#குர்ஆனைக் கொண்டு
நம் உள நோயைக்
குணப்படுத்துவோம்.
****************
நபி பேரர் #இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்) சொல்கிறார்கள்:
தனக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என அச்சப்படும் நிலையில்
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
#ஹஸ்புனல்லாஹ் வநிஃமல் வகீல்
“எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்”
(அல்குர்ஆன் : 3:173) என சொல்லாத ஒருவனைக் கண்டு நான் வியப்படைகிறேன்,
ஏனென்றால் அந்த வசனத்தின் தொடர்ச்சியாக அவ்வாறு சொன்னவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்,
فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ
இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை.
(அல்குர்ஆன் : 3:174)
#கடந்த கால செயல்களினால் துக்கப்படும் ஒருவன்
لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ
#லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாழிமீன்
“உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.”
(அல்குர்ஆன் : 21:87)
எனும் யூனுஸ் நபி(அலை)அவர்களின் பாவமன்னிப்பை கேட்காத ஒருவனைப் பற்றி வியப்படைகிறேன்,
ஏனெனில் இந்த வசனத்தை அடுத்து அல்லாஹ் சொல்கிறான்,
فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ
அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம்.
(அல்குர்ஆன் : 21:88)
சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சியாலும்,மோசடி பேர்வழிகளின் மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் ,
اُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ
#உபவ்விளு அம்ரீ இலல்லாஹ்
இன்னல்லாஹ பஸீரும் பில் இபாத்
என் விவகாரத்தை அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன்
திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 40:44)
என்ற குர்ஆனின் வசனத்தை நினைவு கூறாமல் இருப்பதைக் கண்டு வியப்படைகிறேன், ஏனென்றால் அவ்வாறு பொறுப்பை அல்லாஹ் விடம் ஒப்படைத்த மூஸாநபி(அலை)அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்,
فَوَقٰٮهُ اللّٰهُ سَيِّاٰتِ مَا مَكَرُوْا
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான்.
(அல்குர்ஆன் : 40:45)
#நோய்வாய்பட்டு துன்புறும் ஒருவன்
அய்யூப் நபி(அலை)அவர்களின்
اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
#ரப்பி)இன்னீ மஸ்ஸனியல் ளுர்ரு வ அன்த அர்ஹமர்ராஹிமீன்
“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”
(அல்குர்ஆன் : 21:83)
என்ற பிரார்த்தனையை அல்லாஹ் விடம் இறைஞ்சாமல் இருப்பதை எண்ணி வியப்படைகிறேன்,
ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்,
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ و مِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 21:84)
------ عالج نفسك بالقران
என்ற நூலிலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:
Post a Comment