اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
البخاري، كتاب الدعوات، باب التعوذ من جهد البلاء، برقم 6347
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின் ஜஹ்தில் பலாயி
வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா
என் ரப்பே ! தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆ
-----------------------------கணியூர் இஸ்மாயில் நாஜி
ஏகனே! எதிரிகளின் ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து என்னைக் காப்பாயாக
.
பொது மக்கள் கூடியுள்ள இடத்தில் நாம் ஏதோ ஒரு காரணத்தினால் வழுக்கி விழுந்து விட்டால் உடனடியாக நாம் யாராவது நம்மைப் பார்த்து கேலியாக சிரிக்கிறார்களா குறிப்பாக நம்முடைய எதிரிகள் நம்மை பார்த்து சிரிக்கிறார்களா என்று பாப்போம்.
அப்படி சிரிப்பதைப் பார்க்கும் பொழுது விழுந்ததினால் ஏற்படும் வlலியை விட அந்த ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சல் நம்மை மிகவும் பாதிக்கும்.
எதிரிகள் நம்மை பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கக் கூடாது என்று நபிமார்கள் கூட விரும்பியிருக்கிறார்கள்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்ஸினா மலைக்குச் செல்லும் முன் சமுதாயத்தை வழி நடத்தும் பொறுப்பை தன்னுடைய சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்து சென்றார்கள்.
அவர்கள் திரும்பி வந்த போது அம்மக்கள் காளை மாட்டை வணங்கி இணை வைப்பதை கண்டு மூஸா நபியவர்கள், கோபமுற்று ஹாரூன் நபியின் தலைமுடியையும் தாடியையும் பிடித்து இழுத்தார்கள்.
அப்போது
7:150. ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”
ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் எதிரிகளின் ஏளன சிரிப்பை கண்டு பயந்திருக்கிறார்கள்.
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு குணம் அடைந்த பின் அவரிடம், அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த சோதனைகளில் பெரும் சோதனையாக எதைச் சொல்வீர்கள்?? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள். எனக்கு ஏற்பட்ட பெரும் சோதனை எதிரிகள் என்னை பார்த்து ஏளனசிரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என்றார்கள்
நாம் வாழ்கையில் தோல்வியடைந்து விடக் கூடாது என்று எண்ணுவதை விட பிறர் நம்மை ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி விட கூடாது என்று தான் நாம் அச்சப்படுவோம்.
இந்த மனித இயல்பை வைத்து தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நமக்கு இந்த துஆ வை கற்றுக் கொடுத்தார்கள்.
6616. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்.
அறிவிப்பாளர்;அபூஹுரைரா(ரழி)
இன்னொரு ஹதீஸில்
“அல்லாஹ்வே! நான் நின்ற நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னைப் பாதுகாப்பாயாக
நான் அமர்ந்திருக்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னைப் பாதுகாப்பாயாக
நான் உறங்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னைப் பாதுகாப்பாயாக
என் எதிரி களோ ,பொறாமைக்காரர்களோ என்னைப் பார்த்து நகைக்குமாறு செய்துவிடாதே”
(நூல்.ஹாகிம்)
எனும் துஆ வையும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
எனவே நாம்
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ))
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜஹ்தில் பலாயி
வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா
என் ரப்பே ! தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
என்ற துஆ வை தினந்தோறும் கேட்போம்
--- நினவூட்டல் கணியூர் இஸ்மாயீல் நாஜீ
மீள்

No comments:
Post a Comment