நீங்கள் எதையாவது மறந்து விட்டால் அல்லாஹ்வை நினைவுறுங்கள்.உங்களுக்கு மறந்தது நினைவிற்கு வந்துவிடும்
ۚ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ
நீங்கள் மறந்து விட்டால் அல்லாஹ்வை நினையுங்கள் என்ற வசனத்திற்கு இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் விரிவுரையில் சொல்கிறார்கள்,
"ஏதாவது பிரச்சனையில் எனது சிந்தனை தடைபட்டு அதற்கான விளக்கம் கிடைக்காவிட்டால் ஆயிரம் முறை இஸ்திஃபார் செய்வேன் அல்லாஹ் எனது உள்ளத்தில் அதற்கான தீர்வை திறந்துவிடுவான"்
லால்பேட்டை மன்பவுல் அன்வார் கலாசாலையில் நான் ஷைகுல்வரா அப்துல்ஜமீல் ஹஜ்ரத் அவர்களிடம் அரபு இலக்கண இலக்கியம் தொடர்பான முக்தஸருல் ம ஆனி என்ற நூலை ஒதினேன் அந்த பாடம் விளங்குவதற்கு கடினமாக இருக்கும் சில நேரங்களில் ஹஜரத் அவர்களிடம் நான் சந்தேகம் கேட்பேன் அவர்கள் இதற்கான விடையை நாளை சொல்கிறேன் என்பார்கள்
மறுநாள் பாடத்தை துவக்குமுன் நீங்கள் நேற்று என்ன கேட்டீர்கள் என்பார்கள்
(கவனிக்க ;ஹஜரத் எவ்வளவு சிறிய வயது மாணவனாக இருந்தாலும் வா போ என்றோ வாடா போடா என்றோ ஒருமையில் அழைக்க மாட்டார்கள்)
பின் அதற்கான விளக்கத்தைத் தருவார்கள் ஒரிரு முறை இதனைக் கவனித்த நான் ஹஜரத் அவர்களிடம் நாங்கள் கேட்ட கேள்விக்கு முதல் நாள் தெளிவு படுத்தாத நீங்கள் மறுநாள் எப்படி சொல்கிறீர்கள் எனக்கேட்டேன்
ஹஜரத் அவர்கள் சொன்னார்கள்;
நீங்கள் கேட்கும் போது அதற்கான விடை எனக்கு தெரியாது
நான் தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு திக்ர் செய்து விட்டு கிதாபை விரித்து அந்த பகுதியை பார்ப்பேன் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையை அல்லாஹ் என் உள்ளத்தில் உதிக்க வைப்பான்
சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ் எப்படிப்பட்ட மகானை அல்லாஹ் ஆசியராகக் கொடுத்தான்
அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக!
நாமும் எதையாவது மறந்து விட்டால் இஸ்திஃபார் செய்வோம் இன்ஷா அல்லாஹ்
------மீள் பதிவு கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:
Post a Comment