்ளும் வண்ணம் முழுமையாக இருந்ததா என்று நமக்கு தெரியாது. அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறோம்.

ஆகவே, நாம் தொழுதாலும், ஸதகா கொடுத்தாலும் வேறு நல்அமல்களை  செய்தாலும் அவற்றை செய்வதற்கு தவ்ஃபீக் செய்த அல்லாஹ்வை புகழ்ந்து நன்றி செலுத்த வேண்டும்.
------கணியூர் இஸ்மாயீல் நாஜி

Friday, April 29, 2022

ரமளான் புரட்சி

வருடாந்த மனிதநேயப் புரட்சி ரமழான்
***********************************

அரபியில்: முஸ்தஃபா ஸாதிக் அர்ராஃபிஈ
தமிழில் : அஃப்ஃபான் அப்துல் ஹலீம் 

(முஸ்தஃபா ஸாதிக் அர்ராஃபிஈயை பல அடைமொழிகளைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். ஓர் இலக்கியவாதியாக, சிந்தனையாளராக, எழுத்தாளராக, கவிஞராக, தத்துவ ஞானியாக, பயிற்றுவிப்பாளராக, ஊடகவியலாளராக என்று பல்வேறு பரிமாணங்களை எடுத்த ஒருவர். 1881ல் எகிப்தில் பிறந்து வளர்ந்து 1937ம் ஆண்டு மரணித்தார். நோன்பின் தத்துவங்கள் பற்றியும் யதார்த்தங்கள் பற்றியும் அவர் தனது 'வஹ்யுல் கலம்' எனும் நூலில் எழுதியிருக்கும் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்)

--------------------

நோன்பின் மாண்புகள் பற்றியோ அதன் பின்னால் புதைந்திருக்கும் ஞானங்கள் பற்றியோ சொல்லிக்கொள்ளத்தக்க எழுத்துக்களை நான் வாசித்த ஞாபகமில்லை. உடலுக்குத் தரும் பிரயோசனத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு மருத்துவம் தான், உடம்பை சீர்படுத்துவதில் அதற்கு தனியானதொரு வழிமுறை இருக்கின்றது. மருத்துவர்கள் அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள், அவர்களது வார்த்தையில் நோன்பென்பது வருடாந்தம் குடலை பலப்படுத்தி, இரத்தத்தை சுத்தப்படுத்தி, கலங்களைப் புனரமைக்கும் சக்தி வாய்ந்த முப்பது மாத்திரைகள். ஆனால் நாமிங்கு இது பற்றி பெரிதாக அலட்டிக்  கொள்ளப் போவதில்லை. இங்கு எமது நோக்கமெல்லாம் மனித ஆன்மா வாழும் சின்னஞ்சிறு களத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில், மனிதாபிமான சிந்தனையின் தொடர்ந்தேர்ச்சையான அமுலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இதன் பின்னால் புதைந்திருக்கின்ற இஸ்லாத்தின் தனிப்பெரும் தத்துவங்களையும் யதார்த்தங்களையும் தோண்டியெடுப்பதுதான். அப்போதுதான் நிகழ்வுகளில் நாம் காணும் மாற்றங்கள் நிதர்சனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அல்குர்ஆனின் அதிசயமான அற்புதங்களில் ஒன்றுதான் அது அதன் வரையறுக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் வரலாற்றின் எப்பகுதிக்குமான வாழ்க்கைத் தத்துவங்களையும், வழிகாட்டல்களையும் பொதிந்து வைத்திருப்பதாகும். ஆனால் எல்லாக் காலத்துக்குமுரிய யதார்த்தங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படுவதில்லை, காலம் கனியும் போது அல்குர்ஆன் அதற்குப் பொருத்தமான யதார்த்தங்களை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துகின்றது

கம்யூனிஸவாதிகள் தலையைப் போட்டு உடைத்துக்கொள்ளும் ஒரு விடயம் இருக்கின்றது. அவர்கள் மனித நரம்புகள் தொட்டு மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்து தோற்றுப் போய் இருக்கின்றார்கள். அவர்களது சிந்தனைகள் பூமியில் வாழ முடியாது தோற்றுப் போய் புத்தகங்களுடன் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு விட்டன. நோன்பின் மாண்புகள் பற்றி அவர்கள் சிறிதேனும் சிந்தித்திருப்பார்களாயின், அவர்கள் பேசிய கம்யூனிஸத் தத்துவங்களையெல்லாம் மிகைக்கக் கூடிய ஒரு மாதகால நடைமுறைப் பயிற்சியொழுங்கொன்றை அவர்கள் கண்டுகொண்டிருப்பர். இந்த நோன்பிருக்கின்றதே அது மனிதர்களின் வயிற்றுச் சமத்துவத்துக்காக ஷரீஅத் விதித்த கட்டாய ஏழ்மையாகும். மில்லியன் டாலர் சொந்தக்காரனாயினும் சரி, அன்றாடங்காய்ச்சியும் சரி அதுவுமில்லாதவனும் சரி இந்தக் கடமையினூடே சமமாய் நிற்கின்றனர். இது இஸ்லாத்தின் தனிப்பெரும் அழகாகும். தனிமனிதத் தற்பெருமைகள் யாவும் களையப்பட்டு தொழுகையில் ஓரணியில் நிற்பது போல, சமூக அந்தஸ்து பற்றிய பார்வைகள் யாவும் பலி கொடுக்கப்பட்டு தைக்காத ஆடையுடன் ஹஜ்ஜில் அனைவரும் சங்கமிப்பது போல இங்கும் நோன்புக்கூடாக ஒரு சமத்துவம் கட்டாயமாக்கப்படுகின்றது.

மனிதர்கள் உணர்வுபூர்வமாக சமத்துவத்தை அனுபவிப்பதற்கான ஒரு கட்டாய வறுமை ஏற்பாடே இந்த நோன்பு. உண்மையான வாழ்க்கையென்பது வாழ்க்கையில் இல்லை, அதற்குப் பின்னர்தான் இருக்கின்றது என்று அது கற்றுக்கொடுக்கின்றது. மனிதர்கள் வௌ;வேறு  வித்தியாசமான நிலைகளில் இருக்கும் போது அந்தப் பாடம் சாத்தியமின்றிப் போய் விடுகின்றது, அதனால்தான் அனைவரது உணர்வுகளும் ஒன்றாக மாற்றப்பட்டு அது கற்பிக்கப்படுகின்றது. மனிதர்கள் தத்தமது நிலையில் இருந்துகொண்டு தமது ஆசைகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் போது புரிந்துகொள்ள முடியாமலிருக்கும் விடயங்களை, ஒரே வலியை ஒரே சந்தர்;ப்பத்தில் ஒன்றாக உணர்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கும் போது புரிந்துகொள்ள முடியுமாகி விடுகின்றது.

உண்மை என்னவென்றால் மனிதர்கள் நிச்சயமாக தமது அறிவால் வேறுபடுவதில்லை, தமது பரம்பரைப் பெருமைகளால் வேறுபடுவதில்லை, அவர்களது தராதரங்களினூடாக வேறுபடுவதில்லை, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தினூடாகக் கூட வேறுபடுவதில்லை. ஆனால் அவர்கள் வயிற்றால் வேறுபடுகின்றார்கள். வயிற்றின் சட்டங்கள் அறிவையும் உணர்வுகளையும் மிகைத்து விடக்கூடிய ஆற்றல் பெற்றவையாகும். மனிதத்தின் மாபெரும் அழிவுக்கு வயிறுதான் காரணம், பூமியில் சர்வாதிகாரம் புரியும் ஆற்றல் அதற்குண்டு. வயிறும் மூளையும் முரண்பட்டுக்கொள்ளும் சந்தர்ப்பமொன்றில் வயிற்றின் இரும்புக் கரம் கொண்டு மூளை படுபயங்கரமாக நசுக்கப்படுகின்றது, மூளையின் எச்ச சொச்சங்களைக் கூட விட்டு வைக்காமல் வயிறு வெறியாட்டம் ஆடி விடுகின்றது.

இத்தகைய கொடூரமான வயிற்றை நெறிப்படுத்தி, ஆற்றுப்படுத்தி, அமைதிக்குப் பழக்கப்படுத்தி பயிற்றுவிக்கும் மகத்தான பணியை நோன்பு செய்கின்றது. அதற்கு முன்னால் மனிதர்களனைவரும் சமமாகி விடுகின்றனர், அனைவரும் ஒரே உணர்வுள்ளவர்களாக ஒரே இயல்புள்ளவர்களாக மாறி விடுகின்றனர், வயிற்றுக்கும் சடத்துக்குமிடையே புகுந்து நோன்பு ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்கின்றது, நரம்புகளின் கடிவாளத்தைக் கையிலெடுத்து பசியையும் சுவையையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுகின்றது. 

கிழக்கு மேற்கெங்கிலுமாய் மனிதர்கள் ஆச்சரியமான அற்புதமான இந்த கட்டுப்பாட்டுக்குள் ஒன்றித்து விடுகின்றனர். அங்கு மனிதம் ஆன்மாவின் குரலாக அருற்பிரவாகமெடுத்து ஒலிக்க ஆரம்பிக்கின்றது. பசியின் உச்சகட்டத்தில் கம்யூனிஸத்தின் புத்தகத் தத்துவங்கள் யாவும் யதார்த்த உலகில் சாத்தியமாகி உள்ளங்கள் பசியாறி விடுகின்றன. பணக்காரனும் ஏழையும் ஒரே தரத்துக்கு வர வேண்டும் என்ற தத்துவத்தையும் தாண்டி அவர்களிருவரும் ஒரே உணர்வைப் பெற்று ஒரே இயல்பில் சிந்திக்கும் அற்புதம் அங்கு நடந்தேறி விடுகின்றது. ஏழையின் உணர்வுகளை அவனது தரத்துக்கு வந்து பணக்காரன் அனுபவிக்கும் சமத்துவமும், பணக்காரனின் இயல்புகளை ஏழையும் புரிந்து கொண்டு மனஅமைதியடையும் தன்மையும் நடந்தேறுகின்றன. இந்த சமத்துவமும் மன அமைதியும் தான் வாழ்க்கைச் சக்கரத்தை இயல்பாக சுழல வைக்கும் (Lubrication) உராய்வு நீக்கியாகும். 

உள்ளத்தில் தொழிற்படும் நியதிகளில் ஒன்றுதான் 'வலிகளின் போதே வாஞ்சை பிறக்கின்றது' என்பதாகும். இது நோன்பு தன்னகத்தே பொதிந்திருக்கும் இன்னுமொரு சமூகவியல் இரகசியம். வயிற்றுக்கெதிராக கலகம் செய்து, அதன் தேவையையும் ஆசையையும் அடக்கி வைக்கும் அந்தப் பொழுதில் அவன் அனுபவிக்கும் வலி அந்த வலியுடனே வாழ்பவர்கள் மீதான வாஞ்சையாகவும் கரிசனையாகவும் அவனிலிருந்து வெளிப்படுகின்றது. அன்பு செலுத்துவது எப்படியென்று நோன்பு எடுக்கும் நடைமுறைப் பாடமிது. இதுவல்லாத இன்னொரு வழிமுறை அதற்கு இருக்குமென்றால் அது நிச்சயம் பேரழிவு தரும் அனர்த்தங்களாகத்தான் இருக்க முடியும். இவ்விரண்டும் மனித மனத்தில் அன்பும் கருணையும் பிறப்பதற்கான இரண்டு வழிமுறைகள், ஒன்று தெளிவானது அடுத்தது மயக்கமானது, ஒன்று நேரடியானது அடுத்தது மறைமுகமானது, முன்னையது திட்டமிடப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வழிமுறை, பின்னையது திடீரென இறங்கி திக்குமுக்காட வைக்கும் அதிர்ச்சி வைத்தியம்.

பணக்காரனின் பசியுணர்வு ஏழையின் மீதான கருணையாக மாறும் அந்த சந்தர்ப்பத்தில் மனிதம் என்ற சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் யாவும் காலாவதியாகி அற்புதமான புதிய விளக்கங்கள் பிறக்கின்றன. கட்டுப்படுத்தப்படும் உணர்ச்சிகளின் விளைவாகத் தோன்றும் நல்லம்சங்கள் சடங்களின் மீது ஆட்சி புரிய ஆரம்பிக்கின்றன. செல்வந்தனின் மனச்சாட்சியில் 'என்னைக் கவனி, என்னைக் கவனி' என்ற ஏழையின் குரல் யதார்த்தமாக ஒலிக்க ஆரம்பிக்கின்றது, அந்த மனச்சாட்சியின் ஓங்கியொலிக்கும் குரல் அவனது வாசல்படியில் ஏழையின் பலவீனமான குரலின் தேவையை இல்லாமல் செய்து விடுகின்றது. அது இரங்கும் குரல், ஆனால் மனசாட்சியின் குரலோ ஏவும் குரலாகவே ஒலிக்கின்றது. பாதிக்கப்பட்ட ஒருவன்தான் அதே பாதிப்புக்குள்ளான இன்னொருவனுக்கு உண்மையாக ஆறுதல் சொல்லலாமென்பது போல ஏழையின் இடத்துக்கு இறங்கி அவனது நிலையை செல்வந்தன் அனுபவிக்கின்றான்.

வயிற்றின் வரலாற்றை வெறும் முப்பது நாட்களில் மாற்றியெழுதும் இந்த அற்புதமான இஸ்லாமிய ஒழுங்கோடு போட்டி போடும் வேறு அற்புதங்கள் எங்கேனும் இருந்தால் எடுத்து வாருங்கள், வயிற்றின் கர்ண கொடூரத் தாக்குதலுக்கு முன்னால் சுருண்டு விழும் அனைத்து உணர்வுகளையும் நிறுத்தி வைத்து ஒரு போட்டி வைப்போம். வயிற்றின் வரலாறு மாறினாலும் உள்ளத்தின் வரலாறு மாறுவதில்லை, பகலில் தடுத்ததை இரவில் கழாச் செய்து முடிக்கும் உணவு நேர அட்டவணை மாறும் மாதமாக ரமழான் இன்று மாற்றப்பட்டாலும் கூட நோன்பு அதன் பிரயோசனங்களை வழங்குவதை நிறுத்திக் கொள்வதில்லை.

நோன்பு ஒரு பயிற்சிப் பட்டறை என்பதில் எனக்கு மிக ஆழமான நம்பிக்கை இருக்கின்றது. ஒவ்வொரு பன்னிரு திங்களிலும் ஒரு தடவை வரும் தொடர்ந்தேர்ச்சையான முப்பது நாட்களின் பின்னால் ஒளிந்திருக்கும் ஞானம் அதுதான். உடலின் மீதான உள்ளத்து உணர்வுகளையும் உள்ளத்தின் மீதான உடலின் செயற்பாடுகளையும் அது ஒழுங்குபடுத்துகின்றது. வருடமொரு தடவை உடலுக்கோர் ஓய்வாகவும், உள்ளத்துக்கோர் உல்லாசமாகவும், வாழ்க்கை முறையில் ஒரு மாற்றமாகவும் நோன்பு ஓர் ஆரோக்கிய மாதமாய் மிளிர்கின்றது. நரம்புத் தொகுதி மறுசீரமைக்கப்படுகின்றது.

பிறை கண்டு நோன்பு பிடிப்பதில் உள்ள ரகசியம் பற்றி சிந்தித்ததுண்டா?! பிறை தென்பட்டதை உறுதிப்படுத்தி நோன்பின் ஆரம்பம் அறிவிக்கப்படுவது போலவே மனித உணர்வுகளின் உண்மையான ஒதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை அடைந்து கொள்வதற்கான திடவுறுதி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மனிதனுக்குள் புதைந்திருக்கும் மனிதத்தையும் அன்பையும் நன்மையின் வாயில்களையும் திறந்து விடுவதற்காய் வானத்திலிருந்து பிரத்தியேகமாய் புறப்பட்டு வரும் புத்தம் புதிய ஒளிக்கீற்றே தலைப்பிறை.

நோன்பு போதிக்கும் ஞானங்களில் இன்னுமொன்றுதான் ஒரு மனிதனின் நாட்ட சக்தியை இன்னுமின்னும் பலப்படுத்த அது தரும் பயிற்சியாகும். இது வகுப்பறையில் உட்கார்ந்து குறிப்பெடுக்கும் பயிற்சியல்ல, மாற்றமாக செயற்களத்தில் குதித்து முயன்று தவறி முயன்று வெல்லும் நடைமுறைப் பயிற்சி. ஒரு நோன்பாளி அவனாகவே அவனது மிருகானிய்யத்தான பக்கங்களிலிருந்து மீண்டு வருவதற்கு வழங்கப்படும் பயிற்சி. தவிர்ந்துகொள்வதில் பிடிவாதத்தை வழங்கும் அற்புதப் பயிற்சி. ஊனமுற்றிருக்கும் உள்ளத்து உறுதிக்கு உரமூட்டி உணர்வளித்து உயிர்கொடுக்கும் உன்னதமான பயிற்சி. பொறுமையின் பரந்து விரிந்த பரப்புக்களை உணர்ந்தறிந்து உள்ளத்தில் அதன் அத்திவாரக் கற்களை உறுதியாய் பதிக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சி காலவோட்டத்தில் மங்கி மறைந்து மறந்து போகும் பயிற்சியல்ல, உறுதியான நிலையான சிந்தனைத் தெளிவையும் நடைமுறை மாற்றத்தையும் யதார்த்தமாக சாத்தியப்படுத்தும் ஆச்சரியமான பயிற்சி.

இந்த சக்திக்கு இன்னுமோர் உயர்ந்த சமூகப் பெறுமானம் இருக்கின்றது. அதுதான் அறிவினதும் விவேகத்தினதும் தரத்தை விட அதியுயர்ந்த பெறுமானத்தை மனிதத்துக்கு வழங்குவதாகும். அறிவிலும் விவேகத்திலும் சிந்தனைகள் உதிக்கும், தட்டுப்படும், ஆனால் கடந்து சென்று விடும். அதுவே ஒரு மனிதனின் எண்ணத்திலும் நாட்டத்திலும் உருவாகும் போது அது யதார்த்தமான செயல்வடிவத்துக்கு மாறுகின்றது. உலகில் எங்காவது, எந்த மார்க்கத்திலாவது, எந்த சித்தாந்தத்திலாவது, எந்த சமூகத்திலாவது மனிதர்களது நாட்ட சக்தியைத் தீர்மானிக்கக் கூடிய பலப்படுத்தக் கூடிய ஒரு முப்பது நாள் வேலைத்திட்டம் இருந்தால் எடுத்து வாருங்கள். ஒரு பக்கத்தால் தலையில் புகுந்து இன்னொரு பக்கத்தால் வெளியேறி விடக் கூடிய தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் பற்றி நான் பேசவில்லை, நடைமுறைப்படுத்தப்படும் யதார்த்தங்களுடன் ஒன்றித்து இரண்டரக் கலந்த இயல்புகளைப் பற்றிச் சொல்கிறேன்.

ஒருவனுடைய சிந்தனைகள் அவனது மனோ இச்சைகளை ஆளுகின்ற நிலையை விட உயர்ந்த ஒரு நிலைக்கு அவனின் நாட்ட சக்தியைக் கொண்டுவர வேறேதாவதொன்றால் முடியுமாக இருந்தால் சொல்லித் தாருங்கள். இத்தகையதோர் அரிய சந்தர்ப்பம்தான் இந்த நோன்பு.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த இஸ்லாமிய நோன்பு உலகின் மூலை முடுக்கெங்கும் வியாபித்துப் பரவினால், அது மனிதத்துக்கெதிரான உலகின் சக்திகளுக்கு சிம்மசொப்பனமான ஒரு மாதகால வருடாந்தப் புரட்சியாக இருக்கும். அந்தப் புரட்சி இந்தப் பூமியின் அசிங்கங்களையும் அட்டூழியங்களையும் துடைத்தெறியும். கஞ்சத்தனமும் அதன் ஆழப்புதைந்த எச்ச சொச்சங்களும் கூட அகற்றப்படும். மனிதனின் உளவியல் பிரச்சினைகள் யாவும் ஒரு மாதகாலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்படும். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவர்களது உள்ளத்தின் ஆழத்துக்குள் இறங்கி அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நலவுகளை அடையாளம் கண்டு தோண்டியெடுக்க ஆரம்பிப்பர். அந்த நலவுகள் அவர்களது சிந்தனை ஆலைகளில் புடம் போடப்பட்டு தேவையும் வறுமையும் நீங்குவதற்கான உற்பத்திகளாக வெளியேற்றப்படும். மனித உடலின் இயல்புகள் பற்றிய புத்தகங்களின் தத்துவங்கள் கிடப்பில் போடப்பட்டு பொறுமையும் உள உறுதியும் வாழும் உறைவிடமாய் அதை அறிமுகப்படுத்தும் உன்னத விளக்கம் பிறக்கும். இதன் விளைவாக மனிதமும் சமத்துவமும் நன்மைகளும் தலைநிமிர்ந்து வாழும். சகோதரத்துவமும் சுதந்திரமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய கரிசனையும் கோலோச்ச ஆரம்பிக்கும்.

மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் மனித உடல் அதன் ஆன்மீக சக்தியை தேவைக்கதிகமாக சேமித்து வைத்துக் கொள்வதாகும். உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆன்மீக வங்கியில் அது வைப்புச் செய்யப்படுகின்றது. பின்னால் வரும் நாட்களின் கஷ்ட நஷ்டங்களிலும், சோதனைகளிலும் அந்த ஆன்மீகம் பொறுமை வடிவிலும் திடவுறுதி வடிவிலும் மீளப்பெறப்படுகின்றது. 

இந்த சக்தியை தேவைக்கேற்ப சேமித்து செலவழிக்கக் கூடிய சக்தி பெற்ற சமூகமொன்றுதான் உலகில் அற்புதமான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டக் கூடிய சமூகமாகும். இப்போது புரிகிறதா எமது முன்னோர்கள் தமது சாதனைகளுக்கான எரிபொருளை எங்கிருந்து பெற்றார்களென்று?! இன்றைய நவீன கனரக  ஆயுதங்களுக்கு இல்லாத வலிமையும் சக்தியும் உண்பதற்கு போதுமான உணவும் இல்லாது தளர்ந்து போயிருந்த அவர்களது எலும்புகளில் இருந்ததன் இரகசியம் இதுதான்.

இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட நோன்பியல் தத்துவங்களெல்லாம் என் சிந்தையில் தாமாக உதித்தவையல்ல. ''நீங்கள் இறையுணர்வுள்ளவர்களாக மாறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது'' என்ற அல்குர்ஆன் ஆயத்திலிருந்து என்னால் முடியுமானளவு நான் பெற்றுக் கொண்ட ஞானங்களே. அறிஞர்கள் எல்லோரும் அதனைத் தக்வா என்றே விளங்கிக் கொண்டனர், என்னைப் பொறுத்தவரையில் நான் அதனை இத்திகாஃ (தடுப்பு, பாதுகாப்பு) என்று விளங்கிக் கொண்டேன். நோன்பின் மூலமாக, மனிதன் தன் குடலையும் வயிற்றையும் ஆள நினைக்கும் தனது மிருகானிய்யத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்புகிறான். உலகை வயிற்றின் கண்கொண்டு பார்க்காமல் பாதுகாத்துக் கொள்கிறான். தனது மனிதத்தையும் இயல்பையும் வயிற்றின் வெறியாட்டத்துக்கு ஆளாகி அழிந்து விடாமல் தடுத்துக் கொள்கிறான். அந்தத் தடுப்பினதும் பாதுகாப்பினதும் விளைவாக வெறும் கொஞ்ச ஊட்டத்துக்காக உணர்வுகளையும் உறுதியையும் அடகு வைத்து மனிதர்களோடு மனிதர்களாகவன்றி காட்டுக் கழுதைகளாக நடந்து கொள்ளும் நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.

நோன்பின் மூலம் ஒரு மனிதன் தனக்கு முன்னுள்ளதையும் பின்னாலுள்ளதையும் பாதுகாத்துக் கொள்கிறான். அவனுக்கு முன்னாலிருப்பது அவனது நிகழ்காலமும் அதன் நலவு கெடுதிகளுமாகும். அவனுக்குப் பின்னாலிருப்பது அந்த நலவு கெடுதிகளை வாரிசுச் சொத்தாகப் பெற்றுக் கொள்ளும் அவனது பரம்பரையாகும். நோன்பின் பயிற்சியூடே அவன் தனது நிகழ்காலத்தின் நலவுகளை அடைந்துகொள்ள உழைப்பான். நிகழ்காலத்தை முதலிட்டு எதிர்காலத்துக்காக உழைப்பான். அதன் பிரயோசனத்தை அவனது பரம்பரை அடைந்துகொள்ளும்.

நாம் இங்கு தெளிவுபடுத்தியவை யாவும் நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கில் தீமைகளைத் தடுப்பது பற்றியும், சிறந்ததைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மோசமானவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வது பற்றியுமாகும். இந்த விளக்கத்தின் மூலம் அந்தக் குர்ஆன் ஆயத்திலிருந்து நோன்புக்கான உயர்ந்த தத்துவம் பிறக்கின்றது. அந்த ஆயத்தின் சொற் செறிவும் முழுமையான கருத்தும் நாம் விளக்கிய தத்துவத்தை விட மிகவும் கருத்தாழம் மிக்கதும் உயர்வானதுமாகும். அது நோன்பை ஒரு சமூகவியல் மனிதாபிமான சட்டமாக சொல்லித்தருகின்றது. அந்த சட்டங்களினூடாக சமூகம் தனது தீங்குகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நோன்பின் இந்த விதிகளும் சட்டங்களும் உலகை ஆளாத வரையில் உலகம் மாறாது. நாம் அந்த சட்டங்களை எமது வார்த்தைகளில் 'வயிற்றுச் சட்டங்கள்' என்று சொல்கிறோம்.

ரமழானே! நீ எவ்வளவு மகத்துவமிக்க ஒரு மாதம்! உலகம் உன்னை அறிய வேண்டிய வடிவில் அறிந்து கொள்ளுமாக இருந்தால் உனக்கது 'முப்பது நாள் பல்கலைக்கழகம்' என்று பெயர் சூட்டிக் கொண்டாடும்.

Thursday, April 28, 2022

அழைப்பாளர் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு இஸ்லாமிய அழைப்பாளன் ஆத்திரமூட்டப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும

இலங்கை மவ்லானா முர்ஷித் அஹ்மத் ஹஜ்ரத் அவர்களின் அறவுரை
-----------------------------=8-----====-----=--===
ஒரு அழைப்பாளனுக்கு பொறுமையும்,நிதானமும் அவசியம்.
நம்மை ஆத்திரமூட்டி நிதானம் இழக்க வைக்க முயல்பவருக்கு நாம் பலியாகி விடக் கூடாது
மவ்லானா அஷ்ரப்அலி தானவி (ரஹ்)
அவர்கள் ஒரு ஊருக்கு உரையாற்ற சென்றார்கள். அவர்கள் உரை ஆற்ற துவங்குமுன் ஒருவர் எழுந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுப் பின் பேசுங்கள் என்றார்.என்ன கேள்வி என மவ்லானா கேட்க இந்த காகிதத்தில் எழுதியிரூக்கிறேன் என ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.அதில் முதல் கேள்வி
  நீ ஒரு காபிர் முஸ்லிமான எங்களிடம் பேசக்கூடாது" என இருந்தது.அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி என்னை காபிர் என்கிறாய் என விவாதம் செய்து கொண்டிருப்போம்
  ஆனால் மவ்லானா சொன்னார்கள்; நான் அம்பது ஆண்டுகளாக கலிமா சொல்லி தொழுது முஸ்லிமாக வாழ்கிறேன் இப்பொழுது என்னை காபிர்  என்கிறாய். இப்பொழுது உன் திருப்திக்காக இந்த மக்கள் முன் மீண்டும் கலிமா சொல்கிறேன். அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு
இப்பொழுது நான் முஸ்லிம் பேசலாமல்லவா?  என்றார்கள்.
  இரண்டாம் கேள்வி;
நீ ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் உனக்கு பேச தகுதியில்லை.
 ஆத்திரப்படாமல் மவ்லானா சொன்னார்கள்; நல்ல விஷயங்கள் சொல்வதற்கு குலம் தேவையில்லை .இருப்பினும் என் குலம் என்ன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் என் ஊரான தானபவன் வந்து விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்
 மூன்றாவது கேள்வி;
     எப்போதும் நீங்கள் கருத்து வேற்றுமை உள்ள செய்திகளையே பேசுகிறீர்கள்.
 மவ்லானா சொன்னார்கள்; நான் பேச ஆரம்பிக்கிறேன் எந்த இடத்தில் என் பேச்சு கருத்துவேற்றுமையை தூண்டும் விதமாக இருக்கிறதோ அங்கேயே என் பேச்சை நிற்பாட்டிவிடுங்கள்"
 அதன் பின் மவ்லானா பேச துவங்கினார்கள் பேசிமுடியும் வரை யாரும் எந்த குறுக்கீடும் செய்யவில்லை கூட்ட முடிவில் கேள்வி கேட்டவர் ஓடிவந்து மவ்லானாவின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டார்
    இப்படித்தான் நம் பேச்சின் மூலமும் நம்முடைய பணிவான நன்நடத்தையின் மூலமும் எதிரியையும் நண்பனாக்க வேண்டும்
-------கணியூரார்

Friday, March 25, 2022

மனைவி அமைவதெல்லாம்

ஒரு கணவன், அவன் மனைவி என்னதான் சுவையாக உணவு தயாரித்தாலும் விதவிதமான சிற்றுண்டி தயாரித்தாலும் சாப்பிட்டுவிட்டு "நன்றாக இருக்கிறது ஆனால் என் அம்மாவுடைய கை பக்குவம் இல்லை என்று சொல்லுவதை பழக்கமாக வைத்திருந்தான்

அவ்வாறு அவன் சொல்லும் பொழுதெல்லாம் மனைவி மறுப்பேதும் சொல்லாமல் கணவனின் கண்களை பார்த்தவண்ணம் வாய்க்குள்ளே சில வார்த்தைகளை முணுமுணுத்துக் கொள்வாள்

 இவ்வாறு கணவன் தன் தாயாரைப் புகழ்வதும்  மனைவி அதை சிரித்த முகத்துடன் அவன் முகத்தை பார்த்த வண்ணம் வாய்க்குள் முணுமுணுப்பதுமாக 27 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்நிலையில்  கணவனின்
தாயார் மரணம் அடைந்து விட்டார் தாயாரின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு சோகமாக கணவன் தனியாக அமர்ந்திருந்தான்  அவன் அருகில் அமர்ந்த மனைவி அவனை அன்போடு அரவணைத்துக் கொண்டு ஆறுதலாக சில வார்த்தைகளை பேசிவிட்டு அவனுக்கு உணவு பரிமாறினாள்.

 உணவு உண்டவுடன் கணவன், இன்று நீ சமைத்த உணவு என் அம்மா சமையலைப் போன்று சுவையாக இருந்தது உன்னுடைய  ஆறுதலான பேச்சும் என் அம்மா பேசுவது  போன்றே இருக்கின்றது என்று சொன்னான்
 இதைக் கேட்ட போதும் மனைவி  ஒன்றும் சொல்லாமல்  அவனைப் பார்த்துக்கொண்டே புன்னகைத்த வண்ணம் வழக்கம்போல் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தாள்

  கணவன், நான் என் அம்மாவைப் பற்றி பேசும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த வண்ணம் ஏதோ வாயில் முணுமுணுப்பாய் அதைப்பற்றி நான் இதுவரைக் கேட்கவில்லை இப்பொழுது கேட்கிறேன்
   என்னைப் பார்த்தவண்ணம் என்ன சொல்லி முணுமுணுப்பாய் என்று கேட்டான்

 அதற்கு மனைவி சொன்னாள் நீங்கள் உங்கள் தாயாரை பற்றி பேசும்போதெல்லாம் நான் அல்லாஹ்விடம்  
   
#யாஅல்லாஹ்! எவ்விதம் என்கணவனின் உள்ளத்தில் அவருடைய தாயாரைப் பற்றிய மதிப்பையும் அன்பையும் விதைத்தாயோ அதேபோன்று என் மகனின் உள்ளத்தில் என் மீது அன்பையும் மரியாதையையும் விதைப்பாயாக!" என்று நான் துஆ செய்வேன் என்றாள்.

 அதைக் கேட்டதும் கணவனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது அவளின் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான்
'உன்னை மணமுடிக்கும் போது  எனக்கு வயது இருபத்தி ஏழு 
நாம் 27 ஆண்டுகள் ஒன்றாக  வாழ்ந்திருக்கிறோம் இந்த 27 ஆண்டுகளில் நீ என் தாயாருக்கு இணையாக மாறிவிட்டாய்"
 
அதைக்கேட்டதும் மனைவி சொன்னாள்: நீங்கள் ஒரு கணக்கு ஆசிரியராக இருந்தும் கணக்கில் தவறு செய்கிறீர்கள்   திருமணமாகும் போது உங்களுக்கு 27 வயது  நமக்கு திருமணம் முடிந்து 27 ஆகிவிட்டது என்றால் இப்பொழுது உங்கள் வயது 54 .இந்த 54 ஆண்டுகள்  உங்கள் தாயாரின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்கள்  என்னுடன்  வாழ்ந்த 27 ஆண்டுகள்
அந்த 54ஆண்டுகளுக்கு  நிகராகுமா?
அன்னையின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது 
அன்னை சுவனத்தின் வாசல்
 உலகத்தில் யாரும் அன்னைக்கு  நிகராகமுடியாது"

 மனைவியின் பேச்சைக் கேட்க க் கேட்க கணவன் இத்தகைய  நற்குணமிக்க மனைவியை அளித்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினான்.

இல்லாள் அமைவதெல்லாம்
இறைவன் வழங்கும் அருட்கொடை.
____ அரபு இணைய தளத்திலிருந்து கணியூர் இஸ்மாயில் நாஜி

Wednesday, March 2, 2022

சிராஜுல்மில்லத்

நாவண்மை மிக்க சமுதாய தலைவர் சிராஜூல்மில்லத் A.K.A அப்துஸ்ஸமது சாஹிப்.அவர்கள் 
---------------------==----------------
               அண்மையில் நடைப்பெற்ற தி.மு.க. மாநாட்டில் இன்றைய சமுதாய தலைவர்களான பேராசிரியர் காதர் மைதீன் அவர்களும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் சிறப்பான முறையில் பேசினார்கள்.
இருவரும் அவரவர்களுடைய பாணியில் பேசினார்கள்.
நான் இளம் வயதிலிருந்தே அரசியல், ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவுகளை கேட்பதில் ஆர்வம் உடையவன். 
தமிழகத்தின் மிக பிரபல்யமான அத்தனை சொற்பொழிவாளர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன்.
காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்த என் தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார் எங்கள் ஊரில் எந்த கட்சியின் கூட்டம் நடந்தாலும் என்னை அழைத்து செல்வார். நமக்கு பிடித்திருந்தாலும் பிடித்திராவிட்டாலும் எல்லாருடைய பேச்சையும் கேட்க வேண்டும்.
அப்பொழுது தான் விசாலமான சிந்தனையும் ஆழ்ந்த பொது அறிவும் நமக்கு கிடைக்கும் என்பார். என் தந்தையுடன் நான் இறுதியாக கலந்துக் கொண்ட கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கூட்டமான பி.ராமமூர்த்தியின் கூட்டமாகும்.
நான் லால்பேட்டையில் ஓதுகின்ற பொழுது நமது சமுதாயத்தின் மிக சிறந்த பேச்சாளர்களின் கூட்டம் லால்பேட்டையில் அதிகமாக நடைபெறும்.அதில் பெரும்பாலானோர் மதரஸாவில் தான் தங்குவார்கள். அப்பொழுது அவர்களுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன். 
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மரியாதைக்குரிய தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள், பன்மொழி புலவர் அப்துல் லத்தீஃப் ஸாஹிப், நாவலர் ஏ.எம்.யூஸுப் ஸாஹிப், சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன்  ஸாஹிப் ஆகியோரின் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்பவன் நான்.
அவர்களில் முதலில் பேச்சாளர் என்ற முறையில் நான் தலைவர் அப்து ஸ்ஸமது ஸாஹிப் அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களை முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு லால்பேட்டையில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு காயிதே மில்லத் அவர்களுடன்  வந்திருந்த பொழுது சந்தித்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை. காயிதே மில்லத் அவர்கள் ஜும்ஆவில் பயான் செய்வார்கள் என்று அறிவிக்குமாறு என்னை மவ்லானா இக்லீல் அவர்கள்  ஏவினார்கள் .
நான் ஒலிபெருக்கியில் இன்று ஜும்ஆவில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள் உரையாற்றுகிறார்கள். எனவே, அனைவரும் சீக்கிரம் வாருங்கள்.சீக்கிரம் வாருங்கள் என்று திரும்ப திரும்ப கூறி கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு மாணவர் என்னிடத்தில் வந்து ஸமது பாய் உன்னை கூப்பிடுகிறார் என்று சொன்னார்.
நான் அவரிடம் சென்ற பொழுது தலைவர் அவர்களை காயிதே மில்லத் என்று சொன்னால் போதாதா? மக்களுக்கு அவரைப் பற்றி தெரியாதா? ஏன் தேவையில்லாமல் அவர் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறாய்.
பெரியவர்களின் பெயரை தேவையில்லாமல் சொல்லக்கூடாது என்று என்னை  கண்டித்தார். அவர்கள் எங்கு  சொற்பொழிவு ஆற்றினாலும் அங்கு சென்று ஆர்வத்துடன் கேட்பேன்.
அந்தாண்டில் (1967) நடைபெற்ற எனது ஃபாஜில் பட்டமளிப்பு விழாவில் காயிதே மில்லத் அவர்களும் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன்  ஸாஹிப் அவர்களும் சிராஜி மில்லத் அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
உரத்த குரலில் உணர்சிகரமாக பேசும் திருப்பூர் மைதீன் அவர்கள் பேசும் பொழுது எங்களை நோக்கி “பட்டம் பெரும் நீங்கள் எங்கும் யாரிடத்திலும் உண்மையை சொல்ல தயங்க கூடாது. நீங்கள் பணி புரியும் பள்ளியின் நிர்வாகி வட்டி வாங்குகிறார் என்றால் அதை சொல்வதை விட்டுவிட்டு மவ்லாய ஸல்லி வஸல் என்று வேறு பைத்துகளை பாடி விட்டு உண்மையை சொல்லாமல் சும்மா இருந்து விடக் கூடாது” என்று பேசினார்.
அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத் அவர்கள், “மைதீன் அண்ணன் அவர்கள் சொன்னதை போல உண்மையையே பேசுங்கள்” என்று வரலாற்றில் அரசர்களுக்கு முன்னால் உண்மையை பேசிய சில ஆலிம்களின் வரலாற்றை சுட்டி காட்டினார்கள்.
அவர்கள் மேலும் பேசியபோது,”இன்று பட்டம் வாங்கும் இளம் ஆலிம்களின் முகத்தில் தென்படும் குறுந்தாடிகளை பார்க்கும் பொழுது தாடி வைக்காத பெரியவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொல்லிய வண்ணம் மைதீன் சாஹிப்  அவர்களை பார்த்தார்கள்.(அவர் தாடி வைக்காமல் இருந்தார்)
உடனே அவர் “ஆமாம்,ஆமாம். நானும் வெட்கப்பட வேண்டும் என்றார்.எல்லோரும் புன்னகை பூத்தார்கள். 
இடமறிந்து, பொருளறிந்து, காலமறிந்து, பேசுவதில் வல்லவர், சிராஜூல்  மில்லத். மாற்றுமத சகோதரர்கள் கூட அவர்களுடைய பேச்சை ஆர்வத்துடன் கேட்பார்கள்.
1980களில் மயிலாடுதுறை தாலுக்காவின் அனைத்து ஜமஅத்தார்களும் இணைந்து ஒரு மாபெரும் மீலாது விழா பேரணியையும் நகர பூங்காவில் பொது கூட்டமும்  நடத்துவார்கள்.
அதில்,ஒரு முறை சிராஜூல்மில்லத் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.அவர்கள் பேச ஆரம்பித்த பொழுது பூங்காவின் அருகே இருந்த சினிமா அரங்கின் முதல் காட்சி முடிவுற்று மக்கள் கூட்டம் கூட்டமாக பூங்காவின் வழியே பேருந்து நிலையம் சென்றனர்.
தலைவர் அவர்களின் கம்பீரமான குரலை கேட்டு பெரும்பாலானோர் அப்படியே நின்று விட்டார்கள். மாற்று மத சகோதரர்கள் அதிகமாக குழுமி இருந்த கூட்டத்தில், தலைவர் அவர்கள்  நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றிய பொழுது மக்கத்து குறைஷியர்களின் மூட நம்பிக்கைகளை பற்றியும் சிலை வணக்கத்தை பற்றியும் சுவைப்பட கூறினார்கள்.
  வியப்பு என்னவென்றால் அவர்களின் பேச்சு அங்கு குழுமி இருந்த இந்து சகோதாரர்களின் மனதில் எந்த ஒரு காயத்தையும் ஏற்படுத்தாமல் “அவர் பேசுவது சரிதானே” என்று எண்ணுகிற வகையில் பேசினார்கள்.
என்னுடைய பல இந்து நண்பர்கள் அந்த பேச்சை பெரும் அளவு பாராட்டினார்கள்.
ஷஃபான் வழக்கில் விவாகரத்து செய்யப்பட மனைவிக்கு ஜீவனாம்சம் தொகை கொடுக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஷரீஅத் விளக்க மாநாடு நடைபெற்றது.பாண்டிச்சேரி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற பெருந்திறள் கூட்டத்தில் தலைவரின் பேச்சு என்றும் மறக்க முடியாது.
“முஸ்லிம்களான எங்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.தேசிய நீரோட்டம் என்றால் என்ன? இந்து சமுதாயத்தின் கொள்கைகளை பின்பற்றுவது தான் தேசிய நீரோட்டமா?
சமீபத்தில் கல்கத்தாவில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணமடம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தங்களை இந்து என்று சொல்ல கூடாது என்றும் தங்களை இந்து அல்லாதசிறுபான்மையினர்  என்று அறிவிக்க வேண்டுமென வழக்கு தொடுத்திருக்கிறார்கள். நான் சட்டமன்றத்தில் மாண்புமிகு ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை நோக்கி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறதா? என்று கேட்டேன்.(அப்பொழுது தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்). அதற்கு மாண்பு மிகு அமைச்சர் அவர்கள், மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகிகள் தாங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், எனவே, அந்த துரையின் கீழ் நாங்கள் வரமாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னார். நாங்கள் யார்யாரெல்லாம் ஹிந்துக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாம் தங்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொல்கிற பொழுது நாங்கள் உறுதியான மார்க்கத்தை பின்பற்றி முஸ்லிம்கள் என்று அறிவித்திருக்கின்ற பொழுது எங்களை எந்த தேசிய நீரோட்டத்தில் சேர சொல்கிறீர்கள்.(காமன் சிவில் கோடு) இந்தியா முழுமைக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால், ஒரு நிபந்தனை: உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு சிவில் சட்டங்களையும் கொண்டு வாருங்கள். நாங்கள் எங்கள் இஸ்லாம் வகுத்துள்ள சிவில் சட்டத்தை யும் கொண்டு வருகிறோம். அனைத்தையும் ஒப்பிட்டு பாப்போம். இஸ்லாமிய சிவில் சட்டத்தை விட பிற நாட்டு சிவில் சட்டங்கள் சிறப்பானதென்று நீங்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அந்த சட்டத்தை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம். உங்களால் ஒருபோதும் இஸ்லாத்திற்கு நிகரான சட்டத்தை கொண்டு வரவே முடியாது.” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
மைதானமே தக்பீரால் அதிர்ந்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறந்த இலக்கிய பேச்சாளரான முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் கா.காளிமுத்து அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். அதற்கு பின் பேசிய தலைவரின் பேச்சை கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் கேட்டது.
கூட்டம் முடிந்து திருநெல்வெலி செல்லும் பஸ்ஸில் நான் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் வந்த தி.மு.க தொண்டர்கள் “இன்று பாய் நம்முடைய தலைவர் பேச்சையே சாப்பிட்டு விட்டார். அவர் பேச்சு தான் சூப்பர்.” என்று பேசி கொண்டு வந்தார்கள். எனக்கு மிக பெருமையாக இருந்தது.
தலைவர் சிராஜூல் மில்லத் அவர்களின் சில அரசியல் முடிவுகள் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஆனால், தலைவர் அவர்களின் நாவன்மையை பற்றியோ, அவரின் தனிமனித ஒழுக்கத்தை பற்றியோ யாரும் குறை சொல்ல முடியாது. தன்னை சந்திக்க வருபவர்களிடத்தில் எங்களை போன்ற சிறு வயது உடையவர்களாக இருந்தாலும் கூட இன்முகத்துடன் பேசும் சிறந்த பண்பாளர் அவர்.தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள் என கேள்விபட்டுள்ளேன் 
அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் சேர்ப்பானாக.ஆமீன்

Thursday, February 17, 2022

எண்ணம்

எண்ணத்தின் அடிப்படையிலேயே அதற்கான பலன் கிடைக்கும்.
======
இப்னு தைமிய்யா(ரஹ்)சொல்கிறார்:
#அழகான  உயர்தர ஆடைகளை  கஞ்சத்தனம் காரணமாக ஒருவன் அணிவதில்லை என்றால் அதற்கான நன்மை கிடைக்காது.

அனுமதிக்கப்பட்ட   உயர்தர ஆடைகளை 
 அவற்றை அணியாமலிருப்பது
நல்அமல்களில் ஒன்று என எண்ணி அணியாமலிருப்பது
#பாவமாகும்.

அழகான அனுமதிக்கப்பட்ட உயர்தர ஆடைகளை அல்லாஹ் தனக்களித்திற்கும் அருட்கொடையை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும். தனது வழிபாட்டிற்கு உதவும்  (தன்னை செல்வந்தன் என எண்ணி தேவையுடையோர் தன்னை அணுகுவார்கள் எனும்) எண்ணத்துடன் அணிந்தால்
அதற்கு #நன்மை கிடைக்கும்.

தன்னுடைய செல்வச் செருக்கைக் காட்ட அணிந்தால் அவன் #பாவியாவான்.

#அகந்தையும் ஆணவமும் கொண்ட வனை அல்லாஹ் விரும்புவதில்லை.
----மஜ்மூஉல் பதாவா
---- கணியூர்  முஹம்மது இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி

Saturday, January 29, 2022

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை
**********************************************************************

கஸஸ் அத்தியாயத்தில் மூஸா நபியின் தாயாரை பார்த்து : அச்சம் கொள்ளாதீர்! கவலை கொள்ளாதீர்! என்று அல்லாஹ் சொல்கிறான்
மர்யம் அத்தியாயத்தில் மர்யம் அவர்களை பார்த்து : கவலைப்படாதீர் என அழைத்து சொன்னான்.
அஹ்ஜாப் அத்தியாயத்தில் நபியின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்

பல வசனங்கள் பெண்கள் கவலைப் பட கூடாது என்ற அர்த்தத்தில் வந்துள்ளன.

ஏனென்றால், பெண்களின் கவலை மிக ஆழமாக இருக்கும்.
கவலை பெண்களின் அழகைப் போக்கி விடும்.
கவலை பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்..
கவலைப் படும் பல பெண்கள் கருத்தரிப்பதில்லை.
கவலைப் படும் பெண்களின் முடி விரைவில் உதிர ஆரம்பிக்கிறது.

கவலை படும் எத்தனையோ பெண்களின் நிறம் மங்கி விடுகின்றது.

கண்ணாடி குடுவைகளிடம் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள்.
முரட்டுத்தனமாக கையாண்டு அவற்றை உடைத்துவிடாதீர்.

வார்த்தையினால் உங்கள் தாயாரை காயப்படுத்தாதீர்.
உங்கள் சகோதரியிடம் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்.
உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர்.
உங்கள் பெண் குழந்தைகளை புன்னகையுடன் அரவணையுங்கள்.
   எப்பொழுதும்  "பெண்களுக்கு நன்மையையே நாடுங்கள" என்ற நபிமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
    ----அரபியிலிருந்து தமிழில் 
கணியூர் இஸ்மாயீல் நாஜி (2015)

Thursday, January 20, 2022

 

 

                                                                துணுக்குகள்

 

 

இன்று அதிகாலை என்னை பிரமிக்க வைத்த அற்புத வரிகள்;
அருள் மறை குர்ஆனில் அல்லாஹ் அனைத்து இடங்களிலும் ظلومات #இருள்கள் என பன்மையிலும்
#நூர் ஒளி என ஒருமையிலும் குறிப்பிட்டுள்ளான்
என்ன காரணம்? இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள் ;
குர்ஆனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று,ஏனென்றால் நேர்வழி (நூர்) என்பது ஒன்றே ஒன்று தான் ஆனால் இருளின் பால் இட்டுச் செல்லும் பாவத்திற்கான வழிகள் பல உள்ளன.எனவேதான் இருள்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்....

 

சற்று முன் படித்ததில் பிடித்தது.

நீ நீர் போன்று இரு,அது தனக்கான பாதையை தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

பாறை போன்று இருக்காதே !...
அது மற்றவர்கள் செல்லும் பாதையையும்
மறைத்துவிடுகிறது.

 

ஹஜரத் அலி ரழி யல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்

:என்னை ஏமன் நாட்டிற்கு காஜி (நீதிபதி )யாக பணியாற்ற அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அனுப்பிய போது நான் கேட்டேன் :

அல்லாஹ்வின் தூதரே !நான் இளைஞன்,நீதி துறையில் எனக்கு அனுபவம் இல்லை ,என்னை அனுப்புகிறீர் களே ?

நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் உன் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவான் ,உன் நாவை உறுதியாக வைத்திருப்பான் .

இருவர் தொடர்பான வழக்கு உன் முன் வந்து அமர்ந்தால் முதலாம் நபரிடம் எப்படி வழக்கின் முழு விவரங்களைக் கேப்பீரோ அதே அளவு மற்றொருவர்

கூ றுவதையும் கேட்காமல் தீர்ப்பளிக்காதீர் ,அதுதான் நீர் என்ன தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதை உனக்குத் தெளிவாக்கும்.

ஹஜரத் அலி ரழி யல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

நான் காஜி யா க இருந்தவரை எனனுடைய தீர்ப்பில் நான் சந்தேகப்பட்டதே இல்லை

நூல்:அபூ தாவுத் 3282

 

எனது நண்பர்களில் இனிமையானவர்
எனக்குசகோதரராகிவிடுகிறார்.
------
என்ன அழகான பதில்
நண்பர்களையும் சகோதரர்களையும் விட்டுக்கொடுக்காத பதில்

 

سئل علي ابن ابي طالب رضي الله عنه من هو الأفضل اخوك أم صديقك،، "قال ما أحلى أخي أن يكون صديقي وما أحلى صديقي أن يكون أخي،،

ஞானத்தின் தலைவாசல் எனப் புகழப்படும் அறிஞர் கலீபா அலி ரழியல்லாஹு அவர்களிடம்

உங்களுடைய சகோதரர் சிறந்தவரா?

உங்கள் நண்பர் சிறந்தவரா ?

எனக் கேட்கப்பட்டது

எனது சகோதர்களில் இனிமையானவர்

எனக்கு நண்பராகிவிடுகிறார்

எனது நண்பர்களில் இனிமையானவர்

எனக்குசகோதரராகிவிடுகிறார்.

------என்ன அழகான பதில்

நண்பர்களையும் சகோதரர்களையும் விட்டுக்கொடுக்காத பதில்.

 

 

வாழ்க்கையில் இரண்டு விடயங்களை எப்பொழுதும நினைவில் வையுங்கள்.

#கோபமாக_இருக்குமபோது்எந்தமுடிவும்_
#எடுக்காதீர்.
#சந்தோஷத்தில்_மிதக்கும்போது_எந்தவாக்குறுதியும்அளிக்காதீர்

 

இன்று என்னை பெரிதும் சிந்திக்க வைத்த ஒரு பெரியாரின் கருத்து
"
நான் பல்வேறு மக்களுடன்பழகியதில் ஒன்றை புரிந்து கொண்டேன் எப்படி அல்லாஹ் மாந்தர்களை செல்வப் பங்கீட்டில் ஏழை என்றும் செல்வந்தன் என்றும் அமைத்திருக்கின்றானோ
அவ்வாறே நற்குணங்களையும் பங்கீடு செய்துள்ளான்
சிலர் நற்குணங்களை ப் பொறுத்தவரை பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் சிலர் வெறும் ஜீரோவாக இருக்கிறார்கள்"

 

عن إبراهيم ابن أدهم، قال: كان يقال ليس شيء أشد على إبليس من العالم الحليم، إن تكلم تكلم بعلم، وإن سكت سكت بحلم.
சகிப்புத்தன்மை மிக்க அறிஞர் மனிதர்களில் இப்லீஸிற்கு மிகப் பெரிய சவால்.(அவரை எளிதில் அவனால் வீழ்த்த முடியாது)
அவர் உரையாடினால் அறிவுப்பூர்வமாக உரையாடுவார்.
அவர் பேசாமல் மவ்னமாக இருந்தால்
அது சகிப்புத்தன்மை யுடன் கூடிய மவ்னமாக இருக்கும்....

-ஞானி மாலிக் பின் தீனார் ரஹீமஹுல்லாஹ் அன்ஹு

 

உங்களைவிட மற்றவர்கள் செல்வச் செழிப்பில் திழைப்பதைக்கண்டு நிராசையடைதீர்.

இந்த வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

அல்லாஹ் கொடுத்ததைக் கொண்டு

திருப்தியடையுங்கள்.

"அல்லாஹ் எனக்குப் போதுமானவன்.

அவன் எனக்கு இன்னும் அதிகம் வழங்குவான்"என சொல்லிக்கொள்ளுங்கள்.

மனதில் அமைதி ஏற்படும்.

وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَيُؤْتِيْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَ رَسُوْلُهٗۙ اِنَّاۤ اِلَى اللّٰهِ رٰغِبُوْنَ‏ 

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு கொண்டு “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து எங்களுக்கு இன்னும் அதிகம் வழங்குவான். அவனுடைய தூதரும் எங்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் ஆவல் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்களேயானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!

(அல்குர்ஆன் : 9:59)

 

📌قال تعالى

﴿ لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ﴾

🔸قال مالك بن دينار - رحمه الله :

إنك إن تنقل الحجارة مع الأبرار خير لك من أن تأكل الحلوى مع الفجار

🔹- تفسير سورة الفرقان للقرطبي -

لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ‌ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏ 

நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.”

(அல்குர்ஆன் : 25:29)

ஞானி மாலிக் பின் தீனார்(ரஹ்)

சொல்கிறார்:

நீ நல்லோர்களுடன் இணைந்து பாறங்கல்லை புரட்டுவது

பாவிகளுடன் இணைந்து

அல்வா சாப்பிடுவதை விட

சிறந்தது.

 

கலீபா மஃமூன் சபையை அலங்கரித்தவர் கணித மேதை அல்கவாரிஜிமி(கி.பி.781)

அவரிடம் ஒரு பெண்ணிற்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்"எனக்கேட்கப்பட்டது.

ஒரு பெண் நல்லொழுக்கமுள்ள குணவதியாக இருந்தால் முதல் மதிப்பெண்ணான ஒன்று கொடு.

அவளே அழகானவளாக இருந்தால்

ஒன்றிக்குப் பக்கத்தில் பூஜ்யத்தைச் சேர் பத்து மதிப்பெண்கள்.

அவளே செல்வம் படைத்தவளாக இருந்தால் இன்னொரு பூஜ்யத்தைச் சேர்த்துக்கொள்.100மதிப்பெண்ணாகும்.

அதே பெண் நல்ல கண்ணியமான பாராம்பரிய வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்தால் இன்னொரு பூஜ்யத்தைச் சேரு 1000மதிப்பெண்கள்.

ஆனால் முதலாம் எண்ணான ஒன்றாம் எண் இல்லையென்றால் அப்பெண் வெறும் பூஜ்யம் தான்.

 

மனதை கட்டுப்படுத்தும்
பயிற்சிகளில் முதலிடம்
மௌனமாக
இருக்கப்பழகுதல்

 

அல்லாஹ் உனக்கென நிர்ணயித்தவை இரண்டு மலைகளுக்கிடையே இருந்தாலும் உனக்குக் கிடைத்துவிடும்.
ஆனால் உனக்கென இல்லாதவை இரண்டு உதடுகளுக்கு மத்தியிலிருந்தாலும் கிடைக்காது

 

மூன்று விடயங்களை ஒரு முஃமினுக்கு பங்களிப்புசெய்யுங்கள்

* அவருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமலாவது இருங்கள்.

* அவருக்கு மகிழ்ச்சியைத் தர இயலாவிட்டாலும் துன்பம் தராமலாவது இருங்கள்

*அவரைப் புகழாவிட்டாலும் அவரை இகழாமலாவது இருங்கள்

--ஞானி யஹ்யா பின் ம ஆத் (ரஹ்)

அரபி டுவிட்டரிலிருந்து கணியூர் நாஜி

 

உண்மையான நண்பன்:
உன்னிடம் ஏதேனும் தவறைக்காணும்போது அதை பிறர்அறியாமல் காலில் போட்டு மிதிப்பான்.
உன்னிடம் காணும் நற்குணங்களை பிறர் அறிய உயர்த்திக்காட்டுவான்.
-----
அல்லாமா இப்னுல் அஸீர்(ரஹ்)

 

திர்ஹமும்,
தினாரும் கெட்ட நண்பர்கள்
நம்மைவிட்டு பிரியாதவரை நமக்கு நன்மை செய்யமாட்டார்கள்.
--
இமாம் ஹஸன் பஸரி(ரஹ்)

 

எவனுக்கு முஃமின்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை அவனுக்கும் மகிழ்ச்சியை அளிக்க வில்லையோ,
முஃமின்களுக்கு துன்பத்தைத் தருபவை அவனுக்கும் துன்பத்தைத் தரவில்லையோ
#அவன்_அவர்களைச்சேர்ந்தவனல்ல.
----
இமாம் இப்னுத்தைமிய்யா(ரஹ்)

 

لو أنكم توكلتم على الله حق توكله

لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا

سبحان مقسم الارزاق 😍

நீங்கள் அல்லாஹ் வின் மீது தவக்கல் -நம்பிக்கை வைக்கவேண்டிய முறையில் வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் உங்களுக்கும் உணவளிப்பான்.

அவைகள் காலை பசியுடன் கூட்டை விட்டு வெளியே பறக்கின்றன,மாலை வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன.

------நபிமொழி

வாழ்வாதாரங்களை பங்கீடு செய்யும் அல்லாஹ் பரிசுத்தமானவன்

 

வயோதிகரின் உள்ளம் இரண்டு விடையங்களை நேசிப்பதில் இளமையாகவே இருக்கும்.
#நீண்ட_வாழ்நாட்கள்

 

‏عن الشافعي أنه قال :

-

اجتناب المعاصي ، و ترك مالا يعنيك ينور القلب.

-

📝سير أعلام النبلاء : ١٠\٩٨.

பாவங்களை தவிர்த்தல்,

உனக்குத் தேவையில்லாத

விடயங்களை விட்டுவிடல்

#உள்ளத்தை_ஒளிமயமாக்கும்

--இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்

#இமாம்அவர்களின் இந்த ஆலோசனை முகநூல் பதிவாளர்களுக்கும் பொருந்தும்

 

பொருளாதார உதவியை வைத்து நட்பை எடைபோடாதீர்.
பெரும்பாலும் உண்மையான நண்பர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.-
கலிபா அலி(ரழி)அவர்கள்.

 

 

நம்மை மற்றவர்கள் புகழ்வதைக் கண்டு அகம்பாவம் கொள்ள வேண்டாம்.

நம்மிடமுள்ள நல்லவைகளை மட்டுமே அல்லாஹ் வெளிப்படுத்தியால் இந்தப்புகழும்,பாராட்டும்.

நம்முள்ளே மறைந்திருக்கும்

கெட்டவைகளை அவன் வெளியாக்கினால் என்னாகும்?

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்,

இஸ்திஃபார் செய்வோம்.

 

கடந்த கால வரலாற்றிலிருந்து அதிக பட்சம் நாம் பெறும் பாடம் என்னவென்றால்
மனிதன் கடந்தகால வரலாற்றிலிருந்து பெரும்பாலும் பாடம் கற்றுக்கொள்ளவதில்லை
என்பதுதான்

 

‏قال الحسن بن علي رضي الله عنهما:

"لو أن رجلا شتمني في أذني هذه،

واعتذر في أذني الأخرى،لقبلت عذره"

[اﻵداب ﻹبن مفلح: 1 /319]

இவரல்லவா பெரிய மனிதர்?

********************************

ஒருவர் எனது இந்த காதில் என்னை ஏசிபேசிவிட்டு, இன்னொரு காதில் மன்னிப்பு கேட்டால் உடனடியாக அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வேன்.

------ கலிபா அலி(ரழி)அவர்களின் மகனார் ஹஸன் (ரழி)அவர்கள்.

 ------------------------------------------------------------------------------------------------------------------from 6thaugust to 9th july
பாவங்களை தவிர்த்தல்,
உனக்குத் தேவையில்லாத
விடயங்களை விட்டுவிடல்
#உள்ளத்தை_ஒளிமயமாக்கும்
--
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்

#இமாம்அவர்களின் இந்த ஆலோசனை முகநூல் பதிவாளர்களுக்கும் பொருந்தும்

ஹஜரத் அலி ரழி யல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :
நான் காஜி யா க இருந்தவரை எனனுடைய தீர்ப்பில் நான் சந்தேகப்பட்டதே இல்லை


----
மீள். கணியூர் நாஜி