Thursday, September 28, 2023

மீலாதுந்நபி தின நலத்திட்டங்கள்

#இருபத்துஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சிறப்பு நிகழ்வு.

1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்விற்குப் பின் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இறுக்கமான மனநிலை நிலவியது.

#சிதம்பரம் பல்வேறு சமுதாயங்கள் இரண்டற கலந்துவாழும் நகரம். சமுதாய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக விளங்கும் நகரம்.
தொடர்ந்து முஸ்லிம்களுக்கும் பிற சமுதாயத்திற்குமிடையே நிகழும் நல்லுறவை மேம்படுத்தவும் இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேயத்தை அனைவரிடமும் கொண்டு செல்லும் நலத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கோடு சிதம்பர நகர அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாஅத்தின் முன்னிலையில் 16/03/1998ல்
#சிதம்பரம்_நகர_இஸ்லாமிய_ஐக்கியபேரவை உருவாக்கப்பட்டது.
அதன் தலைவராக 
மர்ஹும். டவுன் நாயிப் காஜி. அப்துஸ்ஸத்தார் ஸாஹிப் அவர்களும்
செயலாளராக,
மவ்லவீ. கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயியும்
பொருளாலராக,
கவிஞர். E.மஹ்பூப் ஹுஸைன் (ஜவ்ஹர்)
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேரவையின் முதல் நிகழ்வாக, 17/07/1998ல் அனைத்து மக்களுக்கும் அறிமுகமான #மீலாதுநபி விடுமுறை நாள் வந்தது.
அந்நாளை  #எல்லோருக்கும்சொந்தம்நபிகள்நாயகம் ﷺ என்ற தலைப்பில் அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தும் நலத்திட்டங்களை  செயல்படுத்த முடிவெடுத்து அந்நாளில் நோயாளிகள், ஆதரவற்ற முதியோர்கள்
மாற்றுத்திறனாளி கள்
போன்றவர்களைப் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதென்று முடிவெடுத்து செயல் படுத்த முனைந்தோம்
மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது

அந்த சேவை 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது

28/09/23 அன்று 
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை உன் நோயாளிகள் 200 பேருக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது. அன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

 மாரியப்ப நகர் #அன்பகம்முதியோர் இல்லம்,
 இண்டேன் கேஸ் பின்புறம் அமைந்துள்ள #CCWE #மனவளர்ச்சிகுன்றியமாணவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிரட், பழங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹபூப் உசேன் தலைமை வகித்தார். மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி, ஃபைசல் மஹால் முஹம்மது யாசீன் ஆசியன் ஷாப்பிங் மால் இக்பால், நவாப் பள்ளி ஜாக்கீர் உசேன், சையத் மொய்தீன், மிலன் ரெடிமேட் முஹம்மது எஹ்யா, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்கர் அலி பட்டேல், கண்காணிப்பாளர் முஹம்மது அலிகான், லால்பேட்டை  ஏ.எஸ்.அஹமது, எள்ளேரி ஆரிஃபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை #மருத்துவர் #சிவகாமி, தலைமை செவிலியர் #இமாக்குலேட், முஹம்மது ஜக்கரியா,பி.அப்துல்ரஹ்மான், முஸ்தபா, முஸம்மில் உசேன், முதஸ்ஸிர் உசேன், மௌலவி ஹாபிள் ஷாஹுல் ஹமீது, இமாம் ஹஜ் முஹம்மது ரப்பானி, தைய்யுப் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.

Friday, September 22, 2023

போட்டோ எடுப்பது தொடர்பாக

போட்டோ தொடர்பாக ஆலிம்களை கிண்டல் செய்து பதிவிட்டு தங்களுக்கு தாங்களே சபாஷ் என முதுகை தட்டிக் கொள்ளும் நவீன அறிவு ஜீவி களுக்கு சில கேள்விகள்.
போட்டோ எடுப்பது ஹராம் என கொடுக்கப்பட்ட பத்வாவை படித்து பார்த்துள்ளீர்களா?
அதில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள் தெரியுமா?
ஒன்றை ஹராம் எனச் சொல்லும் போது அவற்றிகு சில விதி விலக்குகளும் தரப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்த பத்வா இன்னும் நடைமுறையிலிருக்கிறது, வாபஸ் பெறப்படவில்லை என்றாவது உங்களுக்குத்தெரியுமா?
அல்லாஹ்வும் ரசூலும் ஒன்றை ஹராம் என அறிவித்ததற்கும்,
குர்ஆனில்,ஹதீஸில்  ஹலால் என்றோ,ஹராம் என்றோஅறிவிக்கப்படாத ஒன்றை தங்களது இஜ்திஹா தின் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் ஹராம் என அறிவிப்பதறகுமுள்ள வித்தியாசம் என்ன? என்பது தெரியுமா?
அவசியமின்றி போட்டோ எடுப்பது விரும்பத்தக்கதல்ல என்ற கொளகையுடன் தங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்காத பலமூத்த மார்க்க அறிஞர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
போட்டோ எடுப்பது தொடர்பாக விரிவான விளக்ங்களுடன் உருது நூல்கள் இருக்கின்றன அவகளைப் படியுங்கள். அல்லது மார்க்கத்தை முறையாக கற்றரிந்த மார்க்க அறிஞர்களிடம் நான் தொடுத்துள்ள வினாக்களுக்கு விடை தேட முயலுங்கள்.
ஏட்டுச் சுரைக்காய் க றிக்குதவாது
யூடூப் பார்த்துக் கொண்டு சுயமாக பிரசவம் பார்த்தவனைபோல  வெறும் தமிழில் உள்ள சட்ட நூல்களை படித்து விட்டு நானும் அறிஞன்தான் என ஆலிம்களை கிண்டல் செய்யாதீர்கள்
லட்சக்கணக்கான முஃமின்களுக்கு வழிகாட்டிகளான 
 மூத்தஅறிஞர்கள் ஒரு கருத்தை சொல்லி சென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கேதேனும் காரணம் இருக்கும் என்றுதான் ஒரு அறிவுள்ளவன்  சிந்திப்பான்  ஆலிம்களின்மீது வன்மம் உள்ளவர்கள் தாம்  சமயம் கிடைக்கபொழுதெல்லாம் அவர்களை நையாண்டி செய்வார்கள

அல்லாஹ் நன்கறிந்தவன் எண்ணத்திற்கேற்ப கூலி வழங்குவான்.

Thursday, July 13, 2023

ஆலிம்கள் பார்க்கப்படும் இன்றி வேறு பணிகளில் ஈடுபடலாமா

ஆலிம்கள் மார்க்கப் பணியின்றி
 வேறு பணிகளில் ஈடுபடலாமா?
என் உஸ்தாதுமார்கள் சொன்ன பதில்;
-------
 லால்பேட்டையிலும்,
தேவ்பந்த் மதரஸாவிலும் பட்டங்களை வாங்கியபின்  #நீடூர்(ஏழு ஆண்டுகள்,#ஏர்வாடி(களக்காடு)(2ஆண்டுகள்) #தொண்டி(இரண்டு மாதங்கள்) #திருப்பரங்குன்றம் (ஆறுமாதம்)மதரஸாக்களில் பணியாற்றிய பின் தொடர்ந்து மதரஸாக்களில் பணியாற்ற பல் வேறு காரணங்களால் மனம் விரும்பவில்லை.
வெளிநாடு போகலாம் என முடிவெடுத்து என் உஸ்தாது பெருந்தகைகளிடம் கேட்டேன் 
கண்ணியமிகு உஸ்தாத்  #லால்பேட்டைஅப்துல்லாஹ் ஹஜரத் அவர்கள் கோபமாக "உனக்கு மதரஸாவில் இலவசமாக  உணவளித்தவர்கள் நீ மார்க்கப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற நிய்யத்தில்தான் உதவி செய்தார்கள் அதற்கு மாற்றமாக வேறு பணிக்களுக்குச் செல்வது அவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்" என்றார்கள்.
என் மீது எப்பொழுதும் கரிசனையுடன் ஆலோசனை தரும் மரியாதைக்குறிய #உஸ்தாத் அப்துல் ஜமீல் ஹஜரத் அவர்கள் வேறு பணிகளுக்குச் சென்றால் ஆலிம்களுக்குள்ள மரியாதை கிடைக்காது
பொறுமையாக மதரஸாபணிகளிலேயே ஈடுபடுங்கள் என்றார்கள்.

அப்பொழுது #மறுமலர்ச்சி வார இதழுக்கு உருதுவிலிருந்து மொழியாக்கம் செய்யும் திறமையுள்ள மவ்லவி துணைஆசிரியர் பணிக்குத் தேவை என விளம்பரம் வந்தது.
அது தொடர்பாக ஆசிரியர் நாவலர் யூசுப் ஸாஹிபிடமும் பேசினேன்.
முஸ்லிம் லீக்கில் இணைந்து அரசியலில் ஈடுபடலாமென ஆர்வம் வந்தது.
எதற்கும் #சொல்லின்செல்வர் அண்ணண் எம்.எம். பீர்முஹம்மது சாஹிபிடம் கேட்போம் என கடிதம் எழுதினேன்.

"அரசியல் ஆபத்தான சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு துறை உங்களைப் போன்ற எதார்த்தமான மார்க்க அறிஞர்களை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டு உங்களை வளரவிடமாட்டார்கள்.
ஆசிரியர் பணி உன்னதமானது. உங்களின் சுதந்திர மனப்பான்மையைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆசியர் பணியையே தொடருங்கள் என்று கடிதம் எழுதினார். 
அதனைத் தொடர்ந்து கிளியனூர் மதரஸாஇரண்டு ஆண்டுகள் ,அத்திக்கடை மதரஸா ஓராண்டு என பணியாற்றினேன்.
தொடர்ந்து பணியாற்ற விருப்ப மின்றி நண்பர்களின் உதவியுடன் டிராவல்ஸ்,
பின் கூரியர் சர்வீஸ் என முழுநேரமாக தொழிலில் இறங்கினேன்.

இருப்பினும் எனக்கு உணவளித்தவர்களின் எண்ணம் நிறைவேற உயிர் உள்ளவரை எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் மார்க்கப் பணியாற்றவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன்.

தஃவா பணியில் ஈடுபட்டேன்,மார்க்கமேடைகளில் அன்பளிப்புகள் வாங்காமல் உரையாற்றி வருகிறேன். ஜும்மா உரையும் வாய்ப்பு கிடைக்கும் போது  செய்து வருகிறேன்.
ஆலிம்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக என்ன பணி செய்தாலும் ஏதோ ஒரு வகையில் மார்க்கப் பணி செய்வது கடமையாகும்.
 ---கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, July 9, 2023

‏﴿ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللهِ عَلَيْكُمْ ﴾

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை நினைவு கூறுங்கள்.35:3
--------

இந்த வசனம் அல்லாஹ் நமக்களித்துள்ள கணக்கிலடங்காத அருட்பேறுகளை எண்ணிப்பார்த்து அவனை புகழ்வதையும்,அவனுக்கு நன்றி செலுத்துவதையும்  அல்லாஹ் விரும்புகிறான்"என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நண்பர்கள் இருவர் சந்திக்கும் போது தங்களுக்கேற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார்களே தவிர அல்லாஹ்  தங்களுக்கு அளித்துள்ள நிஃமத்துகளைப் பற்றிபேசுவதில்லை. 

சிரமங்களைப் பற்றியே சிந்திப்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

 انْظُرْ إِلَى مَنْ هُوَ دُونَكَ ، وَلا تَنْظُرْ إِلَى مَنْ هُوَ فَوْقَكَ ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لا تَزْدَرِيَ نِعْمَةَ اللَّهِ عِنْدَكَ
உன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவனைப் பார். உன்னை விட மேலான நிலைமையில் இருப்பவனைப் பார்க்காதே!
அந்தப் பார்வைதான் உன்னிடம் இருக்கும்  அல்லாஹ் அளித்த வளங்களை லேசாக கருதாமலிருக்கும்  நன்மையை விளைவிக்கும்." என்றார்கள் நபி பெருமான் صلي الله عليه و سلمஅவர்கள்
(ரியாளுஸ்ஸாலிஹீன்)
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென அகமகிழ்க" என்றான் ஒரு தமிழ் புலவன்.

நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பொழுது அல்லாஹ் விடம் ஏற்கனவே அவன் அளித்த அருட்கொடைகளை நினைத்து நன்றிசெலுத்திவிட்டு பின் நம்முடையே தேவைகளை அல்லாஹ் வின் முன் வைத்தால் நிச்சயம் அல்லாஹ் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவான்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Friday, June 30, 2023

குர்ஆனைக் கொண்டு உள் நோயைக் குணப்படுத்துவோம்


#குர்ஆனைக் கொண்டு
 நம் உள நோயைக் 
குணப்படுத்துவோம்.
****************
நபி பேரர் #இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்) சொல்கிறார்கள்:
 தனக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என அச்சப்படும் நிலையில்
 حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏ 
#ஹஸ்புனல்லாஹ் வநிஃமல் வகீல் 
 “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” 
(அல்குர்ஆன் : 3:173) என சொல்லாத ஒருவனைக் கண்டு நான் வியப்படைகிறேன்,
ஏனென்றால் அந்த வசனத்தின் தொடர்ச்சியாக அவ்வாறு சொன்னவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்,

فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ 
இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. 
(அல்குர்ஆன் : 3:174)

#கடந்த கால செயல்களினால் துக்கப்படும்  ஒருவன் 

 لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌  ‌‏ 
#லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாழிமீன்

“உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.”
(அல்குர்ஆன் : 21:87)
எனும்  யூனுஸ் நபி(அலை)அவர்களின் பாவமன்னிப்பை கேட்காத ஒருவனைப் பற்றி வியப்படைகிறேன்,

ஏனெனில் இந்த வசனத்தை அடுத்து அல்லாஹ் சொல்கிறான்,

فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏ 
அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம்.
(அல்குர்ஆன் : 21:88)

சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சியாலும்,மோசடி பேர்வழிகளின் மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் ,

 اُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ‏ 
#உபவ்விளு அம்ரீ இலல்லாஹ்
 இன்னல்லாஹ பஸீரும் பில் இபாத்
என் விவகாரத்தை அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன்
 திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 40:44)

என்ற குர்ஆனின் வசனத்தை நினைவு கூறாமல் இருப்பதைக் கண்டு வியப்படைகிறேன், ஏனென்றால் அவ்வாறு பொறுப்பை அல்லாஹ் விடம் ஒப்படைத்த மூஸாநபி(அலை)அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்,
فَوَقٰٮهُ اللّٰهُ سَيِّاٰتِ مَا مَكَرُوْا  
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். 
(அல்குர்ஆன் : 40:45)

#நோய்வாய்பட்டு துன்புறும் ஒருவன் 
அய்யூப் நபி(அலை)அவர்களின் 
 اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ‌‏

#ரப்பி)இன்னீ மஸ்ஸனியல் ளுர்ரு வ அன்த அர்ஹமர்ராஹிமீன்
 “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 
(அல்குர்ஆன் : 21:83)

என்ற பிரார்த்தனையை அல்லாஹ் விடம் இறைஞ்சாமல் இருப்பதை எண்ணி வியப்படைகிறேன், 
ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்,
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ‌ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ و مِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ‏ 
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 21:84)
------ عالج نفسك بالقران
என்ற நூலிலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, January 15, 2023

உங்கள் வாழ்க்கையில் எதிரி

உங்கள் வாழ்க்கையில் #எதிரி,   
  #விரோதி,
 #பகைவன்,
#வெறுப்பவன்,
#பொறாமைக்காரன், #போட்டியாளன்,   
  உங்கள் பணியில் #குறை கண்டுபிடிப்பவன்,  
 உங்கள் #முதுகிற்குப்பின் பேசுபவன்
இவர்கள் இருப்பது இயற்கை ..
இது உங்களுக்கு அளப்பரிய நன்மைகள்  கிடைப்பதற்காகத்தான்.

சிந்தித்தித்துப்பாருங்கள்,
நபிமார்களுக்கும் எதிரிகள் இருப்பதாக குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ 
இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம். 
(அல்குர்ஆன் : 6:112)

எதுவரை என்றால் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் நோக்கி"
என் ரப்பே! எனக்கு எதிரிகளே இல்லாமல் ஆக்கு" எனப் பிரார்த்தித்த போது அல்லாஹ் சொன்னானாம்
"எனக்கே எதிரிகள் இல்லாமல் இல்லையே" என்று.
கருத்தென்ன வென்றால் அகிலமனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்விற்கே எதிரிகள் இருக்கும்போது
நமக்கு இருக்கக்கூடாது என ஆசைப்படுவீர்களா என்ன?

உங்களுக்கு எதிரிகளே இல்லை என்பது நடக்காத காரியம்.
உங்களின் மீது பொறாமை கொள்ளாதவன் இருப்பான் என்பது முடியாத காரியம்.
உங்களைக் கண்டு எரிச்சல் படாதவனே இல்லை என்பது நடக்காத காரியம்

இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான ஸய்யித்னா உமர்(ரழி) அவர்கள் சொல்கிறார்கள்:
 "ஒருவனிடம் ஒரு அருட்கொடை இருந்தால்  அதைக் கண்டு பொறாமை கொள்ளபவன் ஒருவன் இருப்பான்.
ஒருவன் ஈட்டியைப் போல் நேராக இருந்தாலும்  அவனையும் குறை சொல்பவன் ஒருவன் இருப்பான்"

ஒருவனிடம் செல்வம் இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் அறிவாற்றல் இருந்தால் அவனுக்கொரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் தனித்தன்மை இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்
நீங்கள் ஒன்றில் வெற்றி பெற்றால் உங்களுக்கு ஒரு விரோதி உருவாகிவிடுவான்.
இது இயற்கையின் நியதி.இது வாழ்க்கையின் நடைமுறை.

எனவே அமைதியாக இருங்கள்
உங்களுக்கு விரோதிகளும் குறை சொல்பவர்களும் எதிரிகளும் இருப்பது  எச்சரிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு வழிவகுக்கும் 
 #அஷ்ஷைக்_ராத்திப்அந்நாபிலிஸி
#கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி,  காசிமி
.

எதிரி இல்லாதவனே இல்லை

உங்கள் வாழ்க்கையில் #எதிரி,   
  #விரோதி,
 #பகைவன்,
#வெறுப்பவன்,
#பொறாமைக்காரன், #போட்டியாளன்,   
  உங்கள் பணியில் #குறை கண்டுபிடிப்பவன்,  
 உங்கள் #முதுகிற்குப்பின் பேசுபவன்
இவர்கள் இருப்பது இயற்கை ..
இது உங்களுக்கு அளப்பரிய நன்மைகள்  கிடைப்பதற்காகத்தான்.

சிந்தித்தித்துப்பாருங்கள்,
நபிமார்களுக்கும் எதிரிகள் இருப்பதாக குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ 
இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம். 
(அல்குர்ஆன் : 6:112)

எதுவரை என்றால் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் நோக்கி"
என் ரப்பே! எனக்கு எதிரிகளே இல்லாமல் ஆக்கு" எனப் பிரார்த்தித்த போது அல்லாஹ் சொன்னானாம்
"எனக்கே எதிரிகள் இல்லாமல் இல்லையே" என்று.
கருத்தென்ன வென்றால் அகிலமனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்விற்கே எதிரிகள் இருக்கும்போது
நமக்கு இருக்கக்கூடாது என ஆசைப்படுவீர்களா என்ன?

உங்களுக்கு எதிரிகளே இல்லை என்பது நடக்காத காரியம்.
உங்களின் மீது பொறாமை கொள்ளாதவன் இருப்பான் என்பது முடியாத காரியம்.
உங்களைக் கண்டு எரிச்சல் படாதவனே இல்லை என்பது நடக்காத காரியம்

இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான ஸய்யித்னா உமர்(ரழி) அவர்கள் சொல்கிறார்கள்:
 "ஒருவனிடம் ஒரு அருட்கொடை இருந்தால்  அதைக் கண்டு பொறாமை கொள்ளபவன் ஒருவன் இருப்பான்.
ஒருவன் ஈட்டியைப் போல் நேராக இருந்தாலும்  அவனையும் குறை சொல்பவன் ஒருவன் இருப்பான்"

ஒருவனிடம் செல்வம் இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் அறிவாற்றல் இருந்தால் அவனுக்கொரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் தனித்தன்மை இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்
நீங்கள் ஒன்றில் வெற்றி பெற்றால் உங்களுக்கு ஒரு விரோதி உருவாகிவிடுவான்.
இது இயற்கையின் நியதி.இது வாழ்க்கையின் நடைமுறை.

எனவே அமைதியாக இருங்கள்
உங்களுக்கு விரோதிகளும் குறை சொல்பவர்களும் எதிரிகளும் இருப்பது  எச்சரிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு வழிவகுக்கும் 
 #அஷ்ஷைக்_ராத்திப்அந்நாபிலிஸி
#கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி,  காசிமி
.