ஒரு மஸ்ஜித் இமாம் எப்படி இருக்கவேண்டும்?
----
இமாமத் என்பது ஒரு பதவி அல்ல அது ஒரு பொறுப்பு
இப்பொழுது எல்லோருமே -ஆலிம் பட்டம் பெறாதவர்களும் இமாமாக நின்று தொழவைக்கிறார்கள்
அது தவறல்ல
ஆனால் தொழுகையின் பர்ளு,வாஜிப் களை அறிந்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனை.
ஆனால் ஒரு மஸ்ஜிதின் இமாமாக இருப்பவருக்கு கூடுதல் பொறுப்புண்டு.
அவர் தொழுகை கூடினால்தான் அவரை பின்பற்றி தொழுபவர்களின் தொழுகையும் கூடும். அவரின் தொழுகை நிறைவேறவில்லை என்றால் அனைவரின் தொழுகையும் நிறை வேறாமல் போன பாவம் அவரைச் சேரும்.
எனவே, அவர் தன் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்,சிறுநீர் கழிக்கும் போதோ,அதன் பின்னரோ ஓரிரு துளிகள் ஆடையில் படாமல் கவனமாக இருக்கவேண்டும் ,
வுழுவும் பரிபூரணமான முறையில் கவனமுடன் செய்யவேண்டும்.
இந்த சட்டம் தொழுபவர்கள் அனைவருக்குமானது என்றாலும் தனிமனித தவறு அவனுடன் போகும்.
ஒரு இமாம் செய்யும் தவறு அவரைப் பின்பற்றித் தொழும் அனைவரையும் பாதிக்கும்.
நான் லால்பேட்டையில் 1964-67ல் ஓதும்போது சோழமாதேவியிலிருந்து ஒருவர் பத்து கேள்விகள் எழுதி இதற்கு பத்வா கொடுங்கள் என கேட்டிருந்தார்.
அத்தனை கேள்வியும் இமாமைப் பற்றியே இருந்தது
பாவம் அந்த இமாமின் மீது அவருக்கு என்ன கோபமோ?
அதில் இரண்டு கேள்விகள் நினைவில் இருக்கிறது.
ஓன்று,எங்கள் இமாம் மொட்டைஅடிக்காமல் கிராப் வைத்திருக்கிறார் இது கூடுமா?
இரண்டு ,இமாம் சிறுநீர் கழித்துவிட்டு டேலா கட்டி உபயோகிக்காமல் வெறும் தண்ணீரை மட்டுமே உபயோகிக்கிறார் இது கூடுமா?
அக்காலத்தில் மண்ணைக் குழைத்து வட்டவட்ட மாக வரட்டி தட்டுவது போல் செய்து வைத்திருப்பார்கள்
அது சிறு துளிகளை உறுஞ்சிவிடும்.
வயோதிகர்கள் அந்த டேலக்கட்டியை வைத்துக் கொண்டு சிறுது நேரம் எழுந்து நின்றோ, சிறிது நேரம் நடந்த பின்தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள்.
இதைப் போன்று அந்த இமாம் செய்வதில்லை என்பதே குற்றச்சாட்டு.
டேலா கட்டியை கட்டாயம் உபயோகிக்கவேண்டிய அவசியமில்லை.
எனினும் இமாம் பேணுதலுக்காக இரண்டையும் உபயோகிப்பது விருப்பத் தக்கது என பதில் தரப்பட்டது.
இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் பொதுமக்கள் இமாமுடைய செயல்களை கூர்மையாக அவதானிக்கிறார்கள்.
இமாமிடம் என்ன குறை இருக்கிறது என்று ஆராய்வதற்காகவே ஒவ்வொரு மஹல்லா விலும் இரண்டு பேர் இருப்பார்கள்.
இமாம்கள் அல்லாஹ்விற்கு பயந்துதான்
தொழுக வைப்பதற்கு தயாராகிறார்கள்.
இமாம் என்ற பொறுப்பை பொது மக்கள் பலரும் அலட்சிமாக நினைக்கிறார்கள்.
அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது இமாம்களுக்குத்தான் தெரியும்.
குறிப்பு :நான் இமாமாக பணியற்றியது இல்லை.
வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் தொண்டியில் ஏழு வக்துகள் தொடர்ச்சியாக இமாமத் செய்துள்ளேன்.
அதன்பின் அந்தப் பக்கமே போனதில்லை.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:
Post a Comment