Friday, August 14, 2020

ஜாமியா மில்லிய்யா இஸ்லாமியா

· 
#உலமாக்களும் #முற்போக்கு சிந்தனைமிக்க முஸ்லிம் கல்வியாளர்களும் இணைந்து நூறு ஆண்டுகளுக்கு முன்கி.பி. 1920 ல் துவக்கிய டெல்லி #ஜாமிஆ #இஸ்லாமியா பல்கலைக்கழகம் தேசிய அளவில் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில்  இவ்வாண்டு (2020)10-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஜாமிஆ பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த சாதனையை செய்திருக்கிறது
 சென்ற ஆண்டு நடைபெற்ற சிஐஏ போராட்டத்தில் ஜாமிஆ மாணவர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தனர்
இன்றுவரை சஃபூரா போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் வைத்து பாஸிஸ அரசு துன்புறுத்தி வருகிறது

இந்த பல்கலைக் கழகத்தை முடக்கிவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜாமிஆ தீவிரவாதிகளை உருவாக்குகிறது
என டெல்லி தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கிடையே மதக்கலவரத்தை உருவாக்க முயற்சித்தனர்.
அதை இந்து மாணவர்களே முறியடித்தனர்.

ஜாமிஆவை அவர்கள் வெறுப்பதற்கு அடிப்படைக் காரணம் ஜாமியாவின் வரலாற்று பின்னணி தான்.

ஜாமிஆ #1920 இல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின்போது துவக்கப்பட்டது 
ஆங்கிலேயர்களின் துணையுடன் நடக்கும் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் வெளியே வரவேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் தீர்மானம் இயற்றியது அந்த தீர்மானத்தை மால்டா சிறையிலிருந்து விடுதலையாகி வந்த வந்த தாருல் உலூம்தேவ்பந்த் தலைமை ஆசிரியர் #மௌலானா_மஹ்மூதுல்ஹஸன் #தேவ்பந்தி அவர்கள்,
 "ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது முஸ்லிம்கள் மீது கட்டாய கடமை எனவே அவர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்
மூளையை மழுங்க வைத்து தனது அடிமையாக வைத்திருக்கும் இஸ்லாமிய கொள்கை களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானபாடத்திட்டத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என பத்வா வழங்கினார்.

(ஆங்கில மொழியைக் கற்கக் கூடாது என்றல்ல.)
(After returning to British India, Mahmud al-Hasan joined the Khilafat movement. He also issued his famous fatwa (legal opinion on Islamic law) of non-cooperation against the British rule in India.[
"Maulana Mahmud al-Hasan (1851-1920)". Jamia Millia Islamia website. 11 November 2004.)

பத்வா வெளியிட்ட பின் மவ்லானா அவர்கள், காந்திஜியுடன்
அப்போது வெள்ளையர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட Muhammadan Anglo-Oriental College (தற்பொழுது அலிகர் முஸ்லிம் பல் கலைக் கழகம்)இருக்கும் அலிகர் நகருக்கு தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாது சென்று அங்குள்ள பேராசிரியர்களையும்,மாணவர்களையும்
சந்தித்துப் பேசினார்கள்.
 Muhammadan Anglo-Oriental College நிர்வாகம் பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக மாணவர்களும்,பேராசிரியர்களும் உணர்ந்ததால்
அவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒத்துழைப்பு நல்கினர்.
அதேநேரம்
 அரசாங்க செல்வாக்கிலிருந்து விடுபடும் ஒரு புதிய தேசிய முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கான  தேவையை சில மாணவர்களின் கோரிக்கையின் வாயிலாக உணரப்பட்டது

அதற்காக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கவேண்டும் என முடிவெடுத்து
மேறகத்திய கல்வியில் ஆர்வமுடைய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் இணைந்து அலிகரில் ஜாமிஆவிற்காக29 October 1920. ல் மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்

 அன்றைய ஜாமிஆ  விற்கு அடித்தள மிட்டவர்கள்

#மவ்லானா_முஹம்மதுஅலி #ஜவ்ஹர்
,#டாக்டர்_முக்தார்_அப்பாஸ்அன்சாரி
#கவிஞர்அல்லாமா_இக்பால்,
#முப்திகிபாயத்துல்லாஹ்,
#மவ்லானாஅப்துல்பாரிபரங்மஹாலி,
#மவலானாசய்யித்சுலைமான்ந்த்வி,
#மவ்லானாஅபுல்கலாம்ஆஜாத்,
#மவலானா_ஹுஸைன்அஹ்மத்_மதனி
#ஹகீம்அஜ்மல்கான்,
#நவாப்இஸ்மாயீல்கான் மற்றும் பலர்.

#காந்திஜிஅவர்களும்
#கவிஞர்
#ரவீந்திரநாத்_தாகூர் அவர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.
கவிஞர் தாகூர் அவர்கள்
#one_of_the_most_progressive_educational
institutions_of_india

"இந்தியாவின் மிகவும் முற்போக்கான கல்வி நிறுவனங்களில் ஒன்று".
என பாராட்டினார்

அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்களின் தலைமை உரையை மவ்லானா ஷப்பிர் அஹ்மத் உஸ்மானி அவர்கள் வாசித்தார்கள்
அந்தஉரையில் இந்த நிறுவனத்தின் நோக்கம் சமூகத்திற்கு சேவை செய்யும் ,தீமைகளை எதிர்த்துப் போராடும் மாணவர்களை உருவாக்குவதோடு இஸலாமிய விழிமியங்களையும் பாதுகாக்கும்.
 இந்த நிறுவனம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகத் திகழும்."
எனக் குறிப்பிட்டார்கள்.
(ஷைகுல் ஹிந்த் (ரஹ்)அவர்கள் அடிக்கல் நாட்டிய  ஒரு மாதத்தில் மறைந்துவிட்டார்கள்)

ஜாமிஆவிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான (மேனாள் குடியரசு தலைவர்) #டாக்டர்ஜாகிர்ஹுஸைன் "ஜாமியாவின் நோக்கத்தை இவ்வாறு எழுதுகிறார்

"ஜாமிஆ மில்லியா இஸ்லாமியாவின் இயக்கம் கல்வி மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கான போராட்டமாகும். இது இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு வரைபடத்தைத் தயாரிக்கும், ஆனால் அதே நேரத்தில் பொதுவான இந்தியர்களுக்கான தேசிய கலாச்சாரத்தை உருவாக்கும். உண்மையான மதக் கல்வி இந்திய முஸ்லிம்களிடையே தேசபக்தியையும் தேசிய ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் என்ற சிந்தனையின் அடித்தளத்தை அமைக்கும், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான நாடுகளின் ஒத்துழைப்பில் தனது பங்கை வகிக்கும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் பங்கெடுப்பதில் பெருமிதம் கொள்ளும் . ஜாமிஆ மில்லியா இஸ்லாமியாவை ஸ்தாபிப்பதன் நோக்கம், இந்திய முஸ்லிம்களுக்கான பொதுவான பாடத்திட்டத்தை எதிர்கால சவால்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, எதிர்காலத்தில் எஜமானர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவதும் ஆகும்.
 #ஹக்கீம் அஜ்மல் கான் முதல்  chancellor  ஆகவும்,#மவ்லானா முஹம்மது அலி ஜவகர்Vice Chancellorஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

1926ல் ஜெர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த #பெர்லின் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற #டாக்டஜாஹிர்ஹுசைன்,
கல்வியல்துறையில் Ph.D.முடித்திருந்த #டாக்டர்ஆபித்ஹுஸைன்
ஆக்ஸ்போர்டின் வரலாற்று அறிஞர்
#முஹம்மதுமுஜீப் ஆகியோர் 
பேராசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற வந்தனர்.
(இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே ஊதியத்தில் பணியாற்றினர்)

1928ல் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் vice chancellorபதவி ஏற்ற பின் ஜாமிஆ பல பொருளாதர சிக்கல்களுக்கிடையேயும் வளர்ந்தது
1936ல் ஜாமிஆ டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1939ம் வருடம், இளவயதிலேயே இஸ்லாமை ஏற்றவர் தத்துவஞானி,,சிறந்த கல்விமான்,சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் இருப்பவர் எனும்  பல சிறப்புகளைக் கொண்ட
 #மவ்லானா_உபைதுல்லாஹ்சிந்தி (1872-1944)  அவர்கள் டாக்டர் ஜாகிர் ஹுசைனின் அழைப்பின் பேரில் ஜாமிஆவில் தங்கி குறைந்த ஊதியத்தில் பணியாற்றினார். #ஷாவாலியுல்லாஹ்(ரஹ்) அவர்கள் பின்பற்றிய  சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய விழுமியங்களையும்,கொள்கைகளையும் ஆய்வு செய்யும்  islamic studies என்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கு #பைத்துல்ஹிக்மா எனபெயரிட்டார்.
அந்தத் துறை இன்றுவரை நடைபெற்று வருகிறது

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன் 1946ல் ஜாமிஆவின் 
இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
 அப்பொழுது சுதந்திரப் போராட்டம் கொதிநிலையில் இருந்தது.

பாக்கிஸ்தான் வேண்டுமா? வேண்டாமா என்ற பிரச்சனையால் முஸ்லிம் சமுதாயம் பிளவுண்டு கிடந்தது.
இந்நிலையில்  டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தலைவராக வீற்றிருந்த விழாமேடையில் 
இருதுருவங்களாக இருந்த தலைவர்கள் ஜாஹிர்ஹுஸைன் அவர்களின் இரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
 ஒருபக்கம் #முஹம்மதுஅலிஜின்னாசாஹிபும்
#லியாகத்அலிகானும் அமர்ந்திருக்க மறுபக்கம் #பண்டிட்_ஐவஹர்லால்நேருவும்
#ராஜாஜியும் அமர்ந்திருந்தனர்.
இது ஜாமிஆவின் சிறப்பினை உணர்த்துகிறது.

1947ல் இந்தியப்பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஜாமியஆபெரும் சேதத்தைச் சந்தித்தது.
பல்லாயிரம் நூல்களைக் கொண்ட ஜாமிஆவின் நூலகம் முற்றிலும் தீக்கிரையானது.

சுதந்திர இந்தியாவில் ஜாமிஆவின் வளர்ச்சி பற்றி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
 ----கணியூர் இஸ்மாயீல் நாஜி

ஏன்தரூதே இப்ராஹீம்

ஏன் இப்ராஹீம் நபி(அலை)அவர்களை  மட்டும்  மற்ற நபிமார்களை  விட தினந்தோறும் நினைவுகூறுகிறோம்.
*****************************************************-
நாம் ஒவ்வொரு தொழுகையிலும் கடைசியில் இறுப்பில் நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஸலவாத் சொல்லும் போது நபியிய்யினா இப்ராஹீம் நபி(அலை)அவர்களையும் இணைத்துக் கொள்கிறோம்.

ஸலவாத்துகளில் சிறந்தது #ஸலவாத்தே_இப்ராஹிமிய்யா எனப்படும் இப்ராஹீம் நபிஅவர்களையும்,அவர்களின் குடும்பத்தாரையும் இணைத்து சொல்லப்படும் ஸலவாத்துதான்.

இப்ராஹீம் நபி உலுல் அஜ்ம் எனப்படும் மன உறுதியுடன் எதிரிகளுடன் போராடியவர் என அல்லாஹ்வால் பாராட்டப்பட்டவர்கள் எனவே அவர் பெயர் இணைக்கப்படுகிறது என  நீங்கள் பதில் சொன்னால்
 அந்த  உலுல் அஜ்ம் பட்டியலில் #நபிநூஹ்_நபிமூஸா_நபிஈஸா
அலைஹிமுஸ்ஸலாம் அவர்களும் வருகிறார்களே அவர்களை ஏன் நாம் தினந்தோறும் நினைவு கூறுவதில்லை?

 சற்று நாம் ஆய்வு செய்தால் அருள்மறை குர்ஆனிலேயே இதற்கானவிடை இருக்கிறது.

ஸய்யித்னா இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆக்களில் 

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ 
(இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!
(அல்குர்ஆன் : 26:83)

وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ 
மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!
(அல்குர்ஆன் : 26:84)

என்ற துஆ  முக்கியமானது.
நபி இப்ராஹீம் அவர்கள் தன் சந்ததியர்கள் தனக்காக துஆ செய்யவேண்டும் எனவிரும்பினார்கள்,அதை அல்லாஹ்விடம் கோரிக்கையாக வைத்தார்கள்.

 அல்லாஹ் நபியவர்களின் ஆவலை நிறைவேற்றினான்.

இன்னொரு இடத்தில் அல்லாஹ் சொல்கிறான்:

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌‏ 
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
(அல்குர்ஆன் : 37:108)

سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ 
சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது!
(அல்குர்ஆன் : 37:109)

كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
(அல்குர்ஆன் : 37:110)

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 
திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
(அல்குர்ஆன் : 37:111)

என அல்லாஹ் அவரைப் புகழ்ந்து  அவரின் துஆவை ஏற்று ஸலவாத்தும் சொல்கிறான்.
துல்ஹஜ் மாதம் வந்துவிட்டால்  இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை பற்றி அதிகமாக பேசப்படுகிறது.

இவை அனைத்தும் நபியவர்களின் துஆவினால்தான்
துஆ என்பது அல்லாஹ் நமக்களித்திற்கின்ற நல்வாய்ப்பு அதை நழுவ விட்டு விடாதீர்.
---அரபி இணைய தளத்திலிருந்து தமிழில்  கணியூர் இஸ்மாயீல் நாஜி

பொறாமைக்காரனே ஆபத்தானவன்

பொறாமைக்காரனே ஆபத்தானவன்
*********************
இப்லீஸ் ,பிர்அவ்ன்
இருவரின் தீர்ப்பு
=================
அரபியில் இஸ்ராயிலியத் கதைகள் எனப்படும் இலக்கியம் உண்டு.
பனு இஸ்ரவேலர்கள் தவ்ராதிலும்,இன்ஜீலிலும் இருப்பதாக பல சுவராசியமான பல  கதைகளை பரப்பியுள்ளனர்.
நபிபெருமான் ﷺ அவர்கள்   அக்கதைகளை உண்மையென்றோ பொய்யென்றோ கூறாதீர்கள் என்றார்கள்.
   அக்கதைகளில் ஒன்றுதான் இது .

       ஒருநாள் இப்லீஸ் பிர்அவ்ன் வீட்டின் கதவைத் தட்டினான்.
யாரென்றான்"  பிர்அவ்ன் 
நான்தான் பெரிய கடவுள் என்று சொல்ற
கதவிற்கு இந்தப்பக்கம் இருப்பது யாரென்று தெரியாதா? என்றான் இப்லீஸ்.

இந்த மாதிரி பேசற நீ சபிக்கப்பட்ட இப்லீஸாக த்தான் இருப்ப உள்ளே வா என்றான் 
பிர்அவ்ன்.

நீயும் சபிக்கப்பட்டவன் தானே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்
இப்லீஸ்.

பிர்அவ்ன்:  ஆமா, ஏன் ஆதம்நபிக்கு ஸஜ்தா செய்ய மறுத்தாய்?

இப்லீஸ் கிண்டலாக,அவரின் முதுகு தண்டில் நீ இருக்கிறாய் எனத் தெரிந்துதான் மறுத்தேன்.

நான்தான்  உயரந்த கடவுள் என அகம்பாவம் கொண்டவன் நான், ஆதம்நபியை விட நான் தான் சிறந்தவன் என கர்வம் புடுச்சவன் நீ
நம்மிருவரையும் விட  தீயவன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டான் பிர்அவ்ன்.

அடுத்தவனைப் பார்த்து பொறாமைப் படுபவன் நம்மைவிட மோசமானவன்
ஆபத்தானவன் என்றான் இப்லீஸ்.
   ஆமாம்,ஆமாம் என்றான் பிர்அவ்ன்.
-------------------------------------------------------------------------
இந்த கதை உண்மையோ,பொய்யோ  அதில் சொல்லப்பட்டிருக்கும் பொறாமைக்காரனை பற்றிய செய்தி உண்மை.
   தலைக்கனம்மிக்கவனால் ஏற்படும் ஆபத்தைவிட.  பொறாமைக்காரனால் ஏற்படும் எதிர்விளைவு மிக ஆபத்தானது

              
“”உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்” (அல்குர்ஆன் 3:119-120) 
என குர்ஆன் பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)

என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொளவேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது

தன்னிடமில்லாத சிறப்பான ஒன்றை மற்றவர்களிடத்தில் காணும்போது ஏற்படும்   உணர்வுதான்  பொறாமை.

அல்லது தன்னிடம் இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.
இந்த பொறாமையினால் ஏற்படும் விளைவு என்ன?

பொறாமைக்காரன் தனக்கு கிடைக்காவிட்டாலும் பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் அழிய வேண்டும் என்று விரும்புவான்

    பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடை நீங்கி தனக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவான்

    பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் போன்று தனக்கும் இருக்க வேண்டும். ஆனால், அவன் தரத்தால் உயர்ந்துவிடக்கூடாது என்று பொறாமைக்காரன் விரும்புவான்

இக்குணம் அவனை பல தவறுகளை செய்ய தூண்டுகோலாகிவிடுகிறது

  அதேநேரததில் யாரின் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவருடைய அருட்கொடைகள் நீங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றி அவரைப் போன்றது தனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இது விரும்பத்தக்க நற்குணமாகும். இதற்கு அறபியில் حسدالغبطة என்று சொல்லப்படும்.

இரண்டு விடயங்களில் தவிர பொறாமை கூடாது
 – ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறான். அவன் அவ்வேதத்தை இரவும் பகலும் ஓதிவருகிறான் இதனை அண்டை வீட்டுக்காரன் கேட்டுவிடுகிறான். அப்போது அம்மனிதன் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவது
 இன்னும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவன் சத்தியத்திற்காக – தாராளமாக – செலவு செய்கின்றான். அப்பொழுது ஒரு மனிதன் கூறுகின்றான் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே  – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவதாகும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ

நூல் : புகாரி

அல்லாஹ் நம்மனைவரையும் அழிவின் பால் இழுத்துச் செல்லும் பொறாமையிலிருந்து காப்பானாக!
 ----கணியூர் இஸ்மாயீல் நாஜி