தந்தையே ஆனாலும் தம்பதியர் சண்டையில் தலையிடாதீர்.
----------
அன்னை பாத்திமா (ரழி)அவர்கள் வீட்டிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.
அலீ(ரழி) அவர்கள் எங்கே? எனக்கேட்க
எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனையில் என்னை கோப்படுத்திவிட்டார்.
பின் மதிய ஓய்வெடுக்காமல் வெளியே சென்றுவிட்டார் என்றார் பாத்திமா(ரழி)
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் எங்கே எனத்தேடுமாறு ஒரு நபரை அனுப்ப ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பாக தகவல் தந்தார்.
நபியவர்கள் அங்கே சென்றார்கள்
மேலாடை நழுவி தரையில் கிடக்க ஒருக்களித்து தரையில் ஹஜ்ரத் அலி(ரழி) படுத்திருந்தார்கள்.
நபியவர்கள் ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் உடம்பில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறே
யா அபா துராப்! கும்
#மண்ணின்_மைந்தரே எழுந்திரும் என்றார்கள்.
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் பின்னாளில் தன்னை அபூதுராப் என அழைப்பதை பெரிதும் விரும்பினார்கள்(புகாரி6280)
இந்த சம்பவத்தில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
1.மதியம் ஓய்வெடுக்கும் வேளையில் மகள் வீட்டிற்கு தந்தை முன்னறிவிப்பின்றி செல்லலாம்
2.மகளைச் சந்திக்க தந்தைக்கு கணவனின் அனுமதி தேவையில்லை.
3.மனைவி கோபமடைந்ததை அறிந்தவுடன் மேலும் விவாதம் செய்து பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் கோபம் தீர்ந்தவுடன் பேசலாம் என அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றது ஸய்யித்னா அலி அவர்களின் சகிப்புத்தன்மையைக் காட்டுவதுடன் மனைவி கோபமடைந்தால் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகவும் இருக்கிறது.
4.மதியம் வேளையில் பள்ளிவாசலில் படுத்துறங்கலாம்.
5. எனக்கும் கணவருக்குமிடையே பிரச்சினை என்று பாத்திமா அவர்கள் சொன்னபோது என்ன பிரச்சனை என மகளிடமோ மருமகனான அலி(ரழி) அவர்களிடமோ நபியவர்கள் கேட்கவில்லை.
இதிலிருந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனையில் பெற்றோர் வலியச் சென்று நுழைவது
பண்பல்ல, நபிவழிக்கு மாற்றம் என்று புரிகிறது.
6.மகளை கோபப்படுத்திய நிலையிலும் மறுமகன் ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணை பாசமுடன் தட்டிவிட்டது,
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் மீது நபியவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.
7.ஹஜரத் அலி அவர்களை மண்ணின் மைந்தா என செல்லப் பெயர் வைத்து அழைத்ததும் அதை பெருமிதத்துடன் ஹஜ்ரத் அலிஅவர்கள் ஏற்றுக் கொண்டதிலிருந்து நமக்குப் பிரியமானவர்களை அவர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் செல்லப் பெயர் வைத்து அழைப்பது விரும்பத்தக்கது எனத் தெளிவாகிறது.
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி
