Friday, August 14, 2020

ஏன்தரூதே இப்ராஹீம்

ஏன் இப்ராஹீம் நபி(அலை)அவர்களை  மட்டும்  மற்ற நபிமார்களை  விட தினந்தோறும் நினைவுகூறுகிறோம்.
*****************************************************-
நாம் ஒவ்வொரு தொழுகையிலும் கடைசியில் இறுப்பில் நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஸலவாத் சொல்லும் போது நபியிய்யினா இப்ராஹீம் நபி(அலை)அவர்களையும் இணைத்துக் கொள்கிறோம்.

ஸலவாத்துகளில் சிறந்தது #ஸலவாத்தே_இப்ராஹிமிய்யா எனப்படும் இப்ராஹீம் நபிஅவர்களையும்,அவர்களின் குடும்பத்தாரையும் இணைத்து சொல்லப்படும் ஸலவாத்துதான்.

இப்ராஹீம் நபி உலுல் அஜ்ம் எனப்படும் மன உறுதியுடன் எதிரிகளுடன் போராடியவர் என அல்லாஹ்வால் பாராட்டப்பட்டவர்கள் எனவே அவர் பெயர் இணைக்கப்படுகிறது என  நீங்கள் பதில் சொன்னால்
 அந்த  உலுல் அஜ்ம் பட்டியலில் #நபிநூஹ்_நபிமூஸா_நபிஈஸா
அலைஹிமுஸ்ஸலாம் அவர்களும் வருகிறார்களே அவர்களை ஏன் நாம் தினந்தோறும் நினைவு கூறுவதில்லை?

 சற்று நாம் ஆய்வு செய்தால் அருள்மறை குர்ஆனிலேயே இதற்கானவிடை இருக்கிறது.

ஸய்யித்னா இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆக்களில் 

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ 
(இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!
(அல்குர்ஆன் : 26:83)

وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ 
மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!
(அல்குர்ஆன் : 26:84)

என்ற துஆ  முக்கியமானது.
நபி இப்ராஹீம் அவர்கள் தன் சந்ததியர்கள் தனக்காக துஆ செய்யவேண்டும் எனவிரும்பினார்கள்,அதை அல்லாஹ்விடம் கோரிக்கையாக வைத்தார்கள்.

 அல்லாஹ் நபியவர்களின் ஆவலை நிறைவேற்றினான்.

இன்னொரு இடத்தில் அல்லாஹ் சொல்கிறான்:

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌‏ 
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
(அல்குர்ஆன் : 37:108)

سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ 
சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது!
(அல்குர்ஆன் : 37:109)

كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
(அல்குர்ஆன் : 37:110)

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 
திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
(அல்குர்ஆன் : 37:111)

என அல்லாஹ் அவரைப் புகழ்ந்து  அவரின் துஆவை ஏற்று ஸலவாத்தும் சொல்கிறான்.
துல்ஹஜ் மாதம் வந்துவிட்டால்  இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை பற்றி அதிகமாக பேசப்படுகிறது.

இவை அனைத்தும் நபியவர்களின் துஆவினால்தான்
துஆ என்பது அல்லாஹ் நமக்களித்திற்கின்ற நல்வாய்ப்பு அதை நழுவ விட்டு விடாதீர்.
---அரபி இணைய தளத்திலிருந்து தமிழில்  கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:

Post a Comment