குர்ஆனின் வார்த்தைகள் இறைவனுடையதா?
முஹம்மது நபி(ஸல்) அவர்களுடையதா?
------அல்லாமா இக்பால் அவர்களிடம் கேட்கப்பட்ட
கேள்வி.
******************************************************
லாஹூர் கிருத்துவ கல்லூரி யில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு கவிஞர் அல்லாமா இக்பால் அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் கவிஞரை தனியே அழைத்து என்னுடைய கேள்விக்கு அறிவுபூர்வமாக பதில் சொல்லுங்கள் என ஆரம்பித்து ,
#உங்கள் முஹம்மத் நபிக்கு உங்கள் இறைவன் குர்ஆனின் கருத்துகளை அவர்களின் உள்ளத்தில் உதிக்கச்செய்து அக்கருத்திற்கு பொருத்தமான வார்த்தைகளை முஹம்மதுநபி அமைத்துக்கொண்டார்களா?
இல்லை,கருத்துகளும்,அரபிவார்த்தைகளும் இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதா?"எனக்கேட்டார்.
சற்றும் யோசிக்காமல், "கருத்தும்,வார்த்தைகளும்,வாக்கியங்களும் இறைவனால் நபியவர்களுக்கு அருளப்பட்டவை என பதிலளித்தார் கவிஞர்.
வியப்புடன் அவரைப் பார்த்த கல்லூரி முதல்வர் "என்ன கவிஞரே! நீங்கள் எவ்வளவு பெரிய அறிஞர்,கவிஞர்,சிந்தனையாளர் அப்படிப்பட்ட நீங்கள் அடிப்படை ஆதராமில்லாத ஒரு செய்தியை எப்படி நம்புகிறீர்?
அவ்வாறு நம்புவதற்கு என்ன ஆதாரம்? எனக்கேட்டார்.
எனது கவிதைகள்தான் ஆதாரம் என்ற கவிஞர் " நான் ஒரு மனிதன்,கவிஞன் எனக்கு கவிதை எழுதும் மனநிலை ஏற்படும் தருணங்களில் என் உள்ளத்தில் கவிதைக்கான கருவும்,அதை ஆழமாக வெளிப்படுத்தும் சொற்களும் வெள்ளமென பெருகும்
நான் அவைகளை எழுத்தில் கொண்டு வருவேன்.எழுதி முடித்தபின் கவிதையின் சொற்களில் ஏதேனும் மாற்றம் செய்யலாமா? என பல முறை முயற்சிசெய்திருக்கிறேன்.ஆனால் முதலில் எனதுள்ளத்தில் ஏற்பட்ட அந்த சொல்லிற்கிணையான வேறு சொல்லை என்னால் அந்த இடத்தில் அமைக்க இயலவில்லை. அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன் இதுதான் இறைவன் விரும்பும் சொல் என.
என்னைப் போன்ற ஒரு கவிஞனின் உள்ளத்திலேயே ஒரு கவிதைக்கான வார்த்தைகளை-சொற்களை இறைவன் தேர்ந்தெடுத்து அவன் உள்ளத்தில் உதிக்கச் செய்யும் பொழுது
மக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவன் அனுப்பிய இறுதி தூதர் முஹம்மது நபி ﷺ அவர்களுக்கு அருளப்பட்ட இறுதி வேதமான குர்ஆனின் வார்த்தைகள் மட்டும் இறைவனின் வார்த்தைகளாக இல்லாமலிருக்குமா?"
என்றார்கள் அல்லாமா இக்பால்(ரஹ்)
கல்லூரி முதல்வர் வாயடைத்துப் போய் நின்றார்.
------------Islamic Movement(urdu) Fortnighty April,May 1984
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ ,தேவ்பந்தி
------

No comments:
Post a Comment