#இருபத்துஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சிறப்பு நிகழ்வு.
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்விற்குப் பின் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இறுக்கமான மனநிலை நிலவியது.
#சிதம்பரம் பல்வேறு சமுதாயங்கள் இரண்டற கலந்துவாழும் நகரம். சமுதாய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக விளங்கும் நகரம்.
தொடர்ந்து முஸ்லிம்களுக்கும் பிற சமுதாயத்திற்குமிடையே நிகழும் நல்லுறவை மேம்படுத்தவும் இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேயத்தை அனைவரிடமும் கொண்டு செல்லும் நலத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கோடு சிதம்பர நகர அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாஅத்தின் முன்னிலையில் 16/03/1998ல்
#சிதம்பரம்_நகர_இஸ்லாமிய_ஐக்கியபேரவை உருவாக்கப்பட்டது.
அதன் தலைவராக
மர்ஹும். டவுன் நாயிப் காஜி. அப்துஸ்ஸத்தார் ஸாஹிப் அவர்களும்
செயலாளராக,
மவ்லவீ. கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயியும்
பொருளாலராக,
கவிஞர். E.மஹ்பூப் ஹுஸைன் (ஜவ்ஹர்)
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேரவையின் முதல் நிகழ்வாக, 17/07/1998ல் அனைத்து மக்களுக்கும் அறிமுகமான #மீலாதுநபி விடுமுறை நாள் வந்தது.
அந்நாளை #எல்லோருக்கும்சொந்தம்நபிகள்நாயகம் ﷺ என்ற தலைப்பில் அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தும் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிவெடுத்து அந்நாளில் நோயாளிகள், ஆதரவற்ற முதியோர்கள்
மாற்றுத்திறனாளி கள்
போன்றவர்களைப் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதென்று முடிவெடுத்து செயல் படுத்த முனைந்தோம்
மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது
அந்த சேவை 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது
28/09/23 அன்று
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை உன் நோயாளிகள் 200 பேருக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது. அன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
மாரியப்ப நகர் #அன்பகம்முதியோர் இல்லம்,
இண்டேன் கேஸ் பின்புறம் அமைந்துள்ள #CCWE #மனவளர்ச்சிகுன்றியமாணவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிரட், பழங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹபூப் உசேன் தலைமை வகித்தார். மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி, ஃபைசல் மஹால் முஹம்மது யாசீன் ஆசியன் ஷாப்பிங் மால் இக்பால், நவாப் பள்ளி ஜாக்கீர் உசேன், சையத் மொய்தீன், மிலன் ரெடிமேட் முஹம்மது எஹ்யா, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்கர் அலி பட்டேல், கண்காணிப்பாளர் முஹம்மது அலிகான், லால்பேட்டை ஏ.எஸ்.அஹமது, எள்ளேரி ஆரிஃபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை #மருத்துவர் #சிவகாமி, தலைமை செவிலியர் #இமாக்குலேட், முஹம்மது ஜக்கரியா,பி.அப்துல்ரஹ்மான், முஸ்தபா, முஸம்மில் உசேன், முதஸ்ஸிர் உசேன், மௌலவி ஹாபிள் ஷாஹுல் ஹமீது, இமாம் ஹஜ் முஹம்மது ரப்பானி, தைய்யுப் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment