Thursday, October 15, 2020

தந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

பேராசையால் தன் மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை.
 ----
1967ம் ஆண்டு தேவ்பந்த் மதரஸாவிற்கு டெல்லிவரை ஒரு 'ரயிலிலும்', டில்லியிலிருந்து வேறொரு ரயிலிலிலும் தேவ்பந்த் செல்ல வேண்டும்.
அது தொடர்பாக  முன்பதிவு செய்ய அங்கே ஏற்கனவே கல்வி கற்று வரும் ஒரு சகோதரரிடம் ஆலோசனை கேட்டேன்.
    ரயிலில் செல்லும் மாணவர்களுக்கு இருவழி கட்டண சலுகை உண்டு.
இறுதியாண்டு மாணவர்கள் திரும்பிச் செல்லமாட்டார்கள்,ஆனால் அந்த பாஸ் அவர்களிடம் இருக்கும் அதை வாங்கி அவர் பெயரில் நீ கட்டண சலுகையுடன் டெல்லி செல்லலாம் ' என்ற ஆலோசனையை வழங்கினார்.
     இதை என் தந்தை - யாக்கூப் வாத்தியாரிடம் சொன்னேன்.
   அந்நேரம் என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.பயணக்கட்டணம் குறையும் என்றால் நல்லதுதானே என எண்ணுவார் என்றே எண்ணினேன்.
     ஆனால் என் தந்தை, 'போறது,நேர்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும் மார்க்கக் கல்வியைக் கற்க, அதன் துவக்கமே பித்தலாட்டமா? நீ அந்த கல்லூரியின் மாணவனாக இன்னும் சேராதபோது அந்தக் கல்லூரின் மாணவன் என இன்னொரு மாணவனின் பெயரைப் பயன்படித்தி கட்டண சலுகை பெறுவது,அரசாங்கத்தை ஏமாற்றும் செயலல்லவா? ஆலிமான நீயே மோசடி செய்யலாமா?' எனக்  கண்டித்தார்.
     என் தந்தை நான் தவறுசெய்த பொழுதெல்லாம் அடித்துக் கண்டிக்கத் தவறியதில்லை.
      என் தந்தை  என் பாட்டனாரால் ஆரம்பிக்கப்பட்ட கணியூர் இஸ்லாமிய துவக்கப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.
   எங்கள் பள்ளியில் ஒரு கிருத்துவர் ஆசிரியராக இருந்தார். ஒருமுறை அவர் சர்சிற்குச் செல்லும் வழியிலிருந்த வைக்கோல் போரின் மீது நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவ்வழியே வந்த அந்த ஆசிரியரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஒளிந்துகொண்டோம். இது போன்று இரண்டு மூன்று முறை செய்தோம்.
    மறுநாள் அந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் என் தந்தையிடம் சொல்லிவிட என் தந்தை மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப் படுத்தும்வண்ணம்  நடப்பியா? என பிரம்பால் அடித்தார். அதே நேரத்தில் எங்களிடம் நகைச்சுவையாகவும் பேசுவார்.
     ஒழுக்கத்தைக் செயல்வடிவில் கற்றுக் கொடுப்பவர்தான் தந்தை.
      நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் இளந்தளிர்களான அம்மாணவர்களைப் பார்த்து ஒரு இளைஞனின் தந்தை என்ற முறையில் என் மனம் பதைபதைத்தது.
    தந்தையின் பேராசையால்  அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. 
     கல்லூரி செல்லவேண்டியவன் சிறைக்குச் சென்றது அவன் உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கும்?
    இது எதனால் தன் மகனுக்கு நேர்வழியைக் கற்றுத்தர வேண்டிய தந்தையே அவனை தவறாக வழிநடத்தியதுதான் காரணம்.
       எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மல்லிப்பட்டினத்தில் நடந்த மீலாது விழாவில் கலந்து கொண்டு நானும் #மறுமலர்ச்சி_ஆசிரியர்_நாவலர் 
#ஏ_எம்_யூசுப்சாஹிபும்
பேருந்தில் ஒன்றாக  பட்டுக்கோட்டை பயணித்தோம். அப்பொழுது  அவர் என்னிடம் என் மகன் மருத்துவம் படிக்க ஆசைப் படுகிறேன் என்றான். நான் அவனிடம் சொல்லிவிட்டேன், எம்ஜிஆர் என் நண்பர் என்பதால் உனக்கு மருத்துவசீட்டு வாங்கித் தருவேன் என எதிர்பார்க்காதே! மெர்ரிட்டில்  நீ பாஸ் செய்தால் உன்னை அரசு மருத்துவக்கலலூரியில் சேர்க்கிறேன்' எனச் சொல்லிவிட்டேன் என்றார்.
 தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

No comments:

Post a Comment