Wednesday, September 30, 2020

வயதானவர்கள் பார்வைக்கு

• وجاء في كتاب "صفة الصفوة" (2/156)، و"الزهد الكبير" للبيهقي (ص 265) عن وهب بن منبه قال: "قرأتُ في التوارة أن لله مناديًا يُنادِي كل ليلة: أبناء الأربعين، زرع قد دنا حصاده، أبناء الخمسين، هلمُّوا إلى الحساب، ماذا قدَّمتم وماذا أخَّرتم؟ أبناء الستين، لا عذرتم، أبناء السبعين، عدُّوا أنفسكم في الموتى".
பிறந்த நாள் வாழ்த்து சொல்வது   தொடர்பாக 
நான் ஆய்வு செய்து வருகிறேன் அப்பொழுது வஹபிப்னு முனப்பஹ் என்ற  நபித்தோழர்களின் தோழர் (தாபிஈ) அவர்களின் ஒரு அறிவிப்பு  மிகவும் பிடித்தது .அவர்கள் யூதராக இருந்து முஸ்லிமானவர்கள்
அவர்கள் சொல்கிறார்கள் : "நான் தவ்ராத்தில் படித்தேன் ஒவ்வொரு இரவிலும் ஒரு வானவர் இவ்வாறு சொல்லுகிறார் 
நாற்பதுவயதை அடைந்தவர்களே  பயிரிடுங்கள் நீங்கள் அறுவடை செய்யும் நாள் நெருங்கி விட்டது ஐம்பது வயதை அடைந்தவர்களே எதை  முந்தி செய்தீர்கள் எதை பிந்தி செய்தீர்கள் என்ற  உங்கள் வாழ்நாள் கணக்கை ஒப்படைக்க தயாராகுங்கள் அறுபது வயதை அடைந்தவர்களே நீங்கள் சாக்கு போக்கு சொல்லும் காலம் முடிந்து விட்டது.எழுபது வயதை அடைந்தவர்களே உங்கள் மவ்த்துக்கான நாளை எண்ணி கொண்டிருங்கள்
-------------------------------------------------------------------------------------------- 
இந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய உம்மத்தின் வயது அறுபதிலிருந்து எழுபது ஆகும் என்று அவர்கள் சொன்ன நபி மொழி என் நினைவுக்கு வருகிறது

Sunday, September 27, 2020

பெண்ணை விலா எழும்பால் ஏன் படைத்தான்

ஒரு அறிஞரிடம் அல்லாஹ்  ஏன் பெண்ணை மனிதனின் வேறு பகுதிலிருந்து படைக்காமல் விலா எழும்பிலிருந்து படைத்தான்? என ஒருவர் கேட்டார்;

அந்த அறிஞன் சொன்னார்;

மனிதனின் தலையிலிருந்து படைத்தால் அவனை அவள் அடக்கி ஆள்வாள் 
மனிதனின் காலிருந்து படைத்தால் இவன் அவளை அடிமையாக்குவான்
 அவளை  அவனின் இடது பக்கமிருக்கும் விலா எழும்பால் படைத்தான் காரணம் அவன் அவளை தன் பக்கமே வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக

 தோள் புஜத்தின் கீழ் பகுதியிலிருந்து படைத்தான் காரணம் அவன் அவளை அரவணைக்க வேண்டும் என்பதற்காக
  
அவனின் இதயத்திற்கு அருகிலிருந்து படைத்தான் காரணம் அவளை  உளப்பூர்வமாக நேசிக்க வேண்டும் என்பதற்காக
    

இந்த பதில் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்கள்

 இல்லையென்றால் கமெண்ட் பண்ணுங்கள்
2014ல்இணையதளத்தில்  படித்தது
 கணியூர் நாஜி

_

Saturday, September 26, 2020

துயரத்தில் பெருந்துயரம் துணைவியைப் பிரிவதே

துயரத்தில் பெருந்துயரம்
துணைவியைப் பிரிவதே!
--------
நேற்று காலை( 26/09/19)
என்னுடன் பல பொதுசேவைகளில் பயணித்தவர்,குடும்ப நண்பர்,இன்றைய சிதம்பரம் சென்டரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் இப்ராஹீம் ஹாஜியாரின் துணைவியார் மறைந்த செய்தியை அறிந்து நானும் எனது துணைவியும் பின்னத்தூரிலுள்ள அவர் இல்லத்திற்குச் சென்றோம்.
82வயது முதியவரான ஹாஜியார் எப்பொழுதும்,எந்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதனமாக பேசுபவர்.
இந்நிலையிலும் அழுது புலம்பாமல் தன் உணர்ச்சிகளைஅடக்கிக் கொண்டு உரையாடினாலும் அவர் நினைவுகள் பின்னோக்கிச் சென்று  56ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து ,சுக,துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர் எப்படியெல்லாம் தன்னை கவனித்துக் கொண்டார் என்பதைப் பற்றிப்  பேசிக் கொண்டேயிருந்தார்.
தான்  வெளியே செல்லும் போதும்,திரும்பி வீட்டில் நுழையும் பொழுதும்  தேநீர் கப்புடனேயே வருவார்.
 நான் சிதம்பரம் செல்ல டூவீலரை எடுக்கும் போது "கொஞ்சம் நில்லுங்கள்"  எனக் கூப்பிட்டுக் கொண்டே அருகே வந்து நான் அணிந்திருக்கும  தொப்பியை எடுத்துவிட்டு வேறு தொப்பியை என் தலையில் அனுவிப்பார் எனச் சொல்லும்போதே அவர் குரலில் இனி இதோ போல் யார் தன்னைக் கவனித்துக் கொள்வார் என ஏக்கம் தெரிந்தது.
   பின் தன் அருகே அமர்ந்திருந்த இந்து நண்பரைச் சுட்டிக்காட்டி இவரும் அண்மையில் தன் மனைவியை இழந்தவர் என்றார்.
   அந்த பெரியவர்  பேச ஆரம்பித்தார்:
#தாயும்,தாரமும் ஒன்று. இரண்டிற்கும் மாற்றில்லை.எனக்கு 81 வயதாகிறது,53ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்தவர் திடீரென என்னை விட்டு பிரிந்தவிட்டார்,
காலையில் வழக்கமாக நாங்கள் செய்யும் பூஜைகளை முடித்துவிட்டு பூஜைஅறையை விட்டு  வெளியே வந்தோம்,  என் மனைவி மயங்கி விழுந்தார்,எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.இறந்துவிட்டார் என்றார்கள் பத்து நிமிடத்தில்  எனக்கு  எல்லாமே முடிந்துவிட்டது. எப்பொழுதும் எனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காதவர் மரணத்திலும் எனக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தாமல் சென்றுவிட்டார்.
எனக்கு பையன்களும்,மருமகள்களும் இருக்கின்றனர்,இருந்தும் வெறுமையை உணர்கிறேன், எனக்கொரு தேவை ஏற்படும் பொழுது அவர்களிடம்  சென்று கேட்பதற்கு எனக்கு   ஒரு தயக்கம் ஏற்படுகிறது.
#கணவனின்றிஒருபெண் #வாழ்ந்துவிடுவாள்,ஆனால் #மனைவியின்றிஒருஆண்மகன்வாழ்வது
#பெருந்துயரம் என்றார்.
இரண்டு பேரின் துணைவியர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்பொழுது எதிர்பாராமல் மறைந்திருக்கிறார்கள்.
நான் சொன்னேன்" நபிகள் நாயகம் செய்த பிரார்த்தனைகளில்" #படுத்த படுக்கையாக பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் மரணிக்க  வேண்டும்" என்பதும் ஒன்று என்றேன்.
  #அண்ணண் கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்களின் துணைவியார் மறைந்தபொழுது அவரை சந்திக்கச் சென்றேன் வக்ப் வாரியத் தலைவராக அவர் இருந்த நேரம். பெரும்பாலும் வீட்டிலிருப்பதை விட வெளியே இருந்த நாட்கள்தாம் அதிகம்.
தனது துணைவியாரைப் பற்றிச் சொல்லும் போது #எனக்குத்_தொல்லைதராத_துணைவி #அவர்
என்றார்.
விகடன் இதழில் அவர் எழுதிய கவிதையில்

#மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆனால், நமக்குத் தேவைப்படும் போது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது. என் மனைவி மின்சாரமாக இருந்தாள்
#என்_மனைவி_இளமையில்_மதுவாக இருந்தாள்
#நடுமையில்_பாலாக_இருந்தாள்; #முதுமையில்_மருந்தாகஇருந்தாள்.
   இதை படித்துவிட்டு கவிக்கோ அண்ணனுக்கு போன் செய்து "என்னண்ணே! மனைவியை மதுவிற்கு ஒப்பிட்டுள்ளீர்கள்" என்றேன்,
  ஏன் ஆலிம்ஷா மது எனும் வார்த்தை ஹராமா? இளமையில் நம் மனைவி நம் மதியை மயக்கும் மாது தானே" என்றார்.

      கணவரின் நலம் நாடும் மனைவி அவனின் இதயத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள்.
       அண்ணல் நபி ﷺ அவர்கள் தனது இருபத்தைந்தாவது வயதில் தன்னைவிட வயதில் மூத்த கதீஜா(ரழி) அவர்களை மணமுடித்து அவர்களுடன் இருபத்தைந்து வருடங்கள் வாழ்ந்து தனது ஐம்பதாவது வயதில் தனது துணைவியை இழக்கிறார்கள்.
      அதன் பின் பல சமூக,அரசியல் காரணங்களுக்காக பல தாரங்களை மண முடித்தாலும் தனது இறுதி காலம் வரை பதிமூன்றாண்டுகள்  அன்னை கதீஜாவின் நினைவுகளுடனேயே வாழ்ந்தார்கள் என்பதை அன்னை ஆயிஷா(ரழி)அவர்களின் அறிவிப்புகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
  அன்னை கதீஜா அவர்கள் தன்மீது வைத்திருந்த அன்பைப் பற்றிக் 
குறிப்பிடும் போது 
#அவருடைய_அன்பை_அருள்வளமாக_அருளப்பட்டேன் என்கிறார்கள்.
 " அழகானமனைவி,அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே"என்கிறார் கவிஞர்.
    அத்தகைய மனைவியின்  இழப்பு பெரும் துயரமே!
     நேற்று வந்த வேதனையான செய்தி கோவை அப்துல் அஜீஸ் பாகவி யின் துணைவியார் மறைந்த செய்தி.
இளமைக்கும்,முதுமைக்கும் இடையேவரும் நடுமை காலத்தில் ஒருமனிதன் குடும்பாரத்தினால் சிரமப்படுவான். அப்பொழுது அவனுக்குத் தோள் கொடுப்பவள் அன்பான துணைவி.
அந்த நேரத்தில் அந்தத் துணைவியை ப் பிரிவது அவருக்குப் பேரிழப்பே!
    அல்லாஹ் பாகவியாருக்கு மன அமைதியைத் தருவானாக!
மறைந்த சகோதரியின்  பாவங்களை மன்னித்து அவருடைய மண்ணரையை பூங்காவனமாக்குவானாக!
 ஆமீன்.
------கணியூர் இஸ்மாயீல் நாஜி
சிதம்பரம் 27/09/19,

Saturday, September 19, 2020

எதிரிகளின் ஏளனச்சிரிப்பிலிருந்து பாதுகாப்பு

اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

البخاري، كتاب الدعوات، باب التعوذ من جهد البلاء، برقم 6347

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின் ஜஹ்தில் பலாயி
வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா

என் ரப்பே ! தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆ
-----------------------------கணியூர் இஸ்மாயில் நாஜி

ஏகனே! எதிரிகளின் ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து என்னைக் காப்பாயாக
.
பொது மக்கள் கூடியுள்ள இடத்தில் நாம் ஏதோ ஒரு காரணத்தினால் வழுக்கி விழுந்து விட்டால் உடனடியாக நாம் யாராவது நம்மைப் பார்த்து கேலியாக சிரிக்கிறார்களா குறிப்பாக நம்முடைய எதிரிகள் நம்மை பார்த்து சிரிக்கிறார்களா என்று பாப்போம்.

அப்படி சிரிப்பதைப் பார்க்கும் பொழுது விழுந்ததினால் ஏற்படும் வlலியை விட அந்த ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சல் நம்மை மிகவும் பாதிக்கும்.

எதிரிகள் நம்மை பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கக் கூடாது என்று நபிமார்கள் கூட விரும்பியிருக்கிறார்கள்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்ஸினா மலைக்குச் செல்லும் முன் சமுதாயத்தை வழி நடத்தும் பொறுப்பை தன்னுடைய சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்து சென்றார்கள்.

அவர்கள் திரும்பி வந்த போது அம்மக்கள் காளை மாட்டை வணங்கி இணை வைப்பதை கண்டு மூஸா நபியவர்கள், கோபமுற்று ஹாரூன் நபியின் தலைமுடியையும் தாடியையும் பிடித்து இழுத்தார்கள்.
அப்போது 
7:150. ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”

ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் எதிரிகளின் ஏளன சிரிப்பை கண்டு பயந்திருக்கிறார்கள்.

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு குணம் அடைந்த பின் அவரிடம், அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த சோதனைகளில் பெரும் சோதனையாக எதைச் சொல்வீர்கள்?? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள். எனக்கு ஏற்பட்ட பெரும் சோதனை எதிரிகள் என்னை பார்த்து ஏளனசிரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என்றார்கள்

நாம் வாழ்கையில் தோல்வியடைந்து விடக் கூடாது என்று எண்ணுவதை விட பிறர் நம்மை ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி விட கூடாது என்று தான் நாம் அச்சப்படுவோம்.

இந்த மனித இயல்பை வைத்து தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நமக்கு இந்த துஆ வை கற்றுக் கொடுத்தார்கள்.

6616. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்.
அறிவிப்பாளர்;அபூஹுரைரா(ரழி)

இன்னொரு ஹதீஸில்

“அல்லாஹ்வே! நான் நின்ற நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னைப் பாதுகாப்பாயாக
நான் அமர்ந்திருக்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னைப் பாதுகாப்பாயாக
நான் உறங்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னைப் பாதுகாப்பாயாக
என் எதிரி களோ ,பொறாமைக்காரர்களோ என்னைப் பார்த்து நகைக்குமாறு செய்துவிடாதே”
(நூல்.ஹாகிம்)
எனும் துஆ வையும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

எனவே நாம்
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ))
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜஹ்தில் பலாயி
வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா
என் ரப்பே ! தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
என்ற துஆ வை தினந்தோறும் கேட்போம்

--- நினவூட்டல் கணியூர் இஸ்மாயீல் நாஜீ
மீள்