Tuesday, January 27, 2009

சிதம்பரம் தாலுக்கா ஐக்கியஜமாத் உதயம்

கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதாரத்தில் இஸ்லாமிய சமூகம் மேம்பாடு அடையும் நோக்குடன் கடலூர் மாவட்டத்தின் அனைத்து ஜமாத்துகளை ஓருங்கிணைக்கும் முயற்சி நடைப்பெற்றுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் தாலுக்காவில் 29 ஜமாத்துகளின் நிர்வாகிகளின் கூட்டம் 18/01/09ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் இப்ராகிம்நகர் ஜாமியாபள்ளியில் நடைபெற்றது.அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு ஜமாத்தும் தங்களது பிரதி நிதிகளாக மூன்று நபர்களைத்தேர்ந்து எடுப்பது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளின் கூட்டத்தில் தாலூக்கா பொருப்பாளர்களை தேர்ந்தெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 27/01/09 செவ்வாய்கிழமை மதியம் மூன்று மணியளவில் சிதம்பரம் தாலூக்கா பிரதிநிதிகளின் கூட்டம் சிதம்பரம் நவாப்பள்ளியில் நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டை ஐக்கியஜமாத் தலைவர் ஹாஜி யூனுஸ்நாநா தலைமை வகித்தார்.
தாலூக்கா கமிட்டின் தலைவராக சிதம்பரம் மதரஸா ஆலியாவின் தலைவர் மவ்லவி,ஹாஜி, கணியூர் முஹம்மது இஸ்மாயில் நாஜி தலைவராகவும், முபாரக்ஜுவல்லரி மஹ்பூப்ஹுஸைன்(ஜவ்ஹர்)செயலாளராகவும்,பின்னதூர், ஹாஜி இப்ராகிம் பொருளாலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

No comments:

Post a Comment