சோதனைகள் தாம் உனது உயர்வுக்கு அடித்தளமிடுபவை.
-இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்)
****************
வாழ்க்கையில் பல துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டவர்கள் இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்.
அவர்களிடம் சோதனைகள் உங்கள் வாழ்க்கைப்பாதையில் தடைகளாக இல்லையா ? எனக்கேட்கப்பட்டது.
இமாம் சொன்னார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக துன்பங்கள் ஏற்படவில்லையென்றால் நான் வழியிலேயே சந்தேகப்பட்டு நின்றிருப்பேன்.
அல்லாஹ் உம்மை ஏதாவது ஒன்றைக்கொண்டு சோதிப்பதில்லை,அது உனக்கு நன்மையாக மாறுவதற்காகவே தவிர. நீ அதை நேரெதிராக எண்ணினாலும் சரியே.
உன் உள்ளத்தை அமைதிப்படுத்து.
நபி யூசுப்(அலை)அவர்களுக்கு சோதனை ஏற்படாமல் இருந்திருந்தால் அவர் தனது தந்தையின் செல்லப்பிள்ளையாக அவரருகேயே இருந்திருப்பார். மாறாக
நபி அவர்கள்அச் சோதனைகளின் காரணமாகவே
எகிப்து நாட்டின் அதிபராக மாறினார்
நபி மூஸா(அலை) அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி செய்வோர் யாருமின்றி நாட்டை விட்டு சென்றவர்கள் நபியாக அந்த நாட்டிற்கு திரும்பினார்கள்.
தான் நேசித்த மக்காவைவிட்டு மனவேதனையுடன் வெறுத்து வெளியேறிய நமது நபி முஹம்மது(ஸல்)அவர்கள் மக்காவை வென்றெடுத்தவராக உள்ளே நுழைந்தார்கள்.
இந்நிகழ்வையெல்லாம் அறிந்த பின்னும் மனஅழுத்தத்துடன் இருப்பீரா?
மன உறுதியுடன் இருங்கள்.
உங்களின் பொறுமைக்குப்பின் அழகான பல நற்செய்திகள் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றன.
அவைகள் இப்பொழுது நீங்கள் அனுபவிக்கும் துன்பத்தினால் ஏற்படும் வேதனைகளை மறக்கடிக்கச்செய்யும்.
- அரபி டுவிட்டரிலிருந்து
கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.

No comments:
Post a Comment