படித்ததும் மறைந்த என் அன்னையை எண்ணி கண் கலங்கினேன்.
-------------------------------------------------------
தாபீன்களில் ஒருவர் உடல்
நலமின்றியிருந்தார். அவரை பார்க்க அவரின் அன்னை வருவதை அறிந்த அவர் நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு தான் நன்றாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அன்னையை வரவேற்றார்.
அன்னை சென்ற பின் உடல் நிலை மோசமடைந்து மயங்கிவிழுந்துவிட்டார்.
அவர் தெளிவுபெற்றதும் அன்னையிடம் தன் உடல் நிலையை மறைத்ததைப் பற்றி அவரிடம் வினவப்பட்டது.
அந்த நபித்தோழர்களின் தோழர் சொன்னார்;
தன் குழந்தைகளின் வேதனையான சிறு முனகல் கூட அன்னையின் உள்ளத்தை வேதனைப்படுத்தும்
அதை நான் விரும்பவில்லை என்றார்.
உங்கள் பெற்றோர் நீங்கள் விரும்பியதை உங்களுக்குக் கொடுக்காமல் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் தங்களிடம் இருந்ததையெல்லாம் உங்களுக்கு வாரி வழங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இறைவா!எங்களின் மீது அவர்கள் இரக்கம் காட்டியது போன்று அவர்கள் இருவரின் மீதும் இரக்கம் காட்டுவாயாக!

No comments:
Post a Comment