சிலர் உங்களை தக்வாதாரி என்பார்கள்,சிலர் படுபாவி என்பார்கள்.
சிலர் குணக்குன்று என்பார்கள்,சிலர் அப்படி சொல்வார்கள்,சிலர் இப்படி சொல்வார்கள்.
ஆனால் மற்றவர்களை விட உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.
உங்களுடைய இரகசியத்தை உங்களை அன்றி மற்றொருவன் அறிந்திருக்கிறான் என்றால் அது அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
உங்களுக்கும் அல்லாஹ் விற்குமிடையை உள்ள உறவை இரகசியமாக -நேர்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
பாராட்டுக்கள்உங்களை
கர்வமடையச் செய்திடவேண்டாம்.
இகழ்ச்சிகள் உங்களை
சோகத்தில் ஆழ்த்திடவேண்டாம்.
அல்லாஹ் சொல்கிறான்:
بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ
தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்து கொள்வான்.
(அல்குர்ஆன் : 75:14)
--------அரபியிலிருந்து தமிழில்
கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:
Post a Comment