மறக்க வியலா பெருநாள்
----------------------------------------------------
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் ஊரான கணியூரில் திடலில் தான் இரு பெருநாள் தொழுகையும் நடக்கும்
ஏறக்குறைய மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமராவாதி ஆற்றின் கரையில் இருக்கிறது ஈதுகாஹ் மைதானம். அப்பொழுதெல்லாம் ஒற்றைவழி வரப்பு பாதைதான்.சைக்கிளில் கூட செல்லமுடியாது
நடந்தே குழந்தைகளும்,வயோதிகர்களும் தக்பீர் சொல்லிக்கொண்டு வருவார்கள்.
ஒற்றையடிபாதையில் ஆற்றில் குளித்துவிட்டு எதிரே வரும் பிராமண சமுதாய பெண்கள் ஊர்வலம் போகின்றவரை வரப்பில் ஒரமாக பொறுமையாக காத்திருப்பர்
அப்பொழுது ஈத்காஹ் மைதானம் அருகே இருக்கும் கோயிலுக்குச் சொந்தம் என வழக்கு நடந்து கொண்டிருந்தது
முஸ்லிம்களின் சார்பாக வழக்கை நடத்தியவர் மறைந்த முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாதிக் பாட்சா அவர்கள்
1967ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வருவதற்கு முன் உடுமலையில் சின்ன ஒரு அறையில் இருந்து வழக்கறிஞராக பணியாற்றினார்.
ஒரு முறை என் தந்தை யாக்கூப் வாத்தியார் அவர்கள் வழக்கு தொடர்பாக பேச சென்றபோது நானும் உடன் இருந்தேன்
பல ஆண்டுகள் நடந்த அந்த வழக்கு சாதிக்பாட்சா அவர்கள் அமைச்சரான பின் முடிவிற்கு வந்தது
நாங்கள் கடந்து செல்லும் வயல்கள் பெறும் பகுதி பிராமண சமுதாயத்திற்கு சொந்தம்
குறிப்பாக நான் படித்த வெங்கட கிருஷ்னா உயர் நிலைப் பள்ளிக்கு சொந்தம். வருடம் ஒரு முறை விவாசாய பாடத்தின் ஒரு பகுதியாக எங்கள் வகுப்பு மாணவர்களை அழைத்துச் சென்று செய்முறை பயிற்சியாக நாற்று நட சொல்வார்கள்.
இருபாலரும் படிக்கும் அந்த பள்ளியில் அந்த நாளை ஆவலுடன் எதிர் பார்ப்போம்
வழக்கு நடந்த நாட்களிலும் சரி. அதற்குப்பின்னும் சரி நமக்கும் சகோதர சமுதாயத்திற்கு மிடையே எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை
நபிவழியின் படி போகும் போது ஒரு வழியாகவும் திரும்பும் போது ஆற்றங்கரையின் மறு பாதையில் வழியில் இருக்கும் கப்ருஸ்தானுக்குச் சென்று ஜியாரத் செய்து வீடு திரும்பு வோம்
அது ஒரு நிலாக் காலம்.
என் பெயருடன் இணைந்த கணியூரின் கடந்த கால நினைவுகள் மலரும் நினைவுகளாக என்றும் இதயத்தில் இருக்கும்
புகைப்பட உதவி; Kaniyur S Rahman
e----------------------------------------------------

No comments:
Post a Comment