ஒரு முறை லால்பேட்டை மதரஸாவில் ஒரு மாணவர் திருடிவிட்டார்
மதரஸா நிர்வாகிகளில் ஒருவர் ஓதரபிள்ளை திருடானாக இருக்கிறாரே என்றார்
அதற்கு எங்கள் உஸ்தாத் அமானி ஹஜரத்(ரஹ்) அவர்கள் ஓதரபிள்ளை திருடனாக இருக்கிறார் எனச் சொல்லாதீங்க திருடுபவன் ஓத வந்திருக்கிறான் எனச்சொல்லுங்கள் எனறார்கள்.
அவ்வாறே மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுபவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களே எனச் சொல்லாதீர்கள். கீழ்த்தரமான குணமுடையவர்கள் அறிவுரை சொல்லும் இடத்திற்கு வந்துவிட்டார்களே என வேதனைப் படுங்கள்.
டாக்டர். மு.வரதாசன். அவர்கள் ஒரு நாவலில் "படித்தவர்கள் பாவம் செய்கிறார்களே
அவர்களின் படிப்பு அவர்களுக்கு பயன் தரவில்லையா?" என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்வார்:
"படிப்பு என்பது ஒளி தரும் விளக்கைப் போன்றது. விளக்கு இருட்டான ஒரு அறையில் இருக்கும் குப்பைகளை காட்டுமே தவிர, விளக்கே குப்பைகளை நீக்காது. படிப்பும் அப்படித்தான்,கற்ற கல்வி நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை சுட்டிக்காட்டும் நாம் தான் அழுக்கை நீக்கவேண்டும்"
எனவே படித்துவிட்டகாரணத்தினாலேயே அவர்கள் பரிசுத்தமானவர்களாக மாட்டார்கள்
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பயீ

No comments:
Post a Comment