Sunday, January 15, 2023

உங்கள் வாழ்க்கையில் எதிரி

உங்கள் வாழ்க்கையில் #எதிரி,   
  #விரோதி,
 #பகைவன்,
#வெறுப்பவன்,
#பொறாமைக்காரன், #போட்டியாளன்,   
  உங்கள் பணியில் #குறை கண்டுபிடிப்பவன்,  
 உங்கள் #முதுகிற்குப்பின் பேசுபவன்
இவர்கள் இருப்பது இயற்கை ..
இது உங்களுக்கு அளப்பரிய நன்மைகள்  கிடைப்பதற்காகத்தான்.

சிந்தித்தித்துப்பாருங்கள்,
நபிமார்களுக்கும் எதிரிகள் இருப்பதாக குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ 
இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம். 
(அல்குர்ஆன் : 6:112)

எதுவரை என்றால் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் நோக்கி"
என் ரப்பே! எனக்கு எதிரிகளே இல்லாமல் ஆக்கு" எனப் பிரார்த்தித்த போது அல்லாஹ் சொன்னானாம்
"எனக்கே எதிரிகள் இல்லாமல் இல்லையே" என்று.
கருத்தென்ன வென்றால் அகிலமனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்விற்கே எதிரிகள் இருக்கும்போது
நமக்கு இருக்கக்கூடாது என ஆசைப்படுவீர்களா என்ன?

உங்களுக்கு எதிரிகளே இல்லை என்பது நடக்காத காரியம்.
உங்களின் மீது பொறாமை கொள்ளாதவன் இருப்பான் என்பது முடியாத காரியம்.
உங்களைக் கண்டு எரிச்சல் படாதவனே இல்லை என்பது நடக்காத காரியம்

இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான ஸய்யித்னா உமர்(ரழி) அவர்கள் சொல்கிறார்கள்:
 "ஒருவனிடம் ஒரு அருட்கொடை இருந்தால்  அதைக் கண்டு பொறாமை கொள்ளபவன் ஒருவன் இருப்பான்.
ஒருவன் ஈட்டியைப் போல் நேராக இருந்தாலும்  அவனையும் குறை சொல்பவன் ஒருவன் இருப்பான்"

ஒருவனிடம் செல்வம் இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் அறிவாற்றல் இருந்தால் அவனுக்கொரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் தனித்தன்மை இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்
நீங்கள் ஒன்றில் வெற்றி பெற்றால் உங்களுக்கு ஒரு விரோதி உருவாகிவிடுவான்.
இது இயற்கையின் நியதி.இது வாழ்க்கையின் நடைமுறை.

எனவே அமைதியாக இருங்கள்
உங்களுக்கு விரோதிகளும் குறை சொல்பவர்களும் எதிரிகளும் இருப்பது  எச்சரிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு வழிவகுக்கும் 
 #அஷ்ஷைக்_ராத்திப்அந்நாபிலிஸி
#கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி,  காசிமி
.

எதிரி இல்லாதவனே இல்லை

Saturday, January 14, 2023

சோதனைகள் தாம் உயர்விற்கு அடித்தளமிடுபவை

சோதனைகள் தாம் உனது உயர்வுக்கு அடித்தளமிடுபவை.
-இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்)
****************
வாழ்க்கையில் பல துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டவர்கள் இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்.
அவர்களிடம் சோதனைகள் உங்கள் வாழ்க்கைப்பாதையில் தடைகளாக இல்லையா ? எனக்கேட்கப்பட்டது.

    இமாம் சொன்னார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக துன்பங்கள் ஏற்படவில்லையென்றால் நான் வழியிலேயே சந்தேகப்பட்டு நின்றிருப்பேன்.

  அல்லாஹ் உம்மை ஏதாவது ஒன்றைக்கொண்டு சோதிப்பதில்லை,அது உனக்கு நன்மையாக மாறுவதற்காகவே தவிர. நீ அதை நேரெதிராக  எண்ணினாலும் சரியே.

உன் உள்ளத்தை அமைதிப்படுத்து.
நபி  யூசுப்(அலை)அவர்களுக்கு சோதனை ஏற்படாமல் இருந்திருந்தால்  அவர்  தனது தந்தையின் செல்லப்பிள்ளையாக அவரருகேயே இருந்திருப்பார். மாறாக
நபி அவர்கள்அச் சோதனைகளின் காரணமாகவே
எகிப்து நாட்டின் அதிபராக மாறினார்

நபி மூஸா(அலை) அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி செய்வோர் யாருமின்றி நாட்டை விட்டு சென்றவர்கள் நபியாக அந்த நாட்டிற்கு திரும்பினார்கள்.

தான் நேசித்த மக்காவைவிட்டு மனவேதனையுடன் வெறுத்து வெளியேறிய நமது நபி முஹம்மது(ஸல்)அவர்கள் மக்காவை வென்றெடுத்தவராக உள்ளே நுழைந்தார்கள்.

  இந்நிகழ்வையெல்லாம் அறிந்த பின்னும் மனஅழுத்தத்துடன் இருப்பீரா?

 மன உறுதியுடன் இருங்கள்.
உங்களின் பொறுமைக்குப்பின் அழகான பல நற்செய்திகள் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றன.

அவைகள் இப்பொழுது நீங்கள் அனுபவிக்கும் துன்பத்தினால் ஏற்படும் வேதனைகளை மறக்கடிக்கச்செய்யும்.

   - அரபி டுவிட்டரிலிருந்து 
கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.(மீள்)

Friday, January 13, 2023

சோர்வடையாதே சகோதரரே

#சோர்வடையாதே சகோதரா!

சற்று எண்ணிப்பார்

#எத்துணை முறை நீ கேட்டதை 
அவன் கொடுத்திருக்கிறான்

#எத்துணை முறை அவனை 
நீ அழைத்த போது அவன்
உனக்கு பதிலளித்துள்ளான்

#எத்துணை முறை நீ சறுக்கி விழுகின்ற
நேரத்தில் உன்னைத் தாங்கிப்பிடித்துள்ளான்

எத்துணை முறை உன் தேவைகளை
நிறைவேற்றியுள்ளான்

எனவே கவலைப்படாதே
சோர்ந்து போகாதே

அவனிடமே முறையிடு

உன் நிலையை அவன் 
முன் வை
அவன் உன் குறையைத் தீர்ப்பான்
என நல்லெண்ணம் கொள்
அவன் மீதே நம்பிக்கை வை
அவனுடைய முடிவை
திருப்தியுடன் ஏற்றுக்கொள்
அவன் எனக்குப் போதுமானவன்
என மன அமைதி கொள் 

திரும்ப திரும்ப இந்த வசனத்தை 
சொல்லிக் கொண்டே இரு.

 وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ‏
உபவ் விளு அம்ரீ இலல்லாஹ் இன்னல்லாஹ பஸீரும் பில் இபாத்

 என்னுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்" 
(அல்குர்ஆன் : 40:44)

---முனைவர் ஷைக் #ஆயிளுல் கர்னி
அவர்களின் டுவிட்டர் செய்தியிலிருந்து
சிறிய இணைப்புடன் #கணியூர் இஸ்மாயீல் நாஜி

Tuesday, January 3, 2023

கவலை துக்கம் கடன் சுமைகள் நீங்க துஆ வரும் இமாம் இப்னு கய்யிம் அவர்களின் விளக்கமும்

கவலை.துக்கம்,கடன் சுமைகள் நீங்க காத்தமுன் நபிய்யீன் ﷺ அவர்கள் கற்றுத்தந்த துஆவும் 

துஆ விற்கு இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்களின் விளக்கமும் 
*****************************************   
     ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள், அங்கே  அன்சாரித் தோழர் அபூ உமாமா(ரழி) அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். 
அருகே சென்று ,
அபூஉமாமா! தொழுகைக்கான  நேரம் இப்பொழுதில்லையே  ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்"  எனக்கேட்டார்கள்.
   அதற்கு   அபூஉமாமா(ரழி),
"நபியவர்களே! கவலையும்,கடன்சுமையும என்னைமிகைத்து கலங்க வைக்கின்றன"  என்றார்.

 அபூ உமாமா! உனக்கு சில வாக்கியங்களைச் சொல்லித்தருகிறேன்., 
காலையும், மாலையும் ஓதிவா உனது கவலைகளும்,கடன்களும் தீரும் என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கீழ்கண்ட துஆவைக் கற்றுக்கொடுத்தார்கள்

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ،
 وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ،
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி 
 வ அஊதுபிக மினல் அஜ்லி வல் கஸலி 
 வ அஊதுபிக மினல்  ஜுப்னி  வல் புக்லி 
 வ அஊதுபிக மின் gaஙலபதித் தைனி 
வ கஹ்ரிர் ரிஜால்

பொருள் : யா அல்லாஹ்!  நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். 
இயலாமை சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்  தேடுகிறேன்.
 கோழைத்தனம் ,கருமித்தனத்தை விட்டும்
 உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
 கடன் மிகைப்பதை விட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை  விட்டும் உன்னிடம்  பாதுகாப்புத் தேடுகிறேன்."

    நபித்தோழர்   அபூஉமாமா சொல்கிறார்,

 நான் நபியவர்கள் கற்றுக்கொடுத்த துஆவை ஒதி வந்தேன் எனது கவலைகள் தீர்ந்தன,கடன்கள் நிறைவேறின.
    அறிவிப்பாளர்; அபூ ஸயீத் அல்குத்ரி(ரழி)
நூல் :அபூதாவூத் 1555.

------------------------------------------------------

     இந்த துஆவிற்கு விளக்கம் தந்த அறிஞர் இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:

மனிதனின் மனதைப்பாதிப்பவைகள் எட்டு விடயங்கள்
அவைகளை நான்கு இணைகளாக பிரிக்கலாம்.

முதல் இணை #கவலை_துயரம்

மனஅழுத்தம் இரண்டு காரணங்களால் ஏற்படலாம்
ஒன்று வருங்காலத்தில்  நாம் எதிர்பார்பபது,நடக்குமா?நடக்காதா என்ற எதிர்பார்ப்பால் ஏற்படும் #கவலை.

மற்றொன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு,நெருங்கியவர்களின் இழப்பு போன்றவைகளால் ஏற்படும் #துயரம்

அடுத்த இணை #இயலாமை_சோம்பல்

நிலைமைகளை சீர்செய்ய முயற்சி செய்தும் முடியாமல் போவது #இயலாமை
நிலைமைகளை சீர் செய்ய முயற்சிக்காமல் இருப்பது #சோம்பேறித்தனம்

அடுத்த இணை #கருமித்தனம்_கோழைத்தனம்

நிலைமைகளை சீர் செய்ய பணத்தை செலவு செய்ய மனமில்லாமை #கருமித்தனம்
உடலால் உழைக்கப்பயப்படுவது #கோழைத்தனம்

மேற்கண்ட ஆறு குணங்கள் மனிதனிடம் மிகைக்கும் போது  ஏற்படுவது
அடுத்த இணையான #கடன் பெருகுவதும் அதன் காரணமாக கடன் கொடுத்த #மனிதர்களின்ஆதிக்கமும்.
   
    மனிதனின் பலவீனங்களை நன்கறிந்த நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கேற்படும் துன்பங்களுக்கு அடிப்படை காரணிகளான  கவலை,துயரம்,இயலாமை,சோம்பல்,கருமித்தனம்,கோழைத்தனம்,கடன்சுமை போன்றவைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு பணித்தார்கள்.
அண்ணல் நபியின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து அபூ உமாமா (ரழி) மனமுறுகி பிரார்த்தித்தபொழுது  அல்லாஹ் அவருடைய கடன்களும் கவலைகளும் தீர்க்கும் பாதைகளை திறந்துவிட்டான்.

நாமும் நம்பிக்கையுடன் இந்த துஆவை காலையில் பஜ்ர் தொழுகைக்குப் பின்னும் மாலையில் மஃரிப் தொழுகைக்குப் பின்னும் ஓதிவருவோம். இன்ஷாஅல்லாஹ்.
அல்லாஹ் நம்முடைய கவலைகளையும்,கடன்களையும் நீக்கி அருள் புரிவானாக!ஆமீன்.
        روضة المحبين 
எனும் நூலிருந்து தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ.தேவ்பந்தி.