சகோதரர்களுக்காக துஆ செய்யுங்கள்
உங்கள் தேவையும் நிறைவேறும்
---------------------=--=----=============------
عْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ۗ وَاللَّهُ
يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ ﴿47:19﴾
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - மேலும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ﴿59:10﴾
59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:,
"தன் கண்முன் இல்லாத தன் சகோதரருக்காக ஒருவர் செய்யும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். துஆ செய்பவரின் தலைக்கு மேல் ஒரு மலக்கு நியமிக்கப்படுவார்,தன் சகோதரருக்காக நல்லவற்றை கேட்கும் பொழுதெல்லாம் அம்மலக்கு உனக்கு அதே போன்று கிடைக்கட்டும் என்று துஆ செய்வார்"
நூல் முஸ்லிம்
இந்த ஹதீஸிற்கு விரிவுரை எழுதிய இமாம் நவவி குறிப்பிடுகிறார்கள்.
சில பெரியார்கள் தங்களுக்கு ஒரு தேவை ஏற்படும் போது அதே தேவையுடைய ஒரு சகோதரருக்காக துஆ செய்வார்கள் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் இவருடைய தேவையும் நிறை வேறிவிடும்
::_கணியூர் இஸ்மாயில் நாஜி

No comments:
Post a Comment