பெற்றோரை பேணுவதும் ஜிஹாத்
--------------------------------------===============
--------------------------------------===============
5972. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?“ என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)“ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு“ என்றார்கள்.3
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
4983. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அறப்போரில் கலந்துகொள்ள அனுமதி கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ”ஆம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ”அவ்வாறாயின் (திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு” என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
