Friday, December 13, 2013

அண்ணல் நபியும் கிராமத்து அரபியும்


அண்ணல் நபியும் கிராமத்து அரபியும்

 அண்ணல் நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கிராமத்தில் இருந்து ஒரு அரபி வந்து சொன்னார்: நான் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறேன். ஐ வேளை தொழுகிறேன். நான் வேறு ஒன்றும் செய்வதில்லை. நான் ஏழை. என் மீது ஜக்காத்தோ ஹஜ்ஜோ கடமையில்லை. கியமாத் நாள் வந்து விட்டால் நான் எந்த வீட்டில் இருப்பேன்.

   அப்பாவித்தனமான அந்த அரபியின் பேச்சைக் கேட்டு சிரித்த அண்ணல் நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: உன் இரண்டு கண்களை இரண்டு விஷயத்தில் பாதுகாத்துக் கொள். ஒன்று அல்லாஹ் தடுத்து இருப்பதை பார்க்காது இருத்தல். மற்றொன்று, மனிதர்களை கேவலமான கண்களால் பார்க்காது இருத்தல். உன் உள்ளத்தை இரண்டு விஷயங்களில் பாதுகாத்துக் கொள். ஒன்று, குரோதம், மற்றொன்று பொறாமை. உன் நாவை இரண்டு விஷயத்தில் பாதுகாத்துக் கொள்: ஒன்று, பொய், மற்றொன்று புறம் பேசுதல். இவ்வாறு நீ செய்தால் என்னுடன் சொர்க்கத்தில் இருப்பாய்.

   அண்ணல் நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்திய படி நாம் வாழ அல்லாஹ் தவ்fiiக் செய்வானாக.ஆமீன்.

                 நூல்:ரூஹுல் பயான்