லைத்துல்கத்ர் இரவும்
அரபா நாளும்
---------------------===-==--------------*****
இரவுகளில் சிறந்தது லைத்துல் கத்ர்
நாட்களில் சிறந்தது அரபா நாள்
லைத்துல் கத்ர் என்று ஏற்படும் என்பதை
அல்லாஹ் நமக்கு குறிப்பாக அறிவிக்கவில்லை.
அரபாநாள் துல்ஹஜ்பிறை 9 அன்று என
நமக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
லைத்துல் கத்ர் பிந்தைய இரவில் அல்லாஹ்
முதல் வானத்தில் இறங்கி அருள்புரிகிறான்.
அரபா நாளில் அல்லாஹ் பகல் முழுவதும்
அருள் மழை பொழிகிறான்.
அரபா நாளன்று கேட்கப்படும் துஆக்கள்
உடனே ஒப்புக்கொள்ளப்படும் எனபதால்
பல பெரியார்கள் தங்களின் முக்கிய தேவைகளை அன்றைய தினம் கேட்பதற்காக
ஒத்திவைப்பார்களாம்.
அத்தகைய சிறப்பான நந்நாளில் நாம் நோன்பு நோற்போம் .
திக்ரு ,தஸ்பீஹ் இஸ்திஃபார் என பகல் பொழுதை பயனுள்ளதாக்குவோம்
குறைப்பாக புறம் பேசுதல் கோள் மூட்டுதல் அவதூறு பரத்தல் என என எந்த ஒரு பாவத்தையும் செய்யாமல் இருப்போம்
அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாக!
ஆமீன்.

No comments:
Post a Comment