பிறந்த நாள் ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமா?
---------------------------------------------------------------------------------------------
பிறந்த நாளை மாற்று மத சகோதரர்கள் சிறப்பான நாளாக கருதி அதை கொண்டாடுகிறார்கள் .கொண்டாட்டம் என்றால் அன்றைய நாளை பெருநாளாக கருதி கோவிலுக்கு போவது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது சிறப்பு விருந்து மெழுகுவர்த்தி கொளுத்துவது என கொண்டாடுவார்கள்.இத்தகைய கொண்டாதிற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை ஏனென்றால் இரு பெருநாள்கள் மட்டுமே கொண்டாட தகுதி வாய்ந்தவை.
ஆனால் ஒரு முஸ்லிம் இன்று எனக்கு பிறந்த நாள் இத்துணை ஆண்டுகள் என அல்லாஹ் என்னை வாழ வைத்ததைப் போல
மேலும் பல ஆண்டுகள் வாழ துஆ செய்யுங்கள் என கேட்டாலோ அல்லது மற்றவர்கள் அவருக்காக துஆ செய்தாலோ அது பாவமாகுமா ? என்பது இன்றைய என் கேள்வி
பித் அத் என்பது அல்லாஹ் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் வழியாக பரிபூர்ணப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி அவர்கள் தங்கள் சொல்லால் ,செயலால் ,அங்கிகாரத்தால் அனுமதிக்காத ஒன்றை மார்க்கம் என்ற பெயரால் இதனை செய்வது சுன்னத் என்றோ அல்லாஹ்வின் கூலி கிடைக்குமென்றோ சொன்னால் செய்தால் அதுதான் பித் அத் ஆகுமே தவிர பிறந்த நாள் அன்று நமக்கு ஒரு வயது முடிந்துவிட்டது மேலும் பல ஆண்டுகள் வாழ அருள் புரி அல்லாஹ் என கேட்பதாலோ பிறரிடம் துஆ கேட்க சொல்வதாலோ
பிறர் நமக்கு துஆ செய்தாலோ அது பித் அத் எனும் வரம்புக்குள் வராது என்பது என் கருத்து.
ஹிஜ்ரி புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வது தொடர்பாக மறைந்த சவுதி தலைமை முப்தி அப்துல் அஜீஜ் இப்னு பாஜ் அவர்கள் அந்த நடைமுறை நபிகளார் காலத்திலோ ,நபி தோழர்கள் காலத்திலோ இல்லை இருப்பினும் ஒருவர் இந்த வருடம் முழுவதும் நீங்கள் நன்றாக இருங்கள் என வாழ்த்தும்போது வ லக ஆமீன் உங்களுக்கு அப்படி ஆகட்டும் என்று சொல்வதோ அல்லது அவர் மற்றவர்களுக்கு துஆ செய்வதோ குற்றமில்லை என சொல்கிறார்.
எனவே அல்லாஹ் வும் நபியும் ஹராம் என சொல்லாத ஒன்றை ஹராம் என சொல்பவர்கள் அதற்கான சரியான ஆதாரங்களைக் காட்ட வேண்டும்
இதில் நான் எந்த இடத்தில் தவறு கிறேன் என சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன் இன்ஷாஅல்லாஹ்
இது ஒரு ஆரோக்கியமான விவாதம் குரான் ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்பபவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்
அல்லாஹ் நேரான வழியைக் காட்டுவானாக

No comments:
Post a Comment