Friday, October 30, 2020

டெல்லி #ஜாமியா_மில்லியா #இஸ்லாமியா பல்கலைக்கழகம்

 


#உலமாக்களும் #முற்போக்கு சிந்தனைமிக்க முஸ்லிம் கல்வியாளர்களும் இணைந்து நூறு ஆண்டுகளுக்கு முன்கி.பி. 1920 ல் துவக்கிய டெல்லி #ஜாமியா_மில்லியா #இஸ்லாமியா பல்கலைக்கழகம் தேசிய அளவில் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இவ்வாண்டு (2020)10-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஜாமியா பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த சாதனையை செய்திருக்கிறது
சென்ற ஆண்டு நடைபெற்ற சிஐஏ போராட்டத்தில் ஜாமியா மாணவர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தனர்
இன்றுவரை சஃபூரா போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் வைத்து பாஸிஸ அரசு துன்புறுத்தி வருகிறது

இந்த பல்கலைக் கழகத்தை முடக்கிவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜாமியா தீவிரவாதிகளை உருவாக்குகிறது
என டெல்லி தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கிடையே மதக்கலவரத்தை உருவாக்க முயற்சித்தனர்.
அதை இந்து மாணவர்களே முறியடித்தனர்.

ஜாமியாவை அவர்கள் வெறுப்பதற்கு அடிப்படைக் காரணம் ஜாமியாவின் வரலாற்று பின்னணி தான்.

ஜாமியா #1920 இல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின்போது துவக்கப்பட்டது
ஆங்கிலேயர்களின் துணையுடன் நடக்கும் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் வெளியே வரவேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் தீர்மானம் இயற்றியது அந்த தீர்மானத்தை மால்டா சிறையிலிருந்து விடுதலையாகி வந்த வந்த தாருல் உலூம்தேவ்பந்த் தலைமை ஆசிரியர் #மௌலானா_மஹ்மூதுல்ஹஸன் #தேவ்பந்தி அவர்கள்,
"ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது முஸ்லிம்கள் மீது கட்டாய கடமை எனவே அவர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்
மூளையை மழுங்க வைத்து தனது அடிமையாக வைத்திருக்கும் இஸ்லாமிய கொள்கை களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானபாடத்திட்டத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என பத்வா வழங்கினார்.

(ஆங்கில மொழியைக் கற்கக் கூடாது என்றல்ல.)
(After returning to British India, Mahmud al-Hasan joined the Khilafat movement. He also issued his famous fatwa (legal opinion on Islamic law) of non-cooperation against the British rule in India.[
"Maulana Mahmud al-Hasan (1851-1920)". Jamia Millia Islamia website. 11 November 2004.)

பத்வா வெளியிட்ட பின் மவ்லானா அவர்கள், காந்திஜியுடன்
அப்போது வெள்ளையர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட Muhammadan Anglo-Oriental College (தற்பொழுது அலிகர் முஸ்லிம் பல் கலைக் கழகம்)இருக்கும் அலிகர் நகருக்கு தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாது சென்று அங்குள்ள பேராசிரியர்களையும்,மாணவர்களையும்
சந்தித்துப் பேசினார்கள்.
Muhammadan Anglo-Oriental College நிர்வாகம் பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக மாணவர்களும்,பேராசிரியர்களும் உணர்ந்ததால்
அவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒத்துழைப்பு நல்கினர்.
அதேநேரம்
அரசாங்க செல்வாக்கிலிருந்து விடுபடும் ஒரு புதிய தேசிய முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கான தேவையை சில மாணவர்களின் கோரிக்கையின் வாயிலாக உணரப்பட்டது

அதற்காக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கவேண்டும் என முடிவெடுத்து
மேறகத்திய கல்வியில் ஆர்வமுடைய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் இணைந்து அலிகரில் ஜாமியாவிற்காக29 October 1920. ல் மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்

அன்றைய ஜாமியா விற்கு அடித்தள மிட்டவர்கள்

#மவ்லானா_முஹம்மதுஅலி #ஜவ்ஹர்
,#டாக்டர்_முக்தார்_அப்பாஸ்அன்சாரி
#கவிஞர்அல்லாமா_இக்பால்,
#முப்திகிபாயத்துல்லாஹ்,
#மவ்லானாஅப்துல்பாரிபரங்மஹாலி,
#மவலானாசய்யித்சுலைமான்ந்த்வி,
#மவ்லானாஅபுல்கலாம்ஆஜாத்,
#மவலானா_ஹுஸைன்அஹ்மத்_மதனி
#ஹகீம்அஜ்மல்கான்,
#நவாப்இஸ்மாயீல்கான் மற்றும் பலர்.

#காந்திஜிஅவர்களும்
#கவிஞர்
#ரவீந்திரநாத்தாகூர் அவர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.
கவிஞர் தாகூர் அவர்கள்#
#one_of_the_most_progressive_educational
institutions_of_india

"இந்தியாவின் மிகவும் முற்போக்கான கல்வி நிறுவனங்களில் ஒன்று".
என பாராட்டினார்

அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்களின் தலைமை உரையை மவ்லானா ஷப்பிர் அஹ்மத் உஸ்மானி அவர்கள் வாசித்தார்கள்
அந்தஉரையில் இந்த நிறுவனத்தின் நோக்கம் சமூகத்திற்கு சேவை செய்யும் ,தீமைகளை எதிர்த்துப் போராடும் மாணவர்களை உருவாக்குவதோடு இஸலாமிய விழிமியங்களையும் பாதுகாக்கும்.
இந்த நிறுவனம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுதரணமாக திகழும்."
எனக் குறிப்பிட்டார்கள்

ஜாமியாவிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான (மேனாள் குடியரசு தலைவர்) #டாக்டர்ஜாகிர்ஹுஸைன் "ஜாமியாவின் நோக்கத்தை இவ்வாறு எழுதுகிறார்

"ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இயக்கம் கல்வி மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கான போராட்டமாகும். இது இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு வரைபடத்தைத் தயாரிக்கும், ஆனால் அதே நேரத்தில் பொதுவான இந்தியர்களுக்கான தேசிய கலாச்சாரத்தை உருவாக்கும். உண்மையான மதக் கல்வி இந்திய முஸ்லிம்களிடையே தேசபக்தியையும் தேசிய ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் என்ற சிந்தனையின் அடித்தளத்தை அமைக்கும், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான நாடுகளின் ஒத்துழைப்பில் தனது பங்கை வகிக்கும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் பங்கெடுப்பதில் பெருமிதம் கொள்ளும் . ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை ஸ்தாபிப்பதன் நோக்கம், இந்திய முஸ்லிம்களுக்கான பொதுவான பாடத்திட்டத்தை எதிர்கால சவால்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, எதிர்காலத்தில் எஜமானர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவதும் ஆகும்.
#ஹக்கீம் அஜ்மல் கான் முதல் chancellor ஆகவும்,#மவ்லானா முஹம்மது அலி ஜவகர்Vice Chancellorஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

1926ல் ஜெர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த #பெர்லின் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற #டாக்டஜாஹிர்ஹுசைன்,
கல்வியல்துறையில் Ph.D.முடித்திருந்த #டாக்டர்ஆபித்ஹுஸைன்
ஆக்ஸ்போர்டின் வரலாற்று அறிஞர்
#முஹம்மதுமுஜீப் ஆகியோர்
பேராசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற வந்தனர்.
(இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே ஊதியத்தில் பணியாற்றினர்)

1928ல் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் vice chancellorபதவி ஏற்ற பின் ஜாமியா பல பொருளாதர சிக்கல்களுக்கிடையேயும் வளர்ந்தது
1936ல் ஜாமியா டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1939ம் வருடம், இளவயதிலேயே இஸ்லாமை ஏற்றவர் தத்துவஞானி,,சிறந்த கல்விமான்,சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் இருப்பவர் எனும் பல சிறப்புகளைக் கொண்ட
#மவ்லானா_உபைதுல்லாஹ்சிந்தி (1872-1944) அவர்கள் டாக்டர் ஜாகிர் ஹுசைனின் அழைப்பின் பேரில் ஜாமியாவில் தங்கி குறைந்த ஊதியத்தில் பணியாற்றினார். #ஷாவாலியுல்லாஹ்(ரஹ்) அவர்கள் பின்பற்றிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய விழுமியங்களையும்,கொள்கைகளையும் ஆய்வு செய்யும் islamic studies என்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கு #பைத்துல்ஹிக்மா எனபெயரிட்டார்.
அந்தத் துறை இன்றுவரை நடைபெற்று வருகிறது

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன் 1946ல் ஜாமியாவின்
இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
அப்பொழுது சுதந்திரப் போராட்டம் கொதிநிலையில் இருந்தது.

பாக்கிஸ்தான் வேண்டுமா? வேண்டாமா என்ற பிரச்சனையால் முஸ்லிம் சமுதாயம் பிளவுண்டு கிடந்தது.
இந்நிலையில் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தலைவராக வீற்றிருந்த விழாமேடையில்
இருதுருவங்களாக இருந்த தலைவர்கள் ஜாஹிர்ஹுஸைன் அவர்ளின் இரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
ஒருபக்கம் #முஹம்மதுஅலிஜின்னாசாஹிபும்
#லியாகத்அலிகானும் அமர்ந்திருக்க மறுபக்கம் #பண்டிட்_ஐவஹர்லால்நேருவும்
#ராஜாஜியும் அமர்ந்திருந்தனர்.
இது ஜாமியாவின் சிறப்பினை உணர்த்துகிறது.

1947ல் இந்தியப்பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஜாமியா பெரும் சேதத்தைச் சந்தித்தது.
பல்லாயிரம் நூல்களைக் கொண்ட ஜாமியாவின் நூலகம் முற்றிலும் தீக்கிரையானது.

சுதந்திர இந்தியாவில் ஜாமியாவின் வளர்சசி பற்றி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:

Post a Comment