Wednesday, February 22, 2017

ஊழல்வாதிகள், அராஜகம் செய்வோர் நன்றாக இருக்கிறார்களே?

ஊழல்வாதிகள், அராஜகசெய்வோர்
நன்றாக இருக்கிறார்களே?
----------------------------------------------
சகோதரர் Siraj Ul Hasan இறைவன் எதுவும் செய்வதில்லையா? என்ற தலைப்பி்ல் தீக்கதிர் ஆசிரியர் //கடவுள் எதுவும் செய்வதில்லை எனவேதான் கடவுள் பெயரால் தைரியமாக உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்//என்ற விமர்சனத்திற்கு விளக்கம் கொடுத்திருந்தார். இதே கேள்வியை நான் எனது உஸ்தாத் அவர்களிடம்
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ 
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்;
(அல்குர்ஆன் : 20:124)
என அல்லாஹ் சொல்கிறான், , ஆனால் ஊழல்வாதிகள், கந்து வட்டி வாங்கி மக்களை கசக்கிப் பிழிவோர் போன்றோர் நன்றாகத்தானே இருக்கிறார்கள் எனக்கேட்டேன்.
ஒரு நூலின் பெயரைக்குறிப் பிட்டு இதில் இதற்கான பதில் இருக்கிறது
எடுத்துப் படித்துப் பார் என்றார்கள். அதில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம்
நெருக்கடியான வாழ்க்கை இம்மையிலும்,மறுமையிலும் ஏற்படும் .
இம்மையில் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்டிருந்தாலும் உள்ளம் பெரும் நெருக்கடியில்இருக்கும் . மனதில் நிம்மதி இல்லாமை, பரபரப்பு ,என்னவாகுமோ எனும் பதைபதைப்பு, குடும்பத்தில் குழப்பம் ,குடும்ப வாழ்க்கை சிதறுண்டு போதல், மக்களின் முன் சிறுமைப்படுத்தப்படுதல், வெகு ஜன மக்களின் வெறுப்பு போன்றவை இறைவன் கொடுக்கும் தண்டனையாகும்.
இதனன்றி மறுமையிலும் நெருக்கடியான வாழ்க்கை அவர்களுக்கு காத்திருக்கிறது.
இ்ன்று நாம் கடந்த 50 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் என்று மக்களால் அடையாளப்படு்த்தப்படும் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை பாருங்கள். அவர்களில் எத்தனை பேர் மனநிம்மதியுடன் இருக்கிறார்கள். முதலில் செல்வத்திற்கு பின்னால் ஓடுகிறார்கள். பின் அந்த செல்வத்தை காக்க போராடுகிறார்கள். தனக்கு ஒரு பதவி இருந்தால் தான் பாதுகாப்பு என பணத்தை வைத்தே பதவியை பெற முயற்ச்சிக்கிறார்கள்.
ஒரு ஏழை தன்குடிசையிலே பெறுகின்ற குதூகலம் கூட, அவர்கள் மாட மாளிகையில் இருந்தாலும் கிடைப்பதில்லை.
இதை தான் அல்லாஹ் நெருக்கடியான வாழ்க்கை என்கிறான்.
இன்று உயிரோடு இருக்கின்ற, மறைந்த அரசியல்வாதிகள், ஊழல் செய்தவர்கள், மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள், அவர்களின் இறுதி முடிவை பார்த்தாலே இறைவன் அவர்களை எப்படி தண்டித்திருக்கிறான் என்று தெரியும்.

No comments:

Post a Comment