Friday, February 2, 2018

எழதுகோலின் மீது ஏன் சத்தியமிட்டான்?

ஏக இறைவன் எழுதுகோலின் மீது ஏன் சத்தியமிட்டான்???
*******************************************************************----கணியூர் இஸ்மாயீல் நாஜி
------------------------------------------=-----------------------------
68:1   نٓ‌ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ
68:1. நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக!
68:2   مَاۤ اَنْتَ بِـنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ‌ۚ
68:2. நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர்.
68:3   وَاِنَّ لَڪَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍ‌ۚ
68:3. என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது.
68:4   وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
68:4. மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
68:5   فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ
68:5. விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:6   بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ
68:6. உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும்...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ் அல்லாத படைப்பினங்கள் மீது சத்தியமிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது . ஆனால், மாமறை குர்ஆனில் பல இடங்களில் படைக்கப்பட்ட இயற்கைகள் மீது அல்லாஹ் சத்தியமிட்டுள்ளான்.
ஏன்?
நபிகள் நாயகத்தின் வாழ்நாள் மீது கூட அல்லாஹ் சத்தியமிட்டுள்ளான்.(15-72)
இவ்வாறு அல்லாஹ் சத்தியமிடுவதற்கான  காரணம் என்ன என்பதை பற்றி புனித குர்ஆனின் விரிவுரையாளர்கள் பல்வேறு விளக்கங்களை தந்துள்ளார்கள்.

அந்த காரணங்களை விரிவாக விளக்குவது இந்த பதிவின் நோக்கம் அல்ல.

அந்த விளக்கங்களில் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஒரு விளக்கத்தின் அடிப்டையில் இந்த பதிவு

பொதுவாக, அரபுகள் சத்தியமிட்டு பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனாலும், இயற்கை பொருட்கள் மீது பொய் சத்தியமிட்டால், பொய்  சத்தியமிட்டவருக்கு அழிவு ஏற்படும் என்றும் நம்பினார்கள்.
அல்லாஹ், அவர்களுக்கு அவர்களின் நடையிலேயே இயற்கை பொருள் மீது சத்தியமிட்டு சொன்னான் என்று ஒரு கருத்து இருக்கிறது.

அத்துடன், அல்லாஹ் எந்த கருத்தை சொல்ல வருகிறானோ அந்த கருத்துடன் தொடர்பு கொண்ட  ஒரு பொருளின் மீது அவன் சத்தியமிட்டதாக  விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த அத்தியாயம் இறங்கிய சூழ்நிலையை எண்ணி பாருங்கள். தங்கள் கண் முன்னால், வளர்ந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் திடீரென தன்னை நபி என்று சொல்கிறார்,  ஆண்டாண்டு காலமாக நாம் நாம் கடைபிடித்து வரும் கொள்கைகளை மூடநம்பிக்கை என விமர்சிக்கிறார். எழுத, படிக்க தெரியாத அவர் சுத்தமான அரபு மொழியில் வசனங்களை ஓதுகிறார் எனவே அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று மக்கத்து குரைஷியர்கள் பிரச்சாரம் செய்தனர்.

அந்த நேரத்தில் இந்த வசனம் இறங்குகிறது.

இறைவனின் கருணையால் நபியவர்களே நீங்கள் பைத்தியம் இல்லை என்று சொன்ன இறைவன் அதை உறுதி படுத்தும் வண்ணம்

எழுதுகோலின் மீது சத்தியமாக, அந்த எழுதுகோல் எவற்றையெல்லாம் எழுதுகிறதோ அவைகளின் மீது சத்தியமாக!

நபி அவர்களே நீங்கள் பைத்தியம் அல்ல. ஏனென்றால், ஒரு பைத்தியக்காரரின் உளறல்களை யாரும் எழுத மாட்டார்கள். ஆனால், உம்மை பற்றி எழுதுகோல்கள் இருக்கின்ற வரைக்கும் எழுதிக் கொண்டே இருக்கும்.
இது ஒன்றே நீங்கள் பைத்தியம் அல்ல என்பதற்கு  இறுதி நாள் வரை ஆதாரம்.

   இன்னொன்று, நீர் நற்குணத்தில் இருக்கின்றீர்.

ஒரு மன நோயாளிக்கு மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாது. திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பான், துக்க வீட்டில் வாய் விட்டு சிரிப்பான். ஆனால் நீர், மக்களின் மனதை கவரும் நற்குணமிக்கவராய் இருக்கின்றீர்.

இதுவும் நீங்கள் மன நோயாளி இல்லை என்பதற்கு ஆதாரம் என்று சொல்லும்

அல்லாஹ், அடுத்து சொல்கிறான்.

  68:5   فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ
68:5. விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:6   بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ
68:6. உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதை..

இன்று வரலாறு, யார் பைத்தியக்காரர்கள் என்பதையும் யார் புகழுக்குரியவர் என்பதையும் இன்றைய உலகிற்கு விரிவாக விளக்குகிறது என்றால், அதற்கு முக்கியமான காரணியாக இருப்பது எழுதுகோலும் அதன் எழுத்துக்களும் தான்.

எழுதுகோலின் மீதும், அதை எழுதிக் கொண்டிருப்பைவைகளின் மீதும் சத்தியமாக என்று அல்லாஹ் சொல்லியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

اَلرَّحْمٰنُۙ‏ 
அளவற்ற அருளாளன்,
(அல்குர்ஆன் : 55:1)

خَلَقَ الْاِنْسَانَۙ‏ 
அவனே மனிதனைப் படைத்தான்.
(அல்குர்ஆன் : 55:3)
عَلَّمَهُ الْبَيَانَ‏ 
அவனே மனிதனுக்கு  விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 55:4)

மனிதனுக்கு எவ்வாறு விளக்கத்தைக் கற்று கொடுத்தான் என்பதை இன்னொரு வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏ 
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:4)

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ‏ 
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:5)

ஒரு மனிதனின் அறிவு விரிவடைவதற்கு
பல காரணிகள் இருக்கின்றன.
அதில் மிக முக்கியமானவை படித்தல்,செவிமெடுத்தல்,அனுபவத்தின் அடிப்படையில் அவன் கற்றுக்கொள்ளல்.
இம்மூன்றால் தான் பெற்ற அறிவை பிறர் பயன் பெற  அவர்களிடம் கொண்டு செல்ல உறுதுணையாக இருப்பது எழுதுகோல்.

மனிதனுக்கு எழுதுகோலை கொண்டு கற்று கொடுத்தான். அவன் அறியாததை எல்லாம் அவனுக்கு கற்று கற்றுக்கொடுத்தான்.
என்ற வசனத்தில் மனிதன் புது புது செய்திகளை அறிந்துக் கொள்வதற்கு எழுதுகோல் உறுதுணையாக இருப்பதை சுட்டி காட்டுகிறான்.
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி

---

No comments:

Post a Comment