மற்றவரை எப்படி நடத்துகிறாயோ
அப்படியே நீயும் நடத்தப்படுவாய்
*******************************
அவன் ஒரு அரிசி வியாபாரி.
ஒருநாள் மதிய வேளையில் வாடிக்கையாளர்கள் யாருமில்லாத நேரத்தில் ஒரு பெண் நல்ல அரிசி இருக்கிறதா ? எனக்கேட்டு வந்தாள்.
அவளின் முக அழகு அவனை கவர்ந்ததால் அவள் கையைப் பிடித்து உள்ளே வா நல்ல உயர்தரமான அரிசியைக் காட்டுகிறேன"் என்றான்.
வெடுக்கென தன் கையை இழுத்த அப்பெண் வேகமாக அவ்விடத்திலிருந்து நகர்ந்தாள்.
அடுத்தடுத்து வாடிக்கையாளர்கள் வந்ததில் அந்நிகழ்வினை மறந்துவிட்டான்.
இரவு அவன் இல்லம் திரும்பிய பொழுது அவனின் இளம் மனைவி பதட்டத்துடன் இருப்பதை கண்டான்.
காரணம் கேட்டான்,
மனைவி தயங்கியவாறே,
"தினந்தோறும் மாலை நேரத்தில் வாலிபன் ஒருவன் பால் கொண்டு வருவான்.அவன் அழைப்பு மணி அடிப்பான் நான் கதவை சிறிதளவு திறந்து கையை வெளியே நீட்டி பாத்திரத்தை தரையில் வைப்பேன் அவன் பாலை ஊற்றிய பின் மீண்டும் கதவை சிறிதளவு திறந்து பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன்.
இதுதான் வழக்கம்.
இன்றும் அவ்வாறே அவன் அழைப்பு மணி அடித்ததும் கதவை சிறிதளவு திறந்து பாத்திரத்தை வைப்பதற்காக கையை வெளியே நீட்டினேன்
வழமைக்கு மாறாக திடீரென என் கையை பிடித்திழுத்தான் பதறிப்போன நான் வேகமாக என் கையை இழுத்துக்கொண்டு கதவை தாழிட்டு விட்டேன். அதிலிருந்து ஒரே பதட்டமாக இருக்கிறது"என்றாள்.
அதைக்கேட்டவுடன் யாரோ சுளீர் என சாட்டையால் அவனை அடித்தைப் போல் அவன் உடல் சிலிர்த்தது.
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்"
என்பது இதுதானோ?
அரபி சிறுகதையை சிறு மாற்றத்துடன் தமிழில்
#கணியூர்இஸ்மாயீல்நாஜி
பாஜில்மன்பஈ,தேவ்பந்தி
-----------
Thursday, November 9, 2017
எப்படி நடத்துகிறாயோ அப்படியே நடத்தாட்டப்படுவாய்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment