Friday, October 30, 2020

டெல்லி #ஜாமியா_மில்லியா #இஸ்லாமியா பல்கலைக்கழகம்

 


#உலமாக்களும் #முற்போக்கு சிந்தனைமிக்க முஸ்லிம் கல்வியாளர்களும் இணைந்து நூறு ஆண்டுகளுக்கு முன்கி.பி. 1920 ல் துவக்கிய டெல்லி #ஜாமியா_மில்லியா #இஸ்லாமியா பல்கலைக்கழகம் தேசிய அளவில் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இவ்வாண்டு (2020)10-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஜாமியா பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த சாதனையை செய்திருக்கிறது
சென்ற ஆண்டு நடைபெற்ற சிஐஏ போராட்டத்தில் ஜாமியா மாணவர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தனர்
இன்றுவரை சஃபூரா போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் வைத்து பாஸிஸ அரசு துன்புறுத்தி வருகிறது

இந்த பல்கலைக் கழகத்தை முடக்கிவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜாமியா தீவிரவாதிகளை உருவாக்குகிறது
என டெல்லி தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கிடையே மதக்கலவரத்தை உருவாக்க முயற்சித்தனர்.
அதை இந்து மாணவர்களே முறியடித்தனர்.

ஜாமியாவை அவர்கள் வெறுப்பதற்கு அடிப்படைக் காரணம் ஜாமியாவின் வரலாற்று பின்னணி தான்.

ஜாமியா #1920 இல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின்போது துவக்கப்பட்டது
ஆங்கிலேயர்களின் துணையுடன் நடக்கும் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் வெளியே வரவேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் தீர்மானம் இயற்றியது அந்த தீர்மானத்தை மால்டா சிறையிலிருந்து விடுதலையாகி வந்த வந்த தாருல் உலூம்தேவ்பந்த் தலைமை ஆசிரியர் #மௌலானா_மஹ்மூதுல்ஹஸன் #தேவ்பந்தி அவர்கள்,
"ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது முஸ்லிம்கள் மீது கட்டாய கடமை எனவே அவர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்
மூளையை மழுங்க வைத்து தனது அடிமையாக வைத்திருக்கும் இஸ்லாமிய கொள்கை களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானபாடத்திட்டத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என பத்வா வழங்கினார்.

(ஆங்கில மொழியைக் கற்கக் கூடாது என்றல்ல.)
(After returning to British India, Mahmud al-Hasan joined the Khilafat movement. He also issued his famous fatwa (legal opinion on Islamic law) of non-cooperation against the British rule in India.[
"Maulana Mahmud al-Hasan (1851-1920)". Jamia Millia Islamia website. 11 November 2004.)

பத்வா வெளியிட்ட பின் மவ்லானா அவர்கள், காந்திஜியுடன்
அப்போது வெள்ளையர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட Muhammadan Anglo-Oriental College (தற்பொழுது அலிகர் முஸ்லிம் பல் கலைக் கழகம்)இருக்கும் அலிகர் நகருக்கு தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாது சென்று அங்குள்ள பேராசிரியர்களையும்,மாணவர்களையும்
சந்தித்துப் பேசினார்கள்.
Muhammadan Anglo-Oriental College நிர்வாகம் பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக மாணவர்களும்,பேராசிரியர்களும் உணர்ந்ததால்
அவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒத்துழைப்பு நல்கினர்.
அதேநேரம்
அரசாங்க செல்வாக்கிலிருந்து விடுபடும் ஒரு புதிய தேசிய முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கான தேவையை சில மாணவர்களின் கோரிக்கையின் வாயிலாக உணரப்பட்டது

அதற்காக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கவேண்டும் என முடிவெடுத்து
மேறகத்திய கல்வியில் ஆர்வமுடைய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் இணைந்து அலிகரில் ஜாமியாவிற்காக29 October 1920. ல் மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்

அன்றைய ஜாமியா விற்கு அடித்தள மிட்டவர்கள்

#மவ்லானா_முஹம்மதுஅலி #ஜவ்ஹர்
,#டாக்டர்_முக்தார்_அப்பாஸ்அன்சாரி
#கவிஞர்அல்லாமா_இக்பால்,
#முப்திகிபாயத்துல்லாஹ்,
#மவ்லானாஅப்துல்பாரிபரங்மஹாலி,
#மவலானாசய்யித்சுலைமான்ந்த்வி,
#மவ்லானாஅபுல்கலாம்ஆஜாத்,
#மவலானா_ஹுஸைன்அஹ்மத்_மதனி
#ஹகீம்அஜ்மல்கான்,
#நவாப்இஸ்மாயீல்கான் மற்றும் பலர்.

#காந்திஜிஅவர்களும்
#கவிஞர்
#ரவீந்திரநாத்தாகூர் அவர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.
கவிஞர் தாகூர் அவர்கள்#
#one_of_the_most_progressive_educational
institutions_of_india

"இந்தியாவின் மிகவும் முற்போக்கான கல்வி நிறுவனங்களில் ஒன்று".
என பாராட்டினார்

அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்களின் தலைமை உரையை மவ்லானா ஷப்பிர் அஹ்மத் உஸ்மானி அவர்கள் வாசித்தார்கள்
அந்தஉரையில் இந்த நிறுவனத்தின் நோக்கம் சமூகத்திற்கு சேவை செய்யும் ,தீமைகளை எதிர்த்துப் போராடும் மாணவர்களை உருவாக்குவதோடு இஸலாமிய விழிமியங்களையும் பாதுகாக்கும்.
இந்த நிறுவனம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுதரணமாக திகழும்."
எனக் குறிப்பிட்டார்கள்

ஜாமியாவிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான (மேனாள் குடியரசு தலைவர்) #டாக்டர்ஜாகிர்ஹுஸைன் "ஜாமியாவின் நோக்கத்தை இவ்வாறு எழுதுகிறார்

"ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இயக்கம் கல்வி மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கான போராட்டமாகும். இது இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு வரைபடத்தைத் தயாரிக்கும், ஆனால் அதே நேரத்தில் பொதுவான இந்தியர்களுக்கான தேசிய கலாச்சாரத்தை உருவாக்கும். உண்மையான மதக் கல்வி இந்திய முஸ்லிம்களிடையே தேசபக்தியையும் தேசிய ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் என்ற சிந்தனையின் அடித்தளத்தை அமைக்கும், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான நாடுகளின் ஒத்துழைப்பில் தனது பங்கை வகிக்கும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் பங்கெடுப்பதில் பெருமிதம் கொள்ளும் . ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை ஸ்தாபிப்பதன் நோக்கம், இந்திய முஸ்லிம்களுக்கான பொதுவான பாடத்திட்டத்தை எதிர்கால சவால்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, எதிர்காலத்தில் எஜமானர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவதும் ஆகும்.
#ஹக்கீம் அஜ்மல் கான் முதல் chancellor ஆகவும்,#மவ்லானா முஹம்மது அலி ஜவகர்Vice Chancellorஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

1926ல் ஜெர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த #பெர்லின் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற #டாக்டஜாஹிர்ஹுசைன்,
கல்வியல்துறையில் Ph.D.முடித்திருந்த #டாக்டர்ஆபித்ஹுஸைன்
ஆக்ஸ்போர்டின் வரலாற்று அறிஞர்
#முஹம்மதுமுஜீப் ஆகியோர்
பேராசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற வந்தனர்.
(இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே ஊதியத்தில் பணியாற்றினர்)

1928ல் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் vice chancellorபதவி ஏற்ற பின் ஜாமியா பல பொருளாதர சிக்கல்களுக்கிடையேயும் வளர்ந்தது
1936ல் ஜாமியா டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1939ம் வருடம், இளவயதிலேயே இஸ்லாமை ஏற்றவர் தத்துவஞானி,,சிறந்த கல்விமான்,சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் இருப்பவர் எனும் பல சிறப்புகளைக் கொண்ட
#மவ்லானா_உபைதுல்லாஹ்சிந்தி (1872-1944) அவர்கள் டாக்டர் ஜாகிர் ஹுசைனின் அழைப்பின் பேரில் ஜாமியாவில் தங்கி குறைந்த ஊதியத்தில் பணியாற்றினார். #ஷாவாலியுல்லாஹ்(ரஹ்) அவர்கள் பின்பற்றிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய விழுமியங்களையும்,கொள்கைகளையும் ஆய்வு செய்யும் islamic studies என்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கு #பைத்துல்ஹிக்மா எனபெயரிட்டார்.
அந்தத் துறை இன்றுவரை நடைபெற்று வருகிறது

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன் 1946ல் ஜாமியாவின்
இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
அப்பொழுது சுதந்திரப் போராட்டம் கொதிநிலையில் இருந்தது.

பாக்கிஸ்தான் வேண்டுமா? வேண்டாமா என்ற பிரச்சனையால் முஸ்லிம் சமுதாயம் பிளவுண்டு கிடந்தது.
இந்நிலையில் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தலைவராக வீற்றிருந்த விழாமேடையில்
இருதுருவங்களாக இருந்த தலைவர்கள் ஜாஹிர்ஹுஸைன் அவர்ளின் இரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
ஒருபக்கம் #முஹம்மதுஅலிஜின்னாசாஹிபும்
#லியாகத்அலிகானும் அமர்ந்திருக்க மறுபக்கம் #பண்டிட்_ஐவஹர்லால்நேருவும்
#ராஜாஜியும் அமர்ந்திருந்தனர்.
இது ஜாமியாவின் சிறப்பினை உணர்த்துகிறது.

1947ல் இந்தியப்பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஜாமியா பெரும் சேதத்தைச் சந்தித்தது.
பல்லாயிரம் நூல்களைக் கொண்ட ஜாமியாவின் நூலகம் முற்றிலும் தீக்கிரையானது.

சுதந்திர இந்தியாவில் ஜாமியாவின் வளர்சசி பற்றி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, October 18, 2020

நபிகளாரின் மீது நாம் வைக்கும் அன்பு எந்த வகையைச் சேர்ந்தது?

பெருமானார் ﷺ அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எந்த வகையைச் சேர்ந்தது?
 ------ கணியூர் இஸ்மாயீல் நாஜி யின் ஜும்மா உரை(15/11/2019)
-----------------------------     
       "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் உண்மையான முஃமினாக ஆகமாட்டார்"என அண்ணல்நபிﷺஅவர்கள் நவின்றுள்ளார்கள்.

       ஒருவரின் மீது நாம்வைக்கும் அன்பு பல காரணத்தினால் ஏற்படலாம்.
 இந்த நபிமொழி நம்மைப் பெற்றெடுத்த தந்தையை விட,நாம் ஈன்றெடுத்த பிள்ளைகளை விடவும் நபி அவர்களின் மீது அன்பு கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.

      தந்தையின் மீதும்,பிள்ளைகளின் மீதும் நமக்கேற்படும் பாசம் இயல்பானது. நம்மையறியாமலேயே ஏற்படுவது. அதற்கு அரபியில் '#ஹுப்புத்தபஈ' என்பார்கள்.

      அத்தகைய அன்பை நம்மால் அண்ணலாரின் மீது வைக்க முடியுமா?
முடியும் என நபித்தோழர்களின்  செயல்கள் நமக்குக் காட்டுகின்றன.

      புகாரி ஷரீபில் வருகிறது. நபித் தோழர் #அபுதல்ஹா(ரழி) சொல்கிறார்,கைபர் போர் முடிந்து நபிபெருமான்ﷺ அவர்களும்,அவர்களின் துணைவியார் #ஸபிய்யா(ரழி) அவர்களும் ஒரு ஒட்டகத்தில் எனக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள். நான் வேறொரு ஒட்டகத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தேன். திடீரென ஒட்டகம் காலிடரி கீழே சாய நபிஅவர்கள் ஒருபக்கமும்,துணைவியார் சற்றுத் தள்ளியும் கீழே விழுந்தார்கள்.

   இதைப் பார்த்த நான் பதறிப் போய் என்னையறியாமலேயே நபிஅவர்கள் விழுந்ததைப் போன்றே பூமியில் நானும். விழுந்தேன். (அதாவது என் ஒட்டகத்தை நிறுத்திகீழே இறங்க முற்படாமல் நபியவர்கள் விழுந்ததைப் போன்றே கீழே விழுந்தேன்)
     அண்ணலாரின் அருகே சென்று 'காயம் ஏதேனும் ஏற்பட்டதா நபியவர்களே என்று கேட்டேன்.
நபியவர்கள், ஸபிய்யா அவர்களைப் பார் என்று சொன்னார்கள்.

#அபுதல்ஹா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். 'நான் என் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அன்னையின் அருகில் சென்றேன். அந்த துணியால் அவர்கள் முகத்தை மூடி அவர்கள் கரங்களை பிடித்து மேலே தூக்கினேன். 

இந்த நிகழ்வு நபித்தோழர்கள் எந்த அளவு நபியவர்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள் என்று புரிகிறது.

நபித்தோழர்கள், தம் பிள்ளைகளிடம் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்னால் நபியவர்களுக்கு அடுத்து என் நேசத்திற்குரியவன் நீ என்று சொல்வார்களாம்.

#ஹஜ்ரத்_உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபியவர்களே! இந்த உலகத்தில் என் பெற்றோர், என் குழந்தைகள், மற்ற அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், என்னை நான் உங்களை விட அதிகமாக நேசிக்கிறேன் என்றார்.

" லா யா உமர்" முடியாது உமரே உங்களை விடவும் என்னை அதிகமாக நேசித்தால் தான் உண்மை முஃமினாக முடியும் என்றார்கள் நபியவர்கள்

சற்று நேரம் யோசித்த உமர் அவர்கள், இப்போது சொல்கிறேன் நபியவர்களே! என்னை விடவும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்".

"அல்ஆன யா உமர்" இப்போது தான் உமரே நீங்கள் உண்மையான முஃமீன் என்றார்கள் நபியவர்கள்.

#உவைஸ் கர்ணி அவர்கள் உஹது போரில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பல் ஷஹீதாக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கேட்டவுடன் எந்த பல் என்று தெரியாத காரணத்தால் தனது எல்லா பற்களையும் உடைத்துக் கொண்டார்களாம்.

இது நமக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கின்ற பேரன்பு அறிவிற்கு அப்பாற்பட்டது. 

 ஒன்றை நேசிப்பதற்கு  அழகும் ஒரு காரணம்.
அழகான குழந்தையைப் பார்த்தால், நமக்கு அந்த குழந்தையின் மீது அன்பு ஏற்படுகிறது.

அழகிற்காக ஒருவரை நேசிப்பது என்றால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள்.
நபியவர்கள் உள்ளும், புறமும் பூரண அழகுடையவர்கள்.

#அன்னை_ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா   அண்ணலாரின் ஒளிமிகு அழகை வர்ணித்த போது, " இரவு நேரங்களில் ஊசியின் காதுக்குள் நூலை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நூலையும் ஊசியையும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களின் புனிதமான உடல் அருகில் சென்று அந்த ஒளியில் ஊசியில் நூலைக் கோர்ப்பேன்.
மேலும் சொல்கிறார்கள், இருட்டில் ஏதேனும் பொருள் தெரியவில்லை என்றால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் கரங்களின் ஒளியினால் அவற்றை கண்டுப்பிடிப்பேன்.

 நபித் தோழர் #பராஉ இப்னு ஆஜிப் (ரழி)அவர்கள் சொல்கிறார்  ஒருமுறை பௌர்ணமி இரவில் அண்ணலாரின் முகத்தைப் பார்த்தேன்.
நிலவையும் நபியவர்களின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபியவர்களின் முகத்தில் உள்ள ஜமாலை -அழகை,  பௌர்ணமி நிலவில் என்னால் பார்க்க முடியவில்லை.

   #என் சகோதரர் யூசுப் நபியின் அழகு கவர்ச்சிகரமானது. காண்போரை கவர்ந்திழுக்கும் அழகு.
 #என்னழகோ பார்க்க பார்க்கப் பார்க்க காண்போரின் கண்களை குளிர வைக்கும் அழகு ' என்றார்கள் நாயகம்ﷺ அவர்கள்.

         சிலரை நாம் அவரிடமுள்ள #அறிவாற்றலுக்காக நேசிக்கிறோம்.

 அந்த  அடிப்படையில் நேசிப்பதாக இருந்தால் 'முந்திச்சென்றவர்கள் இனிமேல் வருபவர்கள் என அனைவருடைய கல்வி ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக   நவின்ற நபிகளார் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

குறைவான வார்த்தைகளில் ஆழமான, அதிகமான   கருத்து களைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்

       நாம் நபிகளாரின் மீது வைத்துள்ள அன்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும்  
அல்லாஹுவும் ரசூலும் நம்மிடம் எதிர்பார்ப்பது #ஹுப்புல்_இத்திபாஈ '  

        அதாவது ஒருவரை நாம் நேசித்தால் அவருடைய நடை,உடை பாவனைகளை நமது வாழ்வில் நமதாக்கிக் கொள்வோம்.

      வெறித்தனமான அரசியல்கட்சித் தொண்டனோ,சினிமா ரசிகனோ தனது நேசத்திற்குறியவரைப் போன்றே தனது சிகையை அலங்காரம் செய்துகொள்கிறான்.பேச்சிலும் செயலிலும் அவரைப் போன்றே தன்னை மாற்றிக் கொள்கிறான்.    
 
           நமது கண்மணி நாயகம்ﷺ அவர்கள் மீது நாம் உண்மையில் நேசமும்,பாசமும் கொண்டிருக்கிறோம் என்றால் நாம் சொல்லாலும்,செயலாலும் நற்குணத்தாலும் அவர்களைப் பின்பற்றவேண்டும்.

     அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களின் பெயரால் மவ்லூத் ஓதுகிறீர்கள். உங்களின் எண்ணத்திற்கேற்ப அதற்காக அல்லாஹ்விடம் கூலி உண்டு.

 ஆனால் அதே நேரத்தில் அண்ணலாரின் வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

 நபிஅவர்களைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் சொல் என்றால் அவர்களால் சொல்ல முடியுமா? இங்கிருக்கும் அனைவரும்  ஒரு கணம் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்? நபியவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்களில் ஆண்
 குழந்தைகள் எத்தனை? பெண குழந்தைகள் என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா?

 இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் எத்தனைபேர் தங்கள் வீட்டில் நபிஅவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்? 

எனவே அன்பு சகோதரர்களே! நபிஅவர்களின் மீது உண்மையான நேசம் என்பது அவர்களைப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது.
------- சிதம்பரம் இப்ராஹீம் நகர் மஸ்ஜிதில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயின் ஜும்மா உரையின் சுருக்கம்.

Thursday, October 15, 2020

தந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

பேராசையால் தன் மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை.
 ----
1967ம் ஆண்டு தேவ்பந்த் மதரஸாவிற்கு டெல்லிவரை ஒரு 'ரயிலிலும்', டில்லியிலிருந்து வேறொரு ரயிலிலிலும் தேவ்பந்த் செல்ல வேண்டும்.
அது தொடர்பாக  முன்பதிவு செய்ய அங்கே ஏற்கனவே கல்வி கற்று வரும் ஒரு சகோதரரிடம் ஆலோசனை கேட்டேன்.
    ரயிலில் செல்லும் மாணவர்களுக்கு இருவழி கட்டண சலுகை உண்டு.
இறுதியாண்டு மாணவர்கள் திரும்பிச் செல்லமாட்டார்கள்,ஆனால் அந்த பாஸ் அவர்களிடம் இருக்கும் அதை வாங்கி அவர் பெயரில் நீ கட்டண சலுகையுடன் டெல்லி செல்லலாம் ' என்ற ஆலோசனையை வழங்கினார்.
     இதை என் தந்தை - யாக்கூப் வாத்தியாரிடம் சொன்னேன்.
   அந்நேரம் என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.பயணக்கட்டணம் குறையும் என்றால் நல்லதுதானே என எண்ணுவார் என்றே எண்ணினேன்.
     ஆனால் என் தந்தை, 'போறது,நேர்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும் மார்க்கக் கல்வியைக் கற்க, அதன் துவக்கமே பித்தலாட்டமா? நீ அந்த கல்லூரியின் மாணவனாக இன்னும் சேராதபோது அந்தக் கல்லூரின் மாணவன் என இன்னொரு மாணவனின் பெயரைப் பயன்படித்தி கட்டண சலுகை பெறுவது,அரசாங்கத்தை ஏமாற்றும் செயலல்லவா? ஆலிமான நீயே மோசடி செய்யலாமா?' எனக்  கண்டித்தார்.
     என் தந்தை நான் தவறுசெய்த பொழுதெல்லாம் அடித்துக் கண்டிக்கத் தவறியதில்லை.
      என் தந்தை  என் பாட்டனாரால் ஆரம்பிக்கப்பட்ட கணியூர் இஸ்லாமிய துவக்கப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.
   எங்கள் பள்ளியில் ஒரு கிருத்துவர் ஆசிரியராக இருந்தார். ஒருமுறை அவர் சர்சிற்குச் செல்லும் வழியிலிருந்த வைக்கோல் போரின் மீது நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவ்வழியே வந்த அந்த ஆசிரியரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஒளிந்துகொண்டோம். இது போன்று இரண்டு மூன்று முறை செய்தோம்.
    மறுநாள் அந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் என் தந்தையிடம் சொல்லிவிட என் தந்தை மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப் படுத்தும்வண்ணம்  நடப்பியா? என பிரம்பால் அடித்தார். அதே நேரத்தில் எங்களிடம் நகைச்சுவையாகவும் பேசுவார்.
     ஒழுக்கத்தைக் செயல்வடிவில் கற்றுக் கொடுப்பவர்தான் தந்தை.
      நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் இளந்தளிர்களான அம்மாணவர்களைப் பார்த்து ஒரு இளைஞனின் தந்தை என்ற முறையில் என் மனம் பதைபதைத்தது.
    தந்தையின் பேராசையால்  அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. 
     கல்லூரி செல்லவேண்டியவன் சிறைக்குச் சென்றது அவன் உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கும்?
    இது எதனால் தன் மகனுக்கு நேர்வழியைக் கற்றுத்தர வேண்டிய தந்தையே அவனை தவறாக வழிநடத்தியதுதான் காரணம்.
       எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மல்லிப்பட்டினத்தில் நடந்த மீலாது விழாவில் கலந்து கொண்டு நானும் #மறுமலர்ச்சி_ஆசிரியர்_நாவலர் 
#ஏ_எம்_யூசுப்சாஹிபும்
பேருந்தில் ஒன்றாக  பட்டுக்கோட்டை பயணித்தோம். அப்பொழுது  அவர் என்னிடம் என் மகன் மருத்துவம் படிக்க ஆசைப் படுகிறேன் என்றான். நான் அவனிடம் சொல்லிவிட்டேன், எம்ஜிஆர் என் நண்பர் என்பதால் உனக்கு மருத்துவசீட்டு வாங்கித் தருவேன் என எதிர்பார்க்காதே! மெர்ரிட்டில்  நீ பாஸ் செய்தால் உன்னை அரசு மருத்துவக்கலலூரியில் சேர்க்கிறேன்' எனச் சொல்லிவிட்டேன் என்றார்.
 தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Wednesday, October 7, 2020

விவாதம், விதண்டாவாதம்

2014ம் ஆண்டு பதிவு

விவாதம் ,விதண்டாவாதம் 

விவாதம் செய்யாமல் ஏன் ஒதுங்கிறீர் என சிலர் என்னிடம் கேட்கின்றனர்
என்னுடைய ஆசிரியர்களின் வழி காட்டலின் அடிப்படையிலேயே இந்த முடிவிற்கு நான் வந்துள்ளேன் என் முகநூல் நண்பர்களாக பல ஆலிம் பெருமக்களும்,அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.
என் எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் கண்ணியமாக
 சுட்டிக்கா ட்டுகிரார்கள். 
அவர்களுக்காக இந்த விளக்கத்தை தருகிறேன் 
மதரசா என்றழைக்கப்படும் அரபுக்கல்லுரிகளில் நான்காவது அய்ந்தாவது வகுப்புகளில் மன்திக் எனப்படும் தர்க்கவியல் கற்றுக் கொடுக்கப்படுகிறது
அதில் விவாதம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கின்றனர்
مناظرة،
مجادلة 
مكابرة
முனாளரா என்பது ஆரோக்கியமான விவாதம் .இதில் விவாதம் செய்பவர்கள் எடுத்து க்கொண்ட விடயத்தில் ஆழ்ந்த விஷய ஞானம்உள்ளவர்களாக,திறந்த மனமுடன்இருப்பார்கள்  சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவுடன் விவாதம் செய்வார்கள்.
 உதாரணமாக ஒருவர் குர் ஆனில் எங்கெல்லாம் இப்படி செய்யுங்கள் என அம்ரு ஏவலாக வருகிறதோ அதைச்செய்வது கட்டாயம் வாஜிப் என்கிறார் ,மற்றவர் அதை மறுத்து குர் ஆனில் வரும் அனைத்து ஏவல் களையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளமுடியாது,சில இடங்களில் அதனை செய்வது நல்லது என ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளலாம் என வாதிட்டு அதற்கு ஆதாரமாக 
2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; 
எனும் வசனத்தில் فَاكْتُبُوهُ எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனும் வார்த்தை  அம்ரு ஏவலாக வந்துள்ளது இதற்கு விரிவுரை எழுதிய அனைத்து அறிஞர்களும் இது கடமையல்ல செய்யாவிட்டால் பாவமுமல்ல மாறாக உங்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஆலோசனையாக கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் என தன் வாதத்தை முன் வைக்கிறார் 
 மற்றவர் இதனை மறுக்கும் ஆதாரம் அவரிடம்  இல்லாததால் இதனை ஏற்றுக்கொள்கிறார்.
 
இது போன்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை,
இதை கலந்துரையாடல் என்றும் சொல்லலாம்.
 நபித்தோழர்களுக்கி டையே  இவ்வாறான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கலிபா அபூபக்கர் மற்றும் உமர் ரழியல்லாஹ் அன்ஹுமா அவர்களிடையே குர்ஆனின் வசனங்களை ஒன்று சேர்க்கும் விடயத்திலும்,ஜக்காத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்கும் விடயத்திலும் விவாதங்கள் நடைபெற்று பின் இருவரும் ஒரே முடிவை எடுத்தனர் 
    அடுத்து முஜாதலா எனப்படும் விதண்டாவாதம். இதில் ஈடுபடுவோர் ஏற்கனவே ஒரு விடயத்தில் இது தான் சரி யென முடிவு செய்திருப்பர். பின் தன் கருத்திற்கு எதிராக உள்ளவருடன் தன கருத்துதான் சரியானது எதிரி கருத்து தவறு என நிறுப்பிக்கமுயற்சி செய்வர்.எதிர் கருத்துள்ளவர் என்னதான் தங்களின் கருத்துக்கு ஆதரவாக ஆதாரங்களைக் காட்டினாலும் அதை பரிசிலிக்க மாட்டர்கள் .தங்கள் கருத்தே சரி என விதண்டாவாதம் செய்வார்கள் 
இது மன வருத்தத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் 

 மூன்றாவது முகாபரா இது, தான் பெரிய அறிஞர் என்னை யாராலும் வெல்ல முடியாது என்பதற்காகவே விவாதம் செய்வது இதுவும் தவறான விவாதம் 

   நான் லால்பேட்டை மதரசாவில்1966ம் ஆண்டுகல்வி கற்கும்போது 
என்னுடைய ஆசிரியர் கைருல்மில்லத் அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் இமாம் களை பின்பற்றாத வர்களிடம் எப்படி விவாதிப்பது என கேட்டேன் .அதற்கு உஸ்தாத் ஒரு கொள்கையை பிரச்சாரம் செய்பவர்களிடம் விவாதம் செய்யாதே, அவர்கள் ஒரு போதும் உன் கருத்தை பரிசீலிக்க மாட்டார்கள் மாறாக விவாதத்தை திசை திருப்பி  உன்னை குழப்புவார்கள்.
யார் உன்னிடம் தெரிந்துகொள்ள விளக்கம் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உன் கருத்தை முன் வை என்றார்கள் 
  எனவே தான் வீண் விவாதங்களில் ஈடுபடுவதில்லை,

அல்லாஹ் அனைத்து விடயங்கலிலும் நேர்வழி காட்டுவானாக 
ஆமீன்
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ