எண்ணத்தின் அடிப்படையிலேயே அதற்கான பலன் கிடைக்கும்.
======
இப்னு தைமிய்யா(ரஹ்)சொல்கிறார்:
#அழகான உயர்தர ஆடைகளை கஞ்சத்தனம் காரணமாக ஒருவன் அணிவதில்லை என்றால் அதற்கான நன்மை கிடைக்காது.
அனுமதிக்கப்பட்ட உயர்தர ஆடைகளை
அவற்றை அணியாமலிருப்பது
நல்அமல்களில் ஒன்று என எண்ணி அணியாமலிருப்பது
#பாவமாகும்.
அழகான அனுமதிக்கப்பட்ட உயர்தர ஆடைகளை அல்லாஹ் தனக்களித்திற்கும் அருட்கொடையை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும். தனது வழிபாட்டிற்கு உதவும் (தன்னை செல்வந்தன் என எண்ணி தேவையுடையோர் தன்னை அணுகுவார்கள் எனும்) எண்ணத்துடன் அணிந்தால்
அதற்கு #நன்மை கிடைக்கும்.
தன்னுடைய செல்வச் செருக்கைக் காட்ட அணிந்தால் அவன் #பாவியாவான்.
#அகந்தையும் ஆணவமும் கொண்ட வனை அல்லாஹ் விரும்புவதில்லை.
----மஜ்மூஉல் பதாவா
---- கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி
