Thursday, November 2, 2017

நற்செயலே நல்ல தஃவா

ஆயிரம் சொற்பொழிவுகள் நிகழ்த்தமுடியாத மனமாற்றத்தை ஒரு முஸ்லிமின் நற்செயல்கள் நிகழ்த்தும்
*******************************************
ஒரு முஸ்லிமா தன் வீட்டருகே இருந்த ஒரு கிருஸ்துவ பெண் உடல் நலம் குன்றியிருப்பதை அறிந்து அவரை காணச் சென்றார். படுத்த படுகையாக இருந்த அவர் அருகே சென்று எங்களது அருள்மறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஒதவா?
நாங்கள் உடல்நலம் குறைவின் போது அவற்றை ஓதி குணமடைவோம் என்றார்.
  அந்நோயாளி எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் தர முடியுமா? என்றார்.
    படுத்தபடியே தண்ணீர் அருந்திய பின் என்னை தூக்கி உட்கார வையுங்கள் என்றவர்
"சாப்பிட்டு இரண்டு நாளாகிறது,உணவு ஏதேனும் கிடைக்குமா?"என்றார்.
பதறிபோன முஸ்லிமா  ஓடோடி வீட்டிற்குச்சென்று நோயாளிகள் உண்ணும் உணவை தயாரித்து எடுத்துவந்து அவருக்கு
பரிமாறினார்.
     அவர் சற்று தெளிவடைந்தபின் இப்பொழுது குர்ஆன் வசனங்களை ஓதவா என முஸ்லிமா கேட்டார்.
     அந்த கிருஸ்துவ பெண்மனி சொன்னார்:
#தங்கையே! உன் பண்பான நடவடிக்கைகளை கண்ட பின்னும் உன்னை பக்குவபடுத்திய #குர்ஆனின் மீது எனக்கு #நம்பிக்கை வராமல் இருக்குமா?

   #ஆயிரம்_சொற்பொழிவுகள்_ஏற்படுத்தாத_
#மனமாற்றத்தை
#ஒருமுஸ்லிமின்_நன்நடத்தை_ஏற்படுத்தும் .
    கவிஞர் அல்லாமா,இக்பால்  ஒருமுறை சொன்னார்:
இஸ்லாமிய வரலாற்றை நன்கு படித்துப்பாருங்கள்
அறிவார்ந்த விவாதங்களால்,சொற்பொழிவுகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற வர்களை விட முஸ்லிம்களின் நற்செயல்களால் மனமாற்றம் அடைந்தவர்கள் தான் அதிகம்.
--------கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி

No comments:

Post a Comment