﴿ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللهِ عَلَيْكُمْ ﴾
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை நினைவு கூறுங்கள்.35:3
--------
இந்த வசனம் அல்லாஹ் நமக்களித்துள்ள கணக்கிலடங்காத அருட்பேறுகளை எண்ணிப்பார்த்து அவனை புகழ்வதையும்,அவனுக்கு நன்றி செலுத்துவதையும் அல்லாஹ் விரும்புகிறான்"என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நண்பர்கள் இருவர் சந்திக்கும் போது தங்களுக்கேற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார்களே தவிர அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள நிஃமத்துகளைப் பற்றிபேசுவதில்லை.
சிரமங்களைப் பற்றியே சிந்திப்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
انْظُرْ إِلَى مَنْ هُوَ دُونَكَ ، وَلا تَنْظُرْ إِلَى مَنْ هُوَ فَوْقَكَ ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لا تَزْدَرِيَ نِعْمَةَ اللَّهِ عِنْدَكَ
உன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவனைப் பார். உன்னை விட மேலான நிலைமையில் இருப்பவனைப் பார்க்காதே!
அந்தப் பார்வைதான் உன்னிடம் இருக்கும் அல்லாஹ் அளித்த வளங்களை லேசாக கருதாமலிருக்கும் நன்மையை விளைவிக்கும்." என்றார்கள் நபி பெருமான் صلي الله عليه و سلمஅவர்கள்
(ரியாளுஸ்ஸாலிஹீன்)
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென அகமகிழ்க" என்றான் ஒரு தமிழ் புலவன்.
நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பொழுது அல்லாஹ் விடம் ஏற்கனவே அவன் அளித்த அருட்கொடைகளை நினைத்து நன்றிசெலுத்திவிட்டு பின் நம்முடையே தேவைகளை அல்லாஹ் வின் முன் வைத்தால் நிச்சயம் அல்லாஹ் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவான்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

No comments:
Post a Comment