அஷ்ஷைக் முஹம்மது ராத்திப் அந்நாபிலிஸி அவர்களின் பதிவு
+++++++++++
ஒரு உண்மை சம்பவம் நாம் பெறவேண்டிய பாடம்
------------------------
கனடாவில் ரொட்டியைத் திருடியதாக முதியவர் ஒருவர் நீதிபதியிடம் அழைத்து வரப்பட்டார்.
திருடியதை ஒப்புக் கொண்ட முதியவர் பசியினால் நான் இறந்துவிடுவோனோ எனப் பயந்து ரொட்டியை திருடி உண்டேன் என்றார் உருக்கமாக.
அவருடைய பரிதாப நிலைமையும் உண்மையை ஒப்புக் கொண்டதும் நீதிபதியை நெகிழ வைத்தது.
"நம்நாட்டின் குற்றவியல் சட்டப்படி நீங்கள் திருடியது குற்றம் எனவே அதற்காக பத்து டாலர் அபராதம் விதிக்கிறேன்.
ஆனால் ரொட்டி வாங்கக்கூட பணம் இல்லாத நீங்கள் எங்கே அபராதத்தைச் செலுத்தப் போகிறீர்?
உங்களுக்காக அந்த அபராதத்தை நானே செலுத்துகிறேன்"
என்றவர் அவையிலுள்ளவர்கள் முன்னிலையேயே தனது சட்டப்பையிலிருந்து பத்து டாலரை எடுத்து பதிவாளரிடம் கொடுத்து அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு கூறியவர் அந்த முதியவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பின்பு அங்கே அவையில் அமர்ந்திருவர்களை நோக்கி
"இந்த முதியவர் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் வாழும் சமுதாயமான உங்களுக்கும் பொறுப்பிருக்கிறது
எனவே தார்மீக அடிப்படையில் நீங்களும் பத்து டாலர் அவருக்கு வழங்கவேண்டும் என்றார்.
கூடியிருந்தவர்களிடமிருந்து 490 டாலர் வசூலானது. அதை அந்த முதியவரிடம் வழங்கினார் நீதிபதி.
#ஷைக்_நாபிலிஸி சொல்கிறார்
இந்த நீதிபதியின் பார்வை இஸ்லாம் வழியுறுத்தும் பார்வை.
இந்த சம்பவத்தைக் கேள்விப் பட்டபோது எனக்கு ஷைக் ஷஃரானி(ரஹ்) அவர்கள் சொன்னது நினைவிற்கு வந்தது,
#முஸ்லிம்கள் வாழும் ஊரில் ஒரு முஸ்லிம் பசியால் இறந்தால் அந்த ஊரிலுள்ள ஏதோ ஒரு செல்வந்தன் இறந்தவருக்குச் சேரவேண்டிய பங்கை திருடியிருக்கிறான் என்று பொருள்"
_அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி
--------கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி

No comments:
Post a Comment