--------------------------------------===============
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
என்னைசசுற்றி என்னைப் பற்றி
#அல்குர்ஆன்_ஓத_சிந்திக்க_செயல்பட
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?
(அல்குர்ஆன் : 54:17)
#உங்களுக்குள் #இதயத்தை #தேடுங்கள்.
#இல்லாவிட்டால் #இறைவனிடம் #கேளுங்கள்.
---------நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
===================================================================
இதயம் என்ற பெயர்ச்சொல் குர்ஆனில் 132 இடங்களில் வருகிறது. அதில் மூன்று வசனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.
اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ
50:37. எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
26:88 يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ
26:88. “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:89 اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ
26:89. “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
இதில் முதல் வசனத்தில் யாருக்கு இதயம் இருக்கிறதோ அவருக்கு தான் நேர்வழி கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
மற்றொரு வசனத்தில், மறுமை நாளில் பரிசுத்த இதயத்தை கொண்டு வருவோருக்கு தான் பலன் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இன்னொரு இடத்தில், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், அவர் தன் ரப்பு இடத்தில் பரிசுத்த இதயத்துடன் வந்தார் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த உலகத்தில் இதயமில்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது.
எவரிடம் இதயம் இருக்கிறதோ என அல்லாஹ் சொல்லும் இதயம், நம்மிடம் இருக்கிறதா??
திருக்குர்ஆன் விரிவுரையாளரும் நபித்தோழருமான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு சொல்வதாக அறிஞர் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்,
اطلب قلبك في ثلاثة مواطن، عند سماع القرآن، وفي مجالس الذكر، وفي أوقات الخلوة، فإن لم تجده في هذه المواطن فسأل الله أن يمن عليك بقلب، لأنه لا قلب لك ".
“ மூன்று இடங்களில் உங்கள் இதயத்தை தேடுங்கள்.
1- குர்ஆன் ஓதுவதை கேட்கின்ற பொழுது,
2- அல்லாஹ்வை நினைவூட்டும் கூட்டங்களில்,
3- நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில்
இந்த மூன்று இடங்களில் உங்கள் இதயம் உங்களுக்கு தெரியாவிட்டால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு இதயத்தை அருளும்படி கேளுங்கள். ஏனென்றால் உங்களிடம் இதயமே இல்லை.”
நபித்தோழர் சொல்வதின் கருத்து என்னவென்றால், யாரிடம் அல்லாஹ் சொல்லும் பரிசுத்தமான இதயம் இருக்கின்றதோ மேற்குறிப்பிட்ட இடங்களில் அது வெளிப்படும்.
ஒருவர் குர்ஆன் ஓதுவதை கேட்கின்றார், அதன்பின் அவர் உள்ளத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
ஒருவர் இறைவனை நினைவூட்டும் கூட்டங்களில் கலந்துக் கொள்கிறார். அதன்பின், அவர் உள்ளத்தில் எந்த சலனமும் இல்லை.
ஒருவர் தனிமையில் இருக்கிறார். அந்நேரத்தில் அவருக்கு அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்ற அச்சமோ மறுமையை பற்றி பயமோ, மரணத்தை பற்றி கலக்கமோ ஏற்படவில்லை என்றால் அவர் இதயம் இல்லாதவர் என்றே உணர வேண்டும்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் இறைவனுக்கு் அஞ்சும் இதயத்தை அருள் புரிவானாக
-------தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
------மறுபதிப்பு
முஸ்லிமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்
*********************************************
இமாம் பகரிப்னு அப்துல்லாஹ்அல்முஜ்னி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
உன்னை விட வயதில் மூத்தவர்களை
கண்டால் இவர் என்னைவிட ஈமானிலும் நல்லமல்கள் புரிவதிலும் முந்திக்கொண்டார் எனவே இவர் என்னை விட சிறந்தவர் எனச் சொல்.
உன்னை விட வயதில் குறைந்தவர்களைக் கண்டால் பாவங்கள் புரிவதிலும், குற்றங்கள் செய்வதிலும் இவரை விட நான் முந்திக்கொண்டேன். எனவே இவர் என்னைவிட சிறந்தவர் எனச் சொல்.
உன்னுடைய சகோதர்கள் உன்னை கண்ணியப்படுத்தினால்,சிறப்பு செய்தால் அது அவர்களின் பெருந்தன்மை எனச் சொல்
உன் விடயத்தில் அவர்களிடம் ஏதேனும் குறைகளைக் கண்டால் இதற்கு நான் செய்த பாவம்தான் காரணம் எனச் சொல்.
*****************************************
ஒரு முறை ஜும்மா குத்பாவில் ஹஜரத் அமீருல்முஃமினீன் உமர்(ரழி)அவர்கள் சொன்னார்கள்:
முஃமினீன்களே பணிவுடன் இருங்கள் யார் ஒருவர் அல்லாஹ்விற்காக தன்னை இப்படித் தாழ்த்திக்கொள்கிறானோ (அப்பொழுது தனது உள்ளங்கையை தரையின் பக்கம் திருப்பி கையை கீழே தாழ்த்தினார்கள்) அவரை அல்லாஹ் இப்படி உயர்த்துவான்(அப்பொழுது உள்ளங்கையை வானத்தின் பக்கம் திருப்பி கையை மேலே உயர்த்தினார்கள்.)
நூல்:அஹ்மது
------தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ
--------------------------------
உங்கள் சிறுவர்களை உங்களுக்காக துஆ செய்யப் பழக்குங்கள்
ஏனென்றால் கலீபா உமர் ரலியல்லாஹ்அன்ஹு அவர்கள் தெருவில் சிறுவனைக் கண்டால
அவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு் என் மகனே!எனக்காக துஆ செய்ஏனென்றால் நீ் பாவம் செய்யாதவன்் என்பார்கள்
ஏக இறைவன் எழுதுகோலின் மீது ஏன் சத்தியமிட்டான்???
*******************************************************************----கணியூர் இஸ்மாயீல் நாஜி
------------------------------------------=-----------------------------
68:1 نٓ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ
68:1. நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக!
68:2 مَاۤ اَنْتَ بِـنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍۚ
68:2. நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர்.
68:3 وَاِنَّ لَڪَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍۚ
68:3. என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது.
68:4 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
68:4. மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
68:5 فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ
68:5. விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:6 بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ
68:6. உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும்...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ் அல்லாத படைப்பினங்கள் மீது சத்தியமிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது . ஆனால், மாமறை குர்ஆனில் பல இடங்களில் படைக்கப்பட்ட இயற்கைகள் மீது அல்லாஹ் சத்தியமிட்டுள்ளான்.
ஏன்?
நபிகள் நாயகத்தின் வாழ்நாள் மீது கூட அல்லாஹ் சத்தியமிட்டுள்ளான்.(15-72)
இவ்வாறு அல்லாஹ் சத்தியமிடுவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி புனித குர்ஆனின் விரிவுரையாளர்கள் பல்வேறு விளக்கங்களை தந்துள்ளார்கள்.
அந்த காரணங்களை விரிவாக விளக்குவது இந்த பதிவின் நோக்கம் அல்ல.
அந்த விளக்கங்களில் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஒரு விளக்கத்தின் அடிப்டையில் இந்த பதிவு
பொதுவாக, அரபுகள் சத்தியமிட்டு பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனாலும், இயற்கை பொருட்கள் மீது பொய் சத்தியமிட்டால், பொய் சத்தியமிட்டவருக்கு அழிவு ஏற்படும் என்றும் நம்பினார்கள்.
அல்லாஹ், அவர்களுக்கு அவர்களின் நடையிலேயே இயற்கை பொருள் மீது சத்தியமிட்டு சொன்னான் என்று ஒரு கருத்து இருக்கிறது.
அத்துடன், அல்லாஹ் எந்த கருத்தை சொல்ல வருகிறானோ அந்த கருத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பொருளின் மீது அவன் சத்தியமிட்டதாக விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள்.
இந்த அத்தியாயம் இறங்கிய சூழ்நிலையை எண்ணி பாருங்கள். தங்கள் கண் முன்னால், வளர்ந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திடீரென தன்னை நபி என்று சொல்கிறார், ஆண்டாண்டு காலமாக நாம் நாம் கடைபிடித்து வரும் கொள்கைகளை மூடநம்பிக்கை என விமர்சிக்கிறார். எழுத, படிக்க தெரியாத அவர் சுத்தமான அரபு மொழியில் வசனங்களை ஓதுகிறார் எனவே அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று மக்கத்து குரைஷியர்கள் பிரச்சாரம் செய்தனர்.
அந்த நேரத்தில் இந்த வசனம் இறங்குகிறது.
இறைவனின் கருணையால் நபியவர்களே நீங்கள் பைத்தியம் இல்லை என்று சொன்ன இறைவன் அதை உறுதி படுத்தும் வண்ணம்
எழுதுகோலின் மீது சத்தியமாக, அந்த எழுதுகோல் எவற்றையெல்லாம் எழுதுகிறதோ அவைகளின் மீது சத்தியமாக!
நபி அவர்களே நீங்கள் பைத்தியம் அல்ல. ஏனென்றால், ஒரு பைத்தியக்காரரின் உளறல்களை யாரும் எழுத மாட்டார்கள். ஆனால், உம்மை பற்றி எழுதுகோல்கள் இருக்கின்ற வரைக்கும் எழுதிக் கொண்டே இருக்கும்.
இது ஒன்றே நீங்கள் பைத்தியம் அல்ல என்பதற்கு இறுதி நாள் வரை ஆதாரம்.
இன்னொன்று, நீர் நற்குணத்தில் இருக்கின்றீர்.
ஒரு மன நோயாளிக்கு மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாது. திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பான், துக்க வீட்டில் வாய் விட்டு சிரிப்பான். ஆனால் நீர், மக்களின் மனதை கவரும் நற்குணமிக்கவராய் இருக்கின்றீர்.
இதுவும் நீங்கள் மன நோயாளி இல்லை என்பதற்கு ஆதாரம் என்று சொல்லும்
அல்லாஹ், அடுத்து சொல்கிறான்.
68:5 فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ
68:5. விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:6 بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ
68:6. உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதை..
இன்று வரலாறு, யார் பைத்தியக்காரர்கள் என்பதையும் யார் புகழுக்குரியவர் என்பதையும் இன்றைய உலகிற்கு விரிவாக விளக்குகிறது என்றால், அதற்கு முக்கியமான காரணியாக இருப்பது எழுதுகோலும் அதன் எழுத்துக்களும் தான்.
எழுதுகோலின் மீதும், அதை எழுதிக் கொண்டிருப்பைவைகளின் மீதும் சத்தியமாக என்று அல்லாஹ் சொல்லியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
اَلرَّحْمٰنُۙ
அளவற்ற அருளாளன்,
(அல்குர்ஆன் : 55:1)
خَلَقَ الْاِنْسَانَۙ
அவனே மனிதனைப் படைத்தான்.
(அல்குர்ஆன் : 55:3)
عَلَّمَهُ الْبَيَانَ
அவனே மனிதனுக்கு விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 55:4)
மனிதனுக்கு எவ்வாறு விளக்கத்தைக் கற்று கொடுத்தான் என்பதை இன்னொரு வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்,
الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:4)
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:5)
ஒரு மனிதனின் அறிவு விரிவடைவதற்கு
பல காரணிகள் இருக்கின்றன.
அதில் மிக முக்கியமானவை படித்தல்,செவிமெடுத்தல்,அனுபவத்தின் அடிப்படையில் அவன் கற்றுக்கொள்ளல்.
இம்மூன்றால் தான் பெற்ற அறிவை பிறர் பயன் பெற அவர்களிடம் கொண்டு செல்ல உறுதுணையாக இருப்பது எழுதுகோல்.
மனிதனுக்கு எழுதுகோலை கொண்டு கற்று கொடுத்தான். அவன் அறியாததை எல்லாம் அவனுக்கு கற்று கற்றுக்கொடுத்தான்.
என்ற வசனத்தில் மனிதன் புது புது செய்திகளை அறிந்துக் கொள்வதற்கு எழுதுகோல் உறுதுணையாக இருப்பதை சுட்டி காட்டுகிறான்.
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி
---